Pages - Menu

வியாழன், 8 பிப்ரவரி, 2018

விரைவில் டிஜிட்டல் சான்றிதழ்கள்!


உயர்கல்வி நிறுவனங்களில் முதல் முறையாக, டிஜிட்டல் தொழில்நுட்ப வடிவிலான கல்வி சான்றிதழை மாணவர்களுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சோதனை முயற்சியாக 2019ம் கல்வியாண்டு முதல் இத்தகைய சான்றிதழை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பை ஐஐடி., டில்லி பல்கலை., கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது. 

நிதி ஆயோக்கின் கண்காணிப்பில் பேரில் இந்த சோதனை பணிகள் நடத்தப்பட உள்ளது. இத்தகைய டிஜிட்டல் சான்றிதழ்கள் உறுதித்தன்மை வாய்ந்தாகவும், இந்தியாவை இணைக்கும் சங்கிலியாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. சோதனை செயல்பாடு வெற்றி பெற்றால், நாடு முழுவதும் டிஜிட்டல் சான்றிதழ் வழங்கும் முறை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வி நிறுவனங்களுக்கு ஏற்கனவே இமெயில்கள் மூலம் தகவல் அனுப்பப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

கல்வித்துறை ஏற்கனவே டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படுவதால், அதில் இம்முறை அமல்படுத்துவது சிக்கலாக இருக்காது. கல்வி துறையை தொடர்ந்து நில பட்டாக்கள் தொடர்பான ஆவணங்களும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

DEE PROCEEDINGS- 2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல்...

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2016-17 ஆம் கல்வியாண்டில் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான சுழற்கேடயம் வழங்குதல்ஆகியவை 12.02.18 திங்கள் அன்று சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்குவது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

Whatsapp ல் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது...

வாட்ஸ் ஆப் செயலியில் தகவல் பரிமாற்றத்திற்கு உலகின் பெரும்பாலனவர்களால் பயன்படுத்தப்படுவதால் புதிய சுவாரசியமான அம்சம் ஒன்று புகுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்பில் நாம் இதுவரையில் தனியாகவே ஒருவருடன் வீடியோ கால் மூலம் பேசும் இருந்து வருகிறது, விரைவில்குழுவாக வீடீயோ கான்ஃபரசிங் மூலம் பேசும் வசதி இதில்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தற்போது சோதனை முறையில் ஆண்ட்ராய்ட் பீட்டா எடிஷனில்சோதிக்கப்பட்டு வரும் இந்த வசதி விரைவில் வாட்ஸ் அப்பின் அப்டேட் செய்யப்பட இருக்கும் என தெரிகிறது.

வாட்ஸ் அப் பயன்பாட்டை மேலும் வசீகரிக்கும் வகையில் இந்த வீடியோ கான்ஃபரன்சிங் வசதி இருக்கும் என்று பயனாளர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இந்த குழு வீடியோ கால் வசதி அறிமுகமானால் வீடியோ கால் வசதியினை அளிக்கும் ஸ்கைப், IMO உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு குறைந்து போகவும் வாய்ப்பு ஏற்படும்.இது மட்டுமல்லாமல் ஃபேஸ்புக்கில் உள்ளது போன்று பல்வேறு விதமான ஸ்டிக்கர்களையும் வாட்ஸ் அப்பில் புகுத்த இருக்கின்றனர்.

இந்த புதிய அம்சங்கள் இணைவதன் வாயிலாக நமது வாட்ஸ் அப் உரையாடல்கள் மேலும்சுவாரஸ்யம் கொண்டதாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. வாட்ஸ் அப் செயலி ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.முதலில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் மட்டுமே இந்த வசதி கிடைக்கும் என்றும் ஐஓஎஸ், விண்டோஸ் இயங்குதளங்களில் பின்னர் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.