சனி, 19 டிசம்பர், 2020

7,200 அரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் ஸ்மார்ட் வகுப்பறை: செங்கோட்டையன்*

*7,200 அரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் ஸ்மார்ட் வகுப்பறை: செங்கோட்டையன்*

*தமிழகத்தில் வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பிறகு 7,200 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை (மின் வகுப்பறை) தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.*

*திருச்சியில் இன்று நடைபெற்ற நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசியது:*

*வரும் ஜனவரி 15-ஆம் தேதிக்கு பிறகு 7,200 அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்படும்.*

 *கரும்பலகைகள் இல்லாமல் செய்திட 80 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் பலகைகள் ஏற்படுத்தப்படும்.*

 *7,442 பள்ளிகளில் விஞ்ஞானிகள் துணையுடன் பயிற்சி பெறும் வகையில் நவீன ஆய்வுக் கூடம் ஏற்படுத்தப்படும்.*

*6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சம் மாணவர்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும் என்றார் அவர்.*

*இந்த நிகழ்ச்சியில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் என மொத்தம் 496 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது.*

*பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது:*

*பள்ளிகள் திறப்பதைவிட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். மருத்துவக் குழுவினர், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை கேட்டு தேவைப்படும் நேரத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் அறிவிப்பார்.*

*இந்தாண்டு 1-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்களும், 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு 65 சதவீத பாடங்கள் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*இந்த பாடங்களில்தான் இறுதித் தேர்வுக்கான கேள்விகளும் இடம்பெறும் என்றார்.*

வெள்ளி, 18 டிசம்பர், 2020

PGTRB - முதுகலை வேதியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீீதிமன்ற வழக்கு காரணமாக வெளியிடாமல் இருந்த முடிவுகளை தற்போது ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்டுள்ளது.

PGTRB - முதுகலை வேதியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீீதிமன்ற வழக்கு காரணமாக வெளியிடாமல் இருந்த முடிவுகளை தற்போது ஆசிரியர் தேர்வுவாரியம் வெளியிட்டுள்ளது.


 TRB - Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019 - Provisional Selection List Published - Dated: 18.12.2020
பட்டியலை முழுமையாக காண
இங்கே கிளிக் செய்க.

*📚மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.*

*📚மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.*
 

*ஆணை :*

*2020-2021ம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “ பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு உயர்ரி லை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாகம் , அலுவலகம் தொடர்பான பணிகளை மேறகொள்வதற்கு போதுமான அளவில் ஆசிரியரல்லா பணியிடங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையின் அடிப்படையில் உதவியாளர்கள் , இளநிலை உதவியாளர்கள் அல்லது பதிவறை எழுத்தர்கள் பணியிடங்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ .12.84 கோடி செலவில் தோற்றுவிக்க வழிவகை செய்யப்படும். ”*


*அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் நிலை மேம்படவும் , ஆசிரியர்களது நலன் மற்றும் பணப்பயன்கள் பெற்றளித்தலில் தொய்வற்ற நிலை ஏற்படுத்தவும் , தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் முழுக் கவனமும் செலுத்த ஏதுவாகவும் , அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உதவியாளர் , இளநிலை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்கள் அனுமதிப்பது அவசியமாகிறது எனவும் , மேற்படி ஆசிரியரல்லாப் பணியிடங்கள் அனுமதிப்பது குறித்து மாணவ , மாணவியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.*

வியாழன், 17 டிசம்பர், 2020

கொரோனோ நோய்தொற்றில் பொதுவிநியோக கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகத்தில் பணியாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமைக்கு ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு!

கொரோனோ நோய்தொற்றில் பொதுவிநியோக  கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகத்தில்  பணியாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் பணிச்சுமைக்கு ஊக்கத்தொகை  அரசாணை வெளியீடு!

*📚தமிழகத்தில் பள்ளி திறப்பு எப்போது?.. முதல்வர் பழனிசாமி விளக்கம்.*

*📚தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது?: முதல்வர் விளக்கம்*

*கொரோனா வைரஸ் தொற்று குறையும்போது பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.*

*தமிழகத்தில் கொரோனா தொற்று நன்கு குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பதுபற்றி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.*

*உயிர் சம்மந்தப்பட்ட விஷயம் என்பதால் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டி உள்ளது.*

*பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, வளர்ச்சி திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.*

*பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது ‘‘கொரோனா வைரஸ் தொற்று குறையும்போது பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.*

 *ஏற்கனவே பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. உயிர்தான் முக்கியம் என்பதால் அவர்களுடயை கருத்து, எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும்.*

*பள்ளிகள் திறப்பது பற்றி பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்படும்; அதற்கு தகுந்தாற்போல் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறினார்.*

*🔖ஆசிரியர்கள் தேர்வில் முறைகேடு புகார் - நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம்- உயர்நீதிமன்றம்.

*🏗️TRB - ஆசிரியர் தேர்வில் முறைகேடு ஆணையம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு.*


*814 கணினி ஆசிரியர் தேர்வில் 3 தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் ஆணையம் அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*


*விசாரணை அறிக்கையை பிப்.1ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,  3 மையங்கள் தவிர மீதமுள்ள 116 தேர்வு மையங்களில் தேர்வானவர்களுக்கு நியமனம் வழங்கலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவு.*

*🔖பள்ளிக் கல்வி - Fit India Movement - பதிவு செய்த பள்ளிகள் போக மீதம் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணையதளத்தில் உடனடியாக பதிவுசெய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...*

*🔖பள்ளிக் கல்வி - Fit India Movement - பதிவு செய்த பள்ளிகள் போக மீதம் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளும் www.fitindia.gov.in இணையதளத்தில் உடனடியாக பதிவுசெய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...*

கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ~ கலெக்டர் தகவல்...

*⚡RTI - 2005 - கட்டணம் செலுத்த வேண்டிய புதிய IFHRMS கணக்குத் தலைப்பு குறித்த அரசுக் கடிதம் வெளியீடு!*

*⚡RTI - 2005 - கட்டணம் செலுத்த வேண்டிய புதிய IFHRMS கணக்குத் தலைப்பு குறித்த அரசுக் கடிதம் வெளியீடு!*

*🔖30.11.2020-ன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் முழு விவரங்கள் - Employment Offices live register for the period ended 30th November 2020*

*🔖30.11.2020-ன்படி வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் முழு விவரங்கள் - Employment Offices live register for the period ended 30th November 2020*