🍁🍁🍁🍁🍁🍁🍁
*திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் சந்திப்பு*
திருச்செங்கோடு மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை ஆசிரியர் மன்ற பொறுப்பாளர்கள் இன்று (05/11/2020) பிற்பகல் சந்தித்தனர்
சந்திப்பின் போது ஆசிரியர் கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது. தீபாவளி முன்பணம் கோரி விண்ணப்பித்த அனைவருக்கும் கிடைக்க பெறும் வகையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும்,
கபிலர்மலை ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதும் விரைந்து தீர்வு காணவும் வலியுறுத்தப்பட்டது.
இச்சந்திப்பில் மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் ,
மாவட்டச் செயலாளர் திரு.மெ.சங்கர், மாவட்டப் பொருளாளர் திரு சு.பிரபு , மாநில பொதுக்குழு உறுப்பினர்
திரு.இரா.ரவிக்குமார்,
திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் திரு.சி.கார்த்திக் ஆகியோர் பங்கேற்றனர்.