புதன், 23 மே, 2018

கம்ப்யூட்டர் சயின்ஸ் பெயர் மாற்றம்~ பிளஸ்1,பிளஸ்2 வகுப்புகளுக்கு கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் என மாறியது...

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு~ தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து செய்திக்குறிப்பு...

புதிய பாடத்திட்ட நூல்கள்~ இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்…


புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை புதன்கிழமை முதல் இணையதளத்தில் படிப்படியாகப் பதிவிறக்கம் செய்யலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் பள்ளிகளுக்கான மாநிலப் பாடத் திட்டம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள், வல்லுநர்களின் வழிகாட்டுதலில் உருவான புதிய பாடத் திட்ட நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கடந்த மே 4-ஆம் தேதி வெளியிட்டனர். 

இதையடுத்து வரும் கல்வியாண்டில் 1, 6, 9, 11 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களின் அடிப்படையில் கற்றல், கற்பித்தல் பணிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில் மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி 1, 6, 9, 11 ஆம் ஆகிய வகுப்புகளுக்கான பாடநூல்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆர்டி) வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பதிவேற்றம் செய்யப்பட்ட புதிய பாடத்திட்ட நூல்களை www.tnscert.org என்ற இணையதள முகவரியில் புதன்கிழமை முதல் பதிவிறக்கம் செய்யலாம். வழக்கமான புத்தகங்களில் உள்ள தகவல்களைக் காட்டிலும் இதில் கூடுதல் தகவல்கள் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.