Pages - Menu

ஆந்திராவை பின்பற்றி தமிழக டெட் தேர்வில் விரைவில் மாற்றம்...


தமிழகத்தில் டெட் (TET) தேர்வு மூலம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த தேர்வு கடந்த 2012ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளின் வினாத்தாள் 1 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளி பாடத்திட்ட புத்தகங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கணிதம், அறிவியல் என குறிப்பிட்ட பாடத்தை தேர்வு செய்து, அந்த பாட ஆசிரியராக செல்வார்கள்.

அவ்வாறு செல்லும் அவர்கள், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தாமல், கற்பித்தலில் ஆர்வம் குறைவாகவே இருக்கும். இதனால் மாணவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர். எனவே இவற்றை தடுக்க டெட் தேர்வில் மாற்றம் கொண்டுவர பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஆசிரியர் தகுதித்தேர்வில் மேற்கண்ட அம்சங்கள் தவிர வகுப்பறைகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் நடந்து கொள்ளும் முறை, ஒவ்வொரு மாணவனுக்கும் உளவியல் ரீதியான பிரச்னைகள், அவற்றை புரிந்து கொண்டு அவனிடம் ஆசிரியர் அணுகும் முறை, கற்பித்தல் மற்றும் மாணவனின் கற்றல் திறனை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

இதனை அப்படியே தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தும் முனைப்புகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதற்காக தமிழக கல்வித்துறை அதிகாரிகள், கல்வியாளர்களுடன் கருத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படையில் திரட்டப்படும் தகவல்களுடன் ஆந்திராவில் ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் தமிழக டெட் தேர்வில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாம்பருவத் தேர்வு விடுமுறையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோருக்கு கணினிப்பயிற்சி தரப்படும் என்பதை ஆசிரியர் மன்றம் ஆட்சேபிக்கிறது...


அன்பானவர்களே! வணக்கம்.

இரண்டாம்பருவத் தேர்வு விடுமுறையில் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றோருக்கு  கணினிப்பயிற்சி தரப்படும் என்பதை ஆசிரியர் மன்றம் ஆட்சேபிக்கிறது ;
கடுமையாக எதிர்கிறது.
வேலைநாள் இழப்பு எங்கு(பள்ளியில்/அலுவலகத்தில்) ஏற்பட்டதோ அங்குதான் வேலைநாள் ஈடுசெய்வதற்கு ஆணையிடுவது
தான் பொருத்தமானதாகும்.
இதைசெய்யாது இரண்டாம்பருவத்
தேர்வில்  கணினிப்பயிற்சி என்று அறிவிக்கப்பட்டு
 இருப்பது 
ஒரு வகையில் தமிழக அரசின் பழிவாங்கும்
நடவடிக்கையாகும்;
அச்சுறுத்தல் தன்மை கொண்டதாகும் என்றே கருத வேண்டி வருகிறது.

ஜாக்டோ-ஜியோ வின் போராட்ட நடவடிக்கைகளில் பின்னடைவினை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகவே கணினிபயிற்சி அறிவிப்பை ஆசிரியர்மன்றம் காண்கிறது.
எத்தகு அச்சுறுத்தல்களையும்,
அடக்குமுறைகளையும்,
மிரட்டல்களையும்,
சதித்திட்டங்களையும்
தூள்தூளாக்கி 
தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு அலுவலர்களின் ஒட்டுமொத்த பொதுநலன்களை பேணிப்பாதுகாப்பதில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு 
முழுவீச்சோடு தொண்டாற்றும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் .இனமானக்காவலர் .பாவலர்.க.மீ அவர்கள் ,தமிழ்நாடு ஜாக்டோ-ஜியோவின் மாநில அமைப்போடு இணைந்து நின்று கணினிப்பயிற்சி திட்டத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
              நன்றி.
~முருகசெல்வராசன்.

மாத ஊதியத்தில் PLI செலுத்துபவர்களின் கவனத்திற்கு....



✍இனி மாதாமாதம், செலுத்தி வந்த PLI தொகைக்கு சேவை வரி பதிலாக GST வரியாக மாற்றப்பட்டுள்ளது.

✍எப்படி கணக்கிடுவது என்ற விளக்கம் படத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் மன அழுத்தம் தீர 'ஹெல்ப் லைன்' அறிமுகம்...


பள்ளி மாணவர்களுக்கு, உயர் கல்வி ஆலோசனை கூறவும், மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கவும், '14417' என்ற, கட்டணமில்லா தொலைபேசி, அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக, 1.98 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.

ஆலோசனை மையம்:

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும், அவர்களுக்கு உயர் கல்வி செல்வதற்கான வழிமுறைகளை விவரிக்கவும், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், கட்டணமில்லா தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட உள்ளது.

இனிமேல், '14417' என்ற எண்ணில், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி ஊழியர்கள் தொடர்பு கொள்ளலாம். 

அவற்றில், உயர் கல்வி படிப்பதற்கான தகவல்கள், தேர்வு விபரங்கள், பாடத்திட்ட சந்தேகங்கள், பள்ளிகளின் கட்டமைப்பு பிரச்னைகள்... நலத்திட்டம் கிடைக்காமை, மன அழுத்த பிரச்னைகள் போன்றவை குறித்து, மாணவர், பெற்றோர், ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படும்.

இந்த திட்டத்துக்காக, தமிழக அரசு, 1.98 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், மாணவர்களுக்கு உடல்நலம், உளவியல் ஆலோசனைகள், கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் விபரங்கள் குறித்த தகவல்களையும் வழங்க, திட்டமிடப்பட்டு உள்ளது.