சனி, 20 அக்டோபர், 2018
மூளைகாய்ச்சல் விழிப்புணர்வு பள்ளிகளில் நடத்த அரசு உத்தரவு
💥💥தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில்,
மூளை காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்த
பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி திட்டமான, சமக்ர
சிக் ஷா திட்டத்தின் கீழ், தொடக்கப் பள்ளிகளில், சிறப்பு குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள், மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டு தோறும் மூளை காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டும், மூளை காய்ச்சல் விழிப்புணர்வு முகாமை நடத்த, அனைத்து தொடக்கப் பள்ளிகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரிகள், சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து, வட்டார வாரியாக முகாம்களை நடத்த வேண்டும்.'தன் சுத்தம், சுகாதாரம், மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான உணவு முறை, மூளை காய்ச்சல் ஆகியவை குறித்து, முகாம்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என சமக்ர சிக் ஷா திட்ட இயக்குனரகம் உத்தரவிட்டுஉள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு தடை கோரிய வழக்கு அக் 26க்கு ஒத்திவைப்பு
அறிவியல் தொழில்நுட்புடன் டூப்ளிக்கெட் நிலாவை உருவாக்கும் - சீனா
சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி இயற்கையையும் விட்டு வைக்கவில்லை போலும். மின்சார செலவை குறைப்பதற்காகவும், தெரு விளக்குகளுக்கு பதிலாகவும் சீனா, ரஷ்யா, அமெரிக்காவுக்கு இணையாக நின்று ஒரு புது ஐடியாவை யோசித்தது.
வீண்செலவு
செயற்கை கோள்
அதன்படி, செயற்கை நிலவை உருவாக்கிவிட்டால் எந்த வீண் செலவும் வராது, நாடும் எப்பவுமே பளிச்னு இருக்கும் என்று முடிவெடுத்தது. தற்போது செயற்கை நிலாக்கள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை நிலவுகளுக்கு செயற்கை கோள்கள் மூலம் சக்தி பெரும் வகையில் வடிவமைக்கப்படுமாம்.
2022-க்குள் முடியும்
இதற்கான சோதனையும் நடந்து முடிந்துவிட்டதால், எப்படியாவது வருகிற 2022-ம் ஆண்டிற்குள் இந்த திட்டம் முடிந்துவிடும் என்றும், அதற்குள் மேலும் மூன்று செயற்கை நிலாக்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி செயற்கை நிலவுகள் வந்துவிட்டால் நாடு எப்போதுமே பளிச்சென்றுதான் இருக்கும்.
மின்வசதி இல்லாத கிராமப்பகுதிகளுக்கு இந்த செயற்கை நிலா வெளிச்சம் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல், வெள்ளம், பேரிடர் போன்ற காலங்களில் நாடே இருளில் மூழ்கிவிட்டாலும் இருக்கவே இருக்கிறது செயற்கை நிலா. இது இயற்கையான நிலாவைவிட 8 மடங்குஒளி தரக்கூடியதாம். அதாவது இந்த செயற்கை நிலவால், 10 முதல் 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒளியைப் பாய்ச்ச முடியுமாம்.
புத்தம் புது முயற்சி
சூரியனிடமிருந்து வெளிச்சத்தை நிலா வாங்கினால், இந்த நிலாவிலிருந்து வெளிச்சத்தை சீனா வாங்கி இப்படி ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளது. நிலாவில் போய் வாழலாம் என்ற பேச்சு அடிபட்டதுபோய், இப்போது ஆஹா.. கடைசியில் நிலாவில் கை வைத்து விட்டதே....
அடுத்த ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள்
ஆண்ட்ராய்டு 9.0 அப்டேட்.! உங்க ஸ்மார்ட்போன் இந்த லிஸ்ட்ல இருக்கானு பாருங்க.!
அங்கீகாரமற்ற CBSE பள்ளிகள் மீது கிரிமினல் நடவடிக்கை - அரசு முடிவு
இது குறித்து, மாவட்டங் களில் இருந்து, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அறிக்கைகள் வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விளக்கம் தருமாறு, &'நோட்டீஸ்&' அனுப்பப்பட உள்ளது.பின், டில்லியில் உள்ள சி.பி.எஸ்.இ., நிர்வாக அலுவலகத்துக்கு பரிந்துரை செய்து, அவற்றின் இணைப்பு உரிமத்தை ரத்து செய்யவும், அதிகாரிகள் முடிவு செய்துஉள்ளனர்.
சி.பி.எஸ்.இ.,யிடம் இணைப்பு பெறாமல், அந்த பெயரை பயன்படுத்தும் கல்வி நிறுவனங்கள் மீது, சி.பி.எஸ்.இ., வழியாக, கிரிமினல்நடவடிக்கை எடுக்கவும், பள்ளி கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
அரசுப் பள்ளி மாணவரும் சாதனையாளர் ஆகலாம்: இஸ்ரோ தலைவர் கே. சிவன்
மீனவர்கள் கடலில் மீன்களைக் கண்டறியும் தொழில்நுட்பம் உள்பட இஸ்ரோ மீனவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்பங்களை அளித்து வருகிறது. மீனவர்களுக்கு கடல் எல்லைகளைக் கண்டறியும் கருவிகளை கொடுப்பதற்கு இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இது மீனவர்களின் எல்லைப் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
இஸ்ரோ செயல்படுத்தும் டெலிமெடிசின் திட்டம் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்லாமலேயே மருத்துவ வசதியைப் பெறும் திட்டமாகும். இத்திட்டம் மேலும் நவீனப்படுத்தப்படும்.
2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கான பணிகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் இத்திட்டத்தில் உலகின் நான்காவது நாடாக இந்தியா வெற்றியடையும்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரிய சாதனையாளர்களாக வர முடியாது என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நன்றாகப் படித்து அறிவியல் அறிவை வளர்த்துக் கொண்டால், அரசுப் பள்ளி மாணவர்களும் சாதனையாளர்களாக வலம் வர முடியும் என்றார் அவர்.
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்புப் பயிற்சிகள் வழங்க தமிழக அரசு முடிவு...
சத்துணவின் தரம் குறித்து பள்ளிகளில் ஆய்வு - அறிக்கை அனுப்ப அரசு உத்தரவு...
சத்துணவு மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தேவையான சத்துணவு கிடைக்க, ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்க சத்துணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 40 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 10 ம் வகுப்பு வரை படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் ஒரு வகை சாதம், பயறு வகைகள் மற்றும் தினமும் முட்டை வழங்கப்படுகிறது.
மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் பப்பாளி, முருங்கை மரக்கன்றுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உணவில் ஆய்வு:
இந்நிலையில் சத்துணவு மையங்களில்சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அரசு அறிவுறுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் வாரம் 10 மையம் வீதம் மொத்தம்1,520 மையங்களில் சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
அன்றைய தினம் சமைக்கப்பட்ட உணவு 2 மணி நேரத்திற்குள் மதுரை உணவு பாதுகாப்பு துறை ஆய்வு மையத்திற்கு அனுப்பப்படும்.
அங்கு உணவில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்யப்படும். அதன் தரம் அறிந்த பிறகே மாணவர்களுக்கு சாப்பிட வழங்கப்படும். மேலும் சத்துணவு மைய வளாகத்தை சுத்தமாக வைக்க, நல்ல தரமான பொருட்களை மட்டுமே பயன்படுத்த சமையலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என சத்துணவு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.