Pages - Menu

சனி, 20 அக்டோபர், 2018

அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள்

🔥🔥🔥அரசுப்பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படுவதற்கான ஆலோசனைக் கூட்டம், முதலமைச்சர் தலைமையில் வரும் 22ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. சமூகநலத் துறை அமைச்சருடன் ஆலோசனை செய்யுமாறு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்படும். பொதுமக்களிடம் ஆங்கில மோகம் உள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன. இதில், தமிழகம் முழுவதும் அங்கன்வாடிகளில் படிக்கும் சுமார் 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.