Pages - Menu

அனைத்து நாட்களிலும் அனைத்து மாவட்டங்களும் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணி மேற்கொள்ளும் வகையில் EMIS இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது...

அனைத்து நாட்களிலும் அனைத்து மாவட்டங்களும் EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யும் பணி மேற்கொள்ளும் வகையில் EMIS இணையதளம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது...

👉🏻இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி ஆதார் உள்ளீடு செய்யும் பணியில் நிலுவையில் உள்ள பள்ளிகள் நாளை 1.00pm க்குள் இப்பணியினை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

👉🏻முதல் வகுப்பு புதியentry முடிக்கப்பட வேண்டும். 

👉🏻சில பள்ளிகளில் மாணவர்கள் student pool பகுதிக்கு அனுப்பப்படாமல் உள்ளனர். நாளை மாலைக்குள் அனுப்பப்படாத நிலையில் district user மூலம் வெளியேற்றும் நிலையினை உருவாக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

👉🏻Student poolபகுதியிலிருந்து admit செய்யும் பணியினை முடிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

👉🏻அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் student id card பணி மேற்கொள்ள android mobile app தற்பொழுது செயல்படுவதால் இப்பணியினை மேற்கொள்ளுமாறு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

மு.பிரகாஷ்,
EMIS ஒருங்கிணைப்பாளர், நாமக்கல்.

JACTTO-GEO~வரும் 6/1/18 காலை 10மணி முதல் மதியம்1 மணிவரை ஜாக்டோ ஜியோ தொடர் முழுக்கப்போராட்டம்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக கலந்து கொள்ளும் மாநில பொறுப்பாளர்களும் ,அவர்கள் கலந்துகொள்ளும் மாவட்டங்கள்...


வரும் 6/1/18 காலை 10மணி முதல் மதியம்1 மணிவரை ஜாக்டோ ஜியோ தொடர் முழுக்கப்போராட்டம்  அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடைபெறயுள்ளது.

அதில்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக கலந்து கொள்ளும் மாநில  பொறுப்பாளர்களும் ,அவர்கள் கலந்துகொள்ளும் மாவட்டங்கள் பின்வருமாறு.....

*திருவாரூர் மாவட்டம்.

திரு பாவலர். க.மீனாட்சிசுந்தரம்ex.mlc
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁

*புதுக்கோட்டை மாவட்டம்

திரு தியோடர் ராபின்சன்,
மாநில தலைவர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
🍂🍂🍂🍂🍂🍂🍂

*அரியலூர் மாவட்டம்

திரு புலவர்.அம்மை கணேசன்,
மாநில பொருளாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂

*திண்டுக்கல் மாவட்டம்

திரு மன்றம் ந.சண்முகநாதன் மாநில துணைச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
🍂🍂🍂🍂🍂🍂🍂

*தஞ்சாவூர் மாவட்டம்

திரு இருதயராஜ்,
முத்தோரணி் அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
🍂🍂🍂🍂🍂🍂🍂

*நாகப்பட்டிணம்மாவட்டம்*

திருமதி மதனா எழிலரசன்,
மாநில மகளிரணி அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
🍂🍂🍂🍂🍂🍂🍂

*கிருஷ்ணகிரி மாவட்டம்

திரு உ.சுப்பிரமணியன்,
மேனாள் முதன்மை செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
🍂🍂🍂🍂🍂🍂🍂

*கரூர் மாவட்டம்

பெ.ம.சிவக்குமார்மாநில   அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
🍂🍂🍂🍂🍂🍂🍂

*குறிப்பு: 
6/1/18 சனிக்கிழமை பள்ளி வேலைநாளாக உள்ள மாவட்டங்கள் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்க.

~மன்றம்
மு.மோகன்,
மாநில கொள்கை விளக்கச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே-அரசு உத்தரவு...


தமிழகத்திலுள்ள அரசு துவக்க,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இனி கல்வி நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து அரசு செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், கருத்தரங்கள் நடத்த அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். மற்ற பொது நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியளிக்க கூடாது என, பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.

கல்வி நிகழ்ச்சிகள் குறித்து, முன்கூட்டியே மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி கல்வி நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும், எனக் கூறியுள்ளார்.