வியாழன், 22 மார்ச், 2018

தமிழ் மொழி 4,500 ஆண்டு பழமைவாய்ந்தது ~ ஆய்வில் தகவல்…


தமிழ் உள்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் முன்பு தோன்றியது என்று ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மொழி தொடர்ந்து செழுமையோடு பயன்பாட்டில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெர்மனியில் உள்ள 'மேக்ஸ் பிளான்க்' அறிவியல் - மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும், உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வனஉயிர்க் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி சார்ந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டன.

இந்தியாவின் ஆதி இனமாகக் கருதப்படும் திராவிடர்களின் மொழியியல் குறித்த ஆய்வை அந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டனர். தமிழில் இருந்து தோன்றிய பிற மொழிகள் குறித்தும், அவற்றிலிருந்து பிரிந்து புதிதாக உருவான கிளை மொழிகள் குறித்தும் அவர்கள் பல்வேறு தரவுகளைச் சேகரித்தனர். அதன் அடிப்படையில் சில விஷயங்களைக் கண்டறிந்து அதனை ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்துள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது:

கிழக்கே வங்கதேசத்தில் இருந்து மேற்கே ஆப்கானிஸ்தான் வரை பரவியிருக்கும் தெற்காசியப் பகுதியானது குறைந்தது 600 மொழிகளின் தாயகமாக விளங்கியுள்ளது. திராவிடம், இந்தோ-ஐரோப்பா, சீனா-திபெத்தியம் உள்பட 6 மொழிக் குடும்பங்களின் கீழ் அந்த மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் முதன்மையானதும், பழமையானதுமான திராவிட மொழிக் குடும்பம், சுமார் 80 மொழிகளை உள்ளடக்கியது. ஏறத்தாழ 22 கோடி மக்கள் அம்மொழிகளை தற்போது பேசுகின்றனர். தென்னிந்தியா மற்றும் மத்திய இந்தியாவில்தான் அவற்றின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது. திராவிட மொழிக் குடும்பத்தில் பழமையான மொழி தமிழ்தான். அதைத் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் பரவலாக உள்ளன. அம்மொழிகளின் இலக்கியங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியவை.
உலகின் மூத்த மொழிகளில் தமிழைப் போலவே சம்ஸ்கிருதமும் கருதப்படுகிறது. ஆனால், தமிழைப் பொருத்தவரை சம்ஸ்கிருதத்தைப் போல சிதைந்து போகாமல் அதன் காப்பியங்களும், கல்வெட்டுகளும் முற்காலத்திலிருந்து தற்காலம் வரை தொடர்ந்து காணக் கிடைக்கின்றன.
பூகோள அடிப்படையில் திராவிட மொழிகளின் தோற்றம் எங்கு என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை; அதேபோன்று, எந்தக் காலத்தில் அவை தோன்றின என்பதை அறுதியிட்டுக் கூறவும் இயலாது. அதேவேளையில், தற்போது கிடைக்கப் பெற்றுள்ள சில சான்றுகளின்படி ஆய்வு செய்ததில், ஆரியர்கள் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் வருவதற்கு முன்பே திராவிடர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர் என்பது தெரிகிறது. இந்த விஷயத்தில் ஆராய்ச்சியாளர்களிடையே கருத்தொற்றுமையும் உள்ளது.
மேலும் சில தரவுகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது தமிழை உள்ளடக்கிய திராவிட மொழிக் குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை அறிய முடிகிறது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக அதிகரிக்கும் திட்டம் இல்லை~ மத்திய அரசு…


நாடாளுமன்றத்தில்
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை மாற்றுவதற்கு அரசு ஒப்புதல் அளித்து உள்ளதா?
என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு மத்திய
பணியாளர்களுக்கான இணை மந்திரி ஜிதேந்திரா சிங் இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில்,
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 62 ஆக அதிகரிப்பதற்கான திட்டம்
எதுவும் இல்லை என கூறினார்.  நாட்டில்
48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

மருத்துவ படிப்பு~ மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு…


முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரிக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSE PROCEEDINGS-கரும்பலகையில் எழுதும் அளவு குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...

மூன்றாம் பருவ தொகுத்தறி தேர்வு காலஅட்டவணை ஏப்ரல்-18~நாமக்கல் மாவட்டம்...

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல்~ மாணவர் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்குதல்~ தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல் முறைகள் ...

TAMIL UNIVERSITY DECEMBER-2017 RESULTS PUBLISHED...

Click here for Result...

புதன், 21 மார்ச், 2018

தமிழகத்தில் 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்~ மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவிப்பு…


அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கி மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. 

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 60
பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், காரைக்கடி அழகப்பா ஆகிய 3 மாநில பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்படுள்ளது.

இதேபோன்று ராமச்சந்திரா , தஞ்சை சாஸ்த்ரா, வேலூர் விஐடி, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கோவை அமிர்த விஷ்வா உள்ளிட்ட நிகர் நிலை பல்கலைக்கழகத்திற்கும் தன்னாட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்எஸ்என் தனியார் கல்லுரிக்கும் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 

தன்னாட்சி அதிகாரத்தின் மூலம் புதிய கல்வித் திட்டத்தையும் திறன் மேம்பாட்டு படிப்புகளையும் ஆராய்ச்சி மையங்களையும் அந்த கல்வி நிறுவனங்களே சுயமாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

போக்குவரத்துக் குற்றங்களும் தண்டனைகளும்...

மாணவர்களின் கல்விச் சுமையை 50 சதவீதம் வரை குறைக்க திட்டம்...


மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை ஏற்பது குறித்து மாநிலங்களே முடிவு செய்யும் என, லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர், உபேந்திர குஷ்வாஹா அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:

திறன் மேம்பாடுதற்போதைய கல்வி முறையானது, மாணவர்களை, தகவல்களை சேகரிப்பவர்களாகவே மாற்றுகிறது. வாழ்க்கைக்கு உகந்த வகையில், அதில் மாற்றம் செய்து, உடற்பயிற்சி கல்வி, திறன் மேம்பாடு, ஒழுக்க நெறி பாடங்கள் போன்றவை சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்விச் சுமையை, 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன.முடிவுகல்வி என்பது பொது அதிகாரப் பட்டியலில் உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாநிலங்களில்உள்ளதால், புதிய பாடத்திட்டங்களை ஏற்பது குறித்து, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யட்டும்.இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.

கே.வி.,க்களுக்கு தரவரிசையா?லோக்சபாவில் மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறைஇணையமைச்சர் உபேந்திர குஷ்வாஹா, 'பல்கலைகள், கல்லுாரிகளைப் போல, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளையும் தரத்தின் அடிப்படையில் பட்டியலிடும் திட்டம் ஏதும் இல்லை' என்றார்.