புதன், 8 டிசம்பர், 2021

இராஷ்ட்ரிய இந்திய இராணுவக் கல்லூரியில் (டேராடூன்) ஜுலை 2022-ஆம் பருவத்தில் சேருவதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் தேர்வுமையங்கள் தொடர்பான செய்தி வெளியீடு


 

தேசிய கல்விக் கொள்கை குறித்து இன்று (08.12.2021) நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு.வில்சன் எழுப்பிய கேள்விக்கு, எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்று மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்கள் பதிலளித்துள்ளார்கள்.






 

TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட வெவ்வேறு பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு தொடர்பான செய்தி வெளியீடு


 

TNPSC Annual planning and changes 2022 (ஆண்டிற்கான திட்ட அட்டவணை மற்றும் மாற்றங்கள்)







 


2021_2022 ம் கல்வியாண்டுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு மாணவர்களது பெயர் ம‌ற்றும் விவரங்கள் சரிபார்ப்பு ,திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்





 

அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதி 10ஆண்டுகளுக்குப் பின் முதலீடு

 🟢அரசு ஊழியர்களின் ஓய்வூதிய நிதி 10ஆண்டுகளுக்குப் பின் முதலீடு!

 🟢புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஓய்வூதிய நிதி சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் முதலீடு செய்யப்பட்டுள்ள விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இனியாவது ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


🟢தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003 -ஆம் முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

♦️♦️இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அரசு ஊழியர்கள் தரப்பில் சுமார் 17 ஆண்டு காலமாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

♦️♦️இதனிடையே, 2003-க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 5.88 லட்சம் பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இதுவரை இணைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை 2021 மார்ச் மாதம் வரை ரூ.44,769 கோடி சேர்ந்துள்ளதாக தமிழக அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

♦️♦️2008 -ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு (2003) பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு ஊழியர்களுக்குத் தெரியாமலே இருந்து வந்தது.

♦️♦️இதனிடையே புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை தமிழக அரசிடம் கடந்த 2018 நவ. 27-ஆம் தேதி வழங்கப்பட்டது.

♦️♦️ஆனாலும், அறிக்கையின் விவரங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை.


⭕⭕ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்.ஐ.சி.) முதலீடு:

♦️♦️இந்நிலையில் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்பு ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியிலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியிலும் முதலீடு செய்யப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

♦️♦️கடந்த 2019-ஆம் ஆண்டு மே 30-ஆம் தேதி முதல் முறையாக ரூ.2,500 கோடி, ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்டுள்ளது

♦️♦️அதன் பின்னர், தற்போதுவரை 8 தவணைகளில் ரூ.25,510 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

♦️♦️அதற்கு வட்டியாக ரூ.2,759.13 கோடியுடன் சேர்த்து, மொத்தம் ரூ.28,269.13 கோடி உள்ளது.

♦️♦️மேலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியில் தற்போது வரை ரூ.16,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.44,769 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

♦️♦️இதன் மூலம் சுமார் 18 ஆண்டுகளாக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் நிலை குறித்த விவரம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.

⭕⭕இனியாவது கிடைக்குமா ஓய்வூதியம்?:

♦️♦️பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு நிதியின் நிலவரம் குறித்து தெரியாததால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வு பெற்றும், பணியின் போது உயிரிழந்தும், விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் சுமார் 23ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

♦️♦️தற்போது பங்களிப்பு நிதி முதலீடு செய்யப்பட்ட விவரம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதால், இனியாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

School profile pdf



 Click here for download pdf

எட்டாம் வகுப்பினருக்கான தனித்தேர்வுகள் அறிவிப்பு





 


மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு



 

தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் குடும்பத்தினருக்கு நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்



 

2003 ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம்!



 

தமிழ்நாட்டின் இன்று, நாளைய மழை நிலவரம் பற்றிய இந்திய வா‌னிலை மைய அறிவிப்பு







 

உயர்கிறது ATM கட்டணம் !

 அடுத்த ஆண்டு 2022 ஜனவரி முதல் ATM-களில் இலவச பரிவர்த்தனைகளை தாண்டி பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.20 இருந்து ரூ.21 ஆக வசூலிக்கப்படும்! - RBI அறிவிப்பு! 



தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக கழுவேலி ஈரநிலம் அறிவிப்பு! அரசாணை வெளியீடு!!


 





Click here for download pdf

List of Restricted Holidays During 2022 office central government located in Tamilnadu (மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட மத விடுப்பு நாட்கள் 2022)



 

List of Holidays During central government located in Tamilnadu (மத்திய அரசு பொது விடுமுறை நாட்கள் 2022)



 

மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சரின் தலைமையில் நிதித்துறை தொடர்பான ஆண்டிடை திறனாய்வுக் கூட்டம்நடைபெற்றது!