புதன், 31 ஜனவரி, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் (31-01-2018)~ நிகழ்வுகள்...


தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் மன்றம்~மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம்...


இடம்:

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(நாட்டாண்மை கழகம்)


நாள்:31-01-2018


கோரிக்கைகள்:-

1.கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலிலேயே சேர்த்திட வேண்டும்.

2.ஏ மற்றும் பி பிரிவு ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மறுக்கப்பட்ட பொங்கல் மிகை ஊதியம் ரூபாய் 1000/- ஐ உடனே வழங்கிட வேண்டும்.

To check Statement & Missing Credit details...

NAS Exam ~ All Block Teacher's Name List...

வானில் 'மூன்று' நிலா!


சந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, சிவப்பு நிலா, நீலநிற நிலா என மூன்றுவித நிலாவும் வானில் தோன்றும் அதிசயம் (ஜன-31), அரங்கேற உள்ளது.ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம்.

இன்றைய சிறப்பம்சம் என்னவெனில், சந்திரகிரகணத்துடன் சிவப்பு நிலா மற்றும் நீலநிற நிலாவும் தோன்ற உள்ளது.

சூப்பர் மூன்....

பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான சராசரி தொலைவை விட, குறைவாக இருக்கும் போது 'சூப்பர் மூன்' தோன்றுகிறது. அப்போது சாதாரணமாக தெரியும் நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் தெரியும்.

சிவப்பு நிலா...

சந்திர கிரகணத்தன்று 'சூப்பர் மூன்' ஏற்படும் போது, நிலா, பூமிக்கு அருகில் வருகிறது. இதனால் சூரிய ஒளி, பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால், அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம், நிலவின் மேற்பரப்பில் பட்டுப் பிரதிபலிக்கும். அதனால் 'ஆரஞ்சு' நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இது 'சிவப்பு நிலா' என அழைக்கப்படுகிறது.

நீலநிற நிலா...

மாதம் தோறும் ஏற்படும் இரண்டாவது பவுர்ணமி, 'நீலநிற நிலா' என அழைக்கப்படுகிறது. இது நீல நிறத்தில் தெரிவதில்லை. அறிவியல் வரலாற்று ரீதியாக இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுமார் 152 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது என கூறப்படுகிறது. இது அமெரிக்காவுக்கு மட்டுமே பொருந்தும். உலகம் முழுவதற்குமானது அல்ல. ஆசியாவில் கடைசியாக இந்நிகழ்வு 1982 டிச., 30ல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 32 ஆண்டுகளுக்குப்பின் இந்நிகழ்வு நடக்கிறது.

எங்கு தெரியும்...

இந்தியாவில் (ஜன.31) மாலை 5 : 18 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்குகிறது. 6:21 முதல் இரவு 7:37 வரை முழு கிரகணம் இருக்கும்.இரவு 7:37 மணிமுதல் நிழல் விலக ஆரம்பித்து 8: 41 மணிக்கு முழுமையாக விலகி விடும். இரவு 9:38 மணிக்குப்பின் நிலவு அதன் முழு ஒளியுடன் ஜொலிக்கும்.

எப்படி பார்ப்பது?

இதற்குப் பாதுகாப்புக் கண்ணாடிகள் அணியவேண்டிய அவசியம் இல்லை. வெறும் கண்களால் பார்க்கலாம்.

செவ்வாய், 30 ஜனவரி, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ கபிலர்மலை ஒன்றியம் - ஒன்றிய செயற்குழுக் கூட்டம் (25/01/2018)~நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்...

DEE PROCEEDINGS-Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-பதிவேற்றம் செய்ய இயலாத ஆசிரியர் விவரங்கள் மற்றும் விடுபட்ட ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு...

கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்-அரசு அலுவலருக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி பெறுவதற்கான தொடர்நடவடிக்கையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயல்பாடுகள்...

EMIS-மாணவர்களின் முழுமையான விவரங்களை பதிவேற்றம் செய்தல்-நாமக்கல் மாவட்டகூடுதல் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

எலச்சிபாளையம் ஒன்றியம்- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திப்பு(29.01.2018)~நிகழ்வுகள்..

எலச்சிபாளையம் ஒன்றியம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக,
நாமக்கல் மாவட்ட கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நற்சான்று பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ""  து.மாலதி அம்மா "" அவர்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்...
 

சனவரி 30~தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுதினம்~தொழுநோய் ஒழிப்புதினம்~உறுதி மொழி...

சனவரி 30,தேசபிதா மகாத்மாகாந்தி அவர்களின் நினைவுதினம், இந்த நாளினை  இந்திய அரசு தொழுநோய்   ஒழிப்புதினமாக கடைபிடித்து வருகிறது.   

மகாத்மாவின் கல்விக்கொள்கை...

'வாழ்க்கைக்கான கல்வி;
 வாழ்க்கை மூலம் கல்வி; 
வாழ்க்கை முழுவதும் கல்வி' என்பவையே மகாத்மாவின் கல்விக்கொள்கையாகும்.

காந்தியக் கல்வியின் அடிப்படை
" தனி மனிதர்களைச் சமுதாயத்துக்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவது" என்பதேயாகும்.

சனவரி 30~ இந்திய விடுதலைக்காக தங்கள் உயிரை ஈந்த விடுதலைப் போராட்ட தியாகிகள் தினம்…

தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழி ...

திங்கள், 29 ஜனவரி, 2018

வருமான வரி செய்திகள்...


✍ஆசிரியர்கள் கவனத்திற்கு  நிதி ஆண்டிற்கு Quarter 1,2,3&4 என வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் அதை தாங்கள் தான் தாக்கல் செய்ய வேண்டும் என கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர் கூட்டத்தின் வாயிலாக கூறியிருப்பார்.........

✍Income Tax Act -1961 ல் Section 203 ன் படி சம்பளம் பெற்று தரும் அலுவலர் தான் நாம் வாங்கும் ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து மத்திய அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.

✍சம்பளம் வழங்கும் அலுவலர் Section 203 ன் படி Quarter 1,2,3&4 ல் நமது வங்கி கணக்கில் வழங்கப்பட்ட  ஊதியம் (credited pay) மற்றும் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருமான வரி தொகை (Amount of Tax Deducted) , ஆசிரியரின் வருமான வரி தொகையை மத்திய அரசின் கணக்கில் BIN (Book Identification Number) அல்லது CIN (Challan Identification Number) வழியாக செலுத்தியதை Rule 31(1)(a) ன் Form -16 Part A உறுதிமொழி படிவம் , Part B நிதி ஆண்டில் வழங்கிய ஊதியம் மற்றும் வருமான வரி பிடித்தம் செய்த தொகை Annexure நமக்கு வழங்க வேண்டும். இதனுடன் Income Tax Return Form அதாவது ITR-V தர வேண்டும்....

✍ நாம் எவ்வித பணமும் யாரிடமும் கொடுக்க தேவையில்லை...

✍பணம் கொடுக்காமல் இருந்தால் நமக்கு அலுவலர் கட்டாயம் Income Tax Return Form (ITR-V) வழங்கிவிடுவார்..... 

✍பின் சதுரங்க வேட்டை படம் மாதிரி நம் மனதை வசியப்படுத்தும் வார்தையாக ஆசிரியர்களே தாங்கள் ஏதேனும் வங்கியில் Loan பெற சென்றால் Form-16 கட்டாயம் தேவைப்படும். ஆகையால், Form-16 தேவைப்படுபவர்கள் ரூ.200 கொடுத்து வாங்கி கொள்ளுங்கள் என கூறும் நிலை தொடரும்.....
 
✍வருமான வரி தாக்கல் செய்யும் போதே Automatically generate Form -16 ...... .                               ✍வருமான வரி பிடித்தம் செய்வது சம்பளம் வழங்கும் அலுவலரின் கடமை. Form-16 வழங்குவதும் Drawing Offer கடமை.

✍தமிழ்நாடு  நிதி விதி தொகுப்பு 86(a) -ன்படி வருமான வரி பிடித்தம் IT சம்மந்தப்பட்ட அலுவலர் மற்றும் பணம் பெற்று வழங்கும் அலுவலரே பொறுப்பாளர்.

✍தங்களது ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்து Form-16 ஐ சம்பளம் வழங்கும் அலுவலர் தர மறுத்தால் புகார் அளிக்கும் முகவரி👇

The Commissioner,
Income Tax (TDS) ,
7th Floor , New Block ,
Aayakar Bhawan ,
121, M.G.Road ,
Chennai-34.

நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர்களுக்கு சேலம்மாநகராட்சிக்குரிய 1(பி)வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி கோரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியச்செயலாளர் திரு.சி.மோகன்குமார் அவர்களின் கடிதம்...

ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே,ஆதார் ஆணையம்...


புதுடில்லி: ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே
என ஆதார் ஆணையம், விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய பிரத்யேக அடையாள ஆணையத்தின் (யு.ஐ.டி.ஏ.ஐ.,) சி.இ.ஓ., அஜய் பூஷன் பாண்டே டுவிட்டரில் அளித்த பதிலில் தெரிவித்ததாவது: ஆதார் விவரங்களில் கை ரேகை பதிவு, கண் விழி படலம் மற்றும் புகைப்படம் மட்டுமே பதிவுசெய்யப்படுகிறது. இதன்மூலம் போலி அடையாள ஆவணம் உருவாக்கப்படுவது தடுக்கப்படும்.

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் கணக்கு விவரங்களை யு.ஐ.டி.ஏ.ஐ.,யால் பார்க்க முடியாது. ஆதார் அடையாள ஆவணம் மட்டுமே. வங்கி கணக்கை மத்திய அரசு முடக்கும் என்ற அச்சம் மக்களுக்கு வேண்டாம். ஆதார் தகவல்கள் எதுவும் கசியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCHOOL CALENDAR, FEBRUARY~2018...

பொதுக்கல்வியை வலுப்படுத்துவோம்...

EMIS மற்றும் AADHAR சார்பான கூட்டம்(30-01-18)~நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்…

தமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்படும் ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். என்றால் என்ன?~விளக்கம்...

மத்திய அரசின் தேர்வுகளை எதிர்கொள்ள வரும் பிப்ரவரி-3 ம் தேதிக்குள் 412 பயிற்சி மையங்கள்~அமைச்சர் தகவல்...

விபத்தில் தாய்/ தந்தை இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்-நாமக்கல் மாவட்ட கிளையின் ஒன்றிய செயலாளர்கள் கூட்டம்(27.01.2018) -இராசிபுரம் ~நாளிதழ் செய்திகள்...

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் _ கபிலர்மலை ஒன்றியம் - ஒன்றிய செயற்குழுக் கூட்டம் (25/01/2018)~நாளிதழ் செய்திகள்...

மாநகராட்சி எல்லையில்இருந்து 16கி.மீ எல்லைக்குள் ஒன்றிய பகுதிகள் வந்தால் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரே கேட்டு வீட்டு வாடகைப்படியை சம்பந்தப்பட்ட கருவூல அலவலர் வழங்கலாம்- கரூவூல முதன்மை செயலர் கடிதம்...

கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்-அரசு அலுவலருக்கு ஈரோடு மாநகராட்சிக்குரிய 1(பி)வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி பெறுவதற்கான தொடர்நடவடிக்கையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் செயல்பாடுகள்...

அரசு பள்ளியில் படித்து உயர் பதவிகளுக்கு வரமுடியும்~இஸ்ரோ தலைவர் சிவன்...

ENGLISH Alphabets- Upper Case ,Lower Case videos...


ENGLISH Alphabets- Upper Case-Videos...

ENGLISH Alphabets  -Lower Case- videos...

PBL பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களை விடுவித்தல் குறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலருக்கு கடிதம்~விழுப்புரம் மாவட்டம்...