Pages - Menu

வெள்ளி, 15 டிசம்பர், 2017

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட இணையக்குழுக் கூட்டம் ...

வணக்கம்!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல் மாவட்ட இணையக்குழுக்  கூட்டம் எதிர்வரும் 16/12/17 (சனிக்கிழமை) முற்பகல் 10.00 மணியளவில் கபிலர்மலை ஒன்றிய மன்றம் அலுவலகத்தில் (வேலூர்-சிவா திரையரங்கு எதிரில்) நடைபெற உள்ளது. 
ஆகவே, இணையதளக்குழு உறுப்பினர்கள் , ஆர்வலர்கள் மற்றும் மன்றப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாது பங்கேற்பீர்!  நன்றி.  
-மெ.சங்கர்,
அமைப்பாளர்-
மாவட்ட இணையக்குழு.

Live Radio Without Earphone...

கீழே உள்ள LINK  ஐ  Click செய்தால் உலக உருண்டை  சுழலும் அதில் பச்சை நிற  புள்ளி  இருக்கும்  அதில் நீங்கள்  விரும்பும்  இடத்தில்  தொட்டால் live Radio without earphone ல்  கேட்க முடியும்...

Click here...

மீண்டும், 'ரேங்கிங்' : சி.பி.எஸ்.இ., அறிமுகம்!


மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில்,
இந்த ஆண்டு முதல், தேசிய அளவில், 'ரேங்கிங்' முறை அறிமுகமாகிறது. 

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவில், அதிக மதிப்பெண் பெறும் மூன்று மாணவர்கள், தேசிய அளவில், முதல் மூன்று, 'ரேங்க்' பெறுவர்.

இந்நிலையில், 2009 முதல், 10ம் வகுப்புக்கு, பொது தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.
அதாவது, சி.சி.இ., எனப்படும், தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டு, பள்ளிகளிலேயே ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டது. அதனால், மாணவர்களுக்கு, 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டு, படிநிலை என்ற, 'கிரேடு' முறை அறிமுகம் ஆனது. இதற்கிடையில், பொது தேர்வு இல்லாததால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தேர்வில் பின்தங்கும் மாணவர்களுக்கும் அதிக மதிப்பெண் வழங்கி, பிளஸ் 1க்கு தேர்ச்சி பெற வைப்பதாக, புகார் எழுந்தது. அதனால், கல்வித் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இது குறித்து, மத்திய அரசின் சார்பில், நிபுணர் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு நடந்தது.ஆய்வு அறிக்கையின்படி, 10ம் வகுப்புக்கு, மீண்டும் தேசிய அளவில் பொது தேர்வு வந்துள்ளது.

 இந்த ஆண்டு, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் மார்ச்சில், பொது தேர்வை எழுத வேண்டும். அதன் முடிவுகள், மே மாதம் வெளியாகும். இந்த முடிவுகளில், மீண்டும் மதிப்பெண் முறையும், தரவரிசை என்ற, 'ரேங்கிங்' முறையும் வர உள்ளது.

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் சேர, வரும் டிசம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்படுகிறது...

 சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வி யில், இளநிலை, முதுநிலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

இதற்கான விண்ணப்ப பதிவு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' வழியாகவும், நேரடியாக பல்கலையின், ஒற்றை சாளர மையம் வழியாகவும் நடக்கிறது. 

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, வரும் டிசம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலையின் பதிவாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். 

சனி, ஞாயிற்று கிழமை களிலும், தொலைநிலை கல்வியின், ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையம் செயல்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது