Pages - Menu

8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை~மத்திய அரசின் திட்டம்…

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையாக ரூபாய் 30,000/- வழங்கப்படுகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்காக மாணவர்களுக்கு NMMS தேர்வு நடத்தப்படும்.
இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 9- ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் ரூபாய் 500 வீதம் ஆண்டு ஒன்றுக்கு உதவித் தொகையாக ரூ. 6,000 வழங்கப்படும். 

இதற்கான தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி நடைபெறும்.

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

தலைமையாசிரியர்கள் தேவையான/விண்ணப்பங்களை செப்.17 முதல் செப்.30 வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாணவர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50 உடன் அக்.1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலையில் 'கியூ ஆர்' கோடு விடைத்தாள் நவம்பர் முதல் அமல்...


காரைக்குடி அழகப்பா பல்கலையில் 'கியூ ஆர்' கோடு முறையிலான விடைத்தாள் பரீட்சார்த்த முறையில் நவம்பர் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

 அழகப்பா பல்கலையில் விடைத்தாள்கள் தற்போது பார்கோடு மூலம் திருத்தப்பணிக்கு செல்கிறது. இதைவிட அதிக பாதுகாப்பு மிக்க விடைத்தாளை உருவாக்கும் 'என்கிரிப்ட் கியூ ஆர் கோடு' முறையிலான விடைத்தாள்கள் வடிவமைக்கும் பணி தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துடன் இணைந்து அழகப்பா பல்கலை தேர்வு துறை கடந்த ஆறு மாதமாக மேற்கொண்டு வந்தது.

பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து வருகின்ற நவம்பரில் அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட ஏதாவது ஒரு இணைப்பு கல்லுாரி மற்றும் பல்கலையின் அனைத்து துறைகளுக்கு நடக்கும் தேர்வில் பரீட்சார்த்த முறையில் இந்த விடைத்தாள் பயன்படுத்தப்பட உள்ளது. மிகுந்த பாதுகாப்பு என்பதால் மாணவர்களுக்கு பயனளிக்கும். 

தமிழகத்தில் அழகப்பா பல்கலையில்தான் இது முதன் முறையாக அமல்படுத்தப்பட உள்ளது.