Pages - Menu

சனி, 20 ஜூன், 2020

*🌐ஜூன் 20, வரலாற்றில் இன்று:விக்கிமீடியா நிறுவனம் உருவான தினம் இன்று (2003).*

ஜூன் 20, வரலாற்றில் இன்று.

விக்கிமீடியா நிறுவனம் உருவான தினம் இன்று (2003).

விக்கிமீடியா நிறுவனம் ஒரு அமெரிக்க இலாபநோக்கமற்ற தொண்டு நிறுவனமாகும். இது ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ளது. விக்கிப்பீடியா, விக்சனரி உட்படப் பல தன்னார்வச் செயற்றிட்டங்களை பல மொழிகளில் இணையத்தில் முன்னெடுக்கிறது. இந்நிறுவனம் ஜிம்மி வேல்சினால் ஜூன் 20, 2003இல் அறிவிக்கப்பட்டது.

விக்கிமீடியா அறக்கட்டளையின் அறிவிக்கப்பட்ட இலக்கு திறந்த உள்ளடக்கம், விக்கி சார்ந்த திட்டங்கள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகியன மற்றும் அந்த திட்டங்கள் முழு உள்ளடக்கங்களையும் பொதுவாக இலவசமாக வழங்குவது ஆகியன ஆகும்.

பல மொழிகளில் உள்ள பொதுவான கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா உடன் இந்த அறக்கட்டளை கூடுதலாக ஒரு அகராதி மற்றும் சொற்களஞ்சியத்தை விக்சனரி என்னும் பெயரில் பல மொழிகளில் நிர்வகிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக