Pages - Menu

சனி, 20 அக்டோபர், 2018

பொறியியல் பட்டதாரிகளுக்கு தடை கோரிய வழக்கு அக் 26க்கு ஒத்திவைப்பு

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியை மீறி தேர்வு நடவடிக்கை மேற்கொள்வது பாதிப்பை ஏற்படுத்துவதாக தனபால் என்பவர் வழக்கு தொடர்ந்தார். பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்ய தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் அக்.26ம் தேதிக்கு ஒத்திவைத்தது.