புதன், 4 ஜூலை, 2018

ஆசிரியர் வருகைப் பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயர் இடம் பெறும் முறை ~ தகவல் அறியும் உரிமைச் சட்டம் பதில்…

இந்தியாவில் டிஜிட்டல் மையம்~ நிஸான் தொடங்குகிறது…

சூரிய குடும்பத்தைவிட 1500 மடங்கு பெரிய புதிய நட்சத்திர கூட்டம் கண்டுபிடிப்பு...

14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும்~ கணக்கெடுப்பாளருக்கு கலெக்டர் வேண்டுகோள்…

அடுத்த கல்வியாண்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் தேர்வு முறையில் மாற்றம்~ பெரியார் பல்கலை துணைவேந்தர் தகவல்…

YouTube ல் வந்துள்ள புது வசதி...


யூடியூப்பின் ரெட் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட வந்த பிப் (PiP) வசதி,
தற்போது அமெரிக்காவில் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமான யூடியூப் கடந்த ஆண்டு ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்களுக்கு பிப் எனப்படும் `Picture-in-Picture ' வசதியை அறிமுகம் செய்தது. அப்போது இந்தச் சேவையானது யூடியூப் ப்ரீமியம் பயனர்கள் மற்றும் ரெட் சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமே இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த `Picture-in-Picture ' வசதியில் என்ன விசேஷம் என்றால் ஒரே சமயத்தில் இரு வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம். ஆனால், சத்தம் பிரதான வீடியோவில் இருந்து மட்டுமே வரும். பிப் வசதியைப் பயன்படுத்த ஸ்மார்ட்போன் மற்றும் யூடியூப் செட்டிங்கில் பிப் ஆப்சனை ஆன் செய்து கொள்ள வேண்டும். ஒருமுறை இதனை ஆன் செய்துவிட்டு ஹோம் பட்டனை அழுத்திவிட்டால் பிப் மோட் தொடங்கிவிடும்.

தற்போது அமெரிக்காவில் இந்த வசதி அனைத்து ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதால், விரைவில் உலகம் முழுதும் உள்ள ஆண்ட்ராய்டு ஓரியோ பயனர்களும் இலவசமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமாறுதல் பெற்றவர்கள் துய்க்கப்படாத பணியேற்பிடைக்காலத்தை தங்களது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் சேர்க்க கோரும் விண்ணப்பம்...