Pages - Menu

ஜனவரி 14,
வரலாற்றில் இன்று.

எழுத்தாளர், கணிதவியலாளர் லூயிஸ் கரோலின் நினைவு தினம் இன்று.

லூயிஸ் கரோல் (Lewis Carroll, ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898).
இவரது இயற்பெயர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston).

ஆலிசின் அற்புத உலகம், Through the Looking-Glass, "The Hunting of the Snark", "Jabberwocky"
இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது.

இவர் எழுதிய ஆலிஸின் அற்புத உலகம் ( Alice in Wonderland ) எனும் நாவல் மிகப் புகழ்பெற்றது. இந்நாவலை 1865 ஆம் ஆண்டு எழுதினார். இது சிறார்களான கதை என்றாலும் பெரியவர்களையும்ஈர்க்கக்கூடிய வகையில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும். பல மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழில் ஆலிஸின் அற்புத உலகம் எனும் தலைப்பில் எஸ். ராமகிருஷ்ணனால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது..
ஜனவரி 14, வரலாற்றில் இன்று.

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் திரு சுர்ஜித் சிங் பர்னாலாவின் நினைவு தினம் இன்று.

தமிழ்நாட்டில் இரண்டு முறை ஆளுநராக இருந்த பெருமை பர்னாலாவுக்கு உண்டு. 1990 - 91 மற்றும் 2004 - 2011 வரை தமிழகத்தின் ஆளுநராக சுர்ஜித் சிங் பர்னாலா இருந்தார். இதேபோல் உத்தரகாண்ட், ஆந்திரா, அந்தமான் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பர்னாலா பணியாற்றியுள்ளார்.

ஆளுநர் பதவியில் ஜனநாயக நெறிமுறைகளுடன் செயல்பட்டவர்
சுர்ஜித் சிங் பர்னாலா

1991ல் பர்னாலா ஆளுநராக இருந்த போது திமுக ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு அறிக்கை கேட்டது. அப்போது சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக கூறி ஆட்சி கலைப்பு பரிந்துரைக்கு பர்னாலா மறுப்பு தெரிவித்து விட்டார். ஆட்சி கலைப்புக்கு பரிந்துரை செய்ய மறுத்துவிட்டதால் பர்னாலா பீகாருக்கு மாற்றப்பட்டார்.

பீகாருக்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1991ல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

பர்னாலா சுதந்திர போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.  அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவராக சுர்ஜித் சிங் பர்னாலா விளங்கினார். பொற்கோயில் நடவடிக்கைக்கு பிறகு 1985ல் பஞ்சாப் முதல்வர் பொறுப்பை வகித்தார். பின்னர் 1998ல் வாஜ்பாய் அமைச்சரவையில் ரசாயனத்துறை அமைச்சராக பர்னாலா பதவி வகித்தார்.
ஜனவரி 14,
இன்று போகி பண்டிகை.

அனைவருக்கும் இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துகள்...

திருஷ்டி கழியும் போகி பண்டிகை..அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்
பண்டிகையாகும்.

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறோம். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம்.

இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் நம்முடைய தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.பல்வேறு தெய்வீக குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.தை மாதம் பிறந்து நம்வாழ்வில் நல்வழி பிறக்க, மார்கழி நிறைவு பெறும் நாளில், போகிபண்டிகையன்று, அனைவரும்
இறைவனையும்,நம் முன்னோர்களையும் வணங்கி, தைமாதத்தை மகிழ்ச்சியுடன்
வரவேற்று, தமிழர் திருநாளை மனமகிழ்வுடன் கொண்டாடி மகிழ்வோம்..

*ஆசிரியர் மன்றம்,நாமக்கல்  மாவட்டக்  கிளையின் சார்பாக போகித்திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.*
ஜனவரி 14, வரலாற்றில் இன்று.

 சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்ற தினம் இன்று.

1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி அன்றைய முதல்வர்  அண்ணா அவர்களால் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது.