செவ்வாய், 12 ஜூன், 2018

10th,11th,12th - Public Exam 2018 - 19 Timetable Published...


2018-19ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு தேதிகள்...

✍10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 தொடங்கி 29 வரை நடைபெறும்...

✍11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 6 தொடங்கி 22 வரை நடைபெறும்...

✍ 12-ம் வகுப்புபொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 19 வரை நடைபெறும்...

தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி - 01.08.2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தமை -உபரி ஆசிரியர்களைப பணிநிரவல் மூலம் மாறுதல் செய்தல் அறிவுரை வழங்குதல் சார்பு...

விடுப்பு விதிகள்...

புதிய பாடத்திட்டம் (வகுப்புகள் - 1,6,9,11) - பயிற்சி மற்றும் மாநில கருத்தாளர்களுக்கான பணிமனை பயிற்சி & பங்கேற்கும் கருத்தாளர்கள் பட்டியல் வெளியீடு...

EMIS அனைத்து பள்ளிகளும் முதல் வகுப்பு மாணவர்களின் புதிய பதிவு 20.06.2018 தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வி செயலர் உத்தரவு...

கல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) இணையதளத்தில் 2018-19 ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர் விவரங்களை வகுப்புவாரியாக வருகைப் பதிவேட்டில் உள்ளபடி EMIS இணையதளத்தில் பதிவு செய்யப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை கீழ்காணும் அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது...

*கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் பயின்ற அனைத்து மாணவர்களின் விவரங்களும் தற்போது பயிலும் மேல்வகுப்பிற்கு EMIS குழுவால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்விவரங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சரியாக செயல்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திடல் வேண்டும்.

*2018-19 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் புதியதாக சேர்க்கை ஆன மாணவர் சார்ந்த அனைத்து விவரங்களையும் 20.06.2018 ம் தேதிக்குள் உள்ளீடு செய்து முடித்திடல் வேண்டும்.

*2017-18 ஆம் கல்வி யாண்டில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் (தற்போதைய 2 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு முடிய) ஏதேனும் தகவல் விடுபட்டிருப்பின் அவற்றை சரிசெய்வதற்கான Updating option வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய விடுபட்ட விபரங்களை இவ்வாய்ப்பினைக்கொண்டு சரிசெய்திடல் வேண்டும்.

*2017-18 ஆம் கல்வியாண்டில் ஏற்கனவே உள்ளீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் எவரேனும் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு செல்லும் நிகழ்வில் அம்மாணவர் சார்ந்த விவரங்களை common pool க்கு Transfer செய்திடல் வேண்டும். மேலும் பள்ளியில் பயிலாத மாணவர் விபரங்களையும் common pool க்கு Transfer செய்திடல் வேண்டும்.

*EMIS எண்ணுடன் மாற்றுச்சான்றிதழ் பெற்று புதியதாக வேறு பள்ளிக்கு சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை common pool ல் இருந்து எடுத்து சார்ந்த பள்ளிகளில் சார்ந்த வகுப்புகளில் சார்ந்த தலைமை ஆசிரியர்களால் பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

*இந்நிகழ்வின் போது 2 முதல் 8 வகுப்புகளில் புதியதாக சேர்ந்த மாணவர் விபரங்களை common pool ல் இருந்து எடுக்க முடியாத நிலையில் மட்டும் அத்தகைய மாணவர் விபரங்களை சார்ந்த வகுப்புகளில் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களால் புதிதாக பதிவு செய்திடல் வேண்டும்.

*5 மற்றும் 8 ம் வகுப்புகளைத் தவிர பிற வகுப்புகளில் மாற்றுச்சான்றிதழ் வாங்கிய மாணவரின் விவரங்களை common pool க்கு Transfer செய்திடல் வேண்டும்.

 *நடப்பு கல்வியாண்டில் தினந்தோறும் நடைபெறும் சேர்க்கை/ நீக்கல் சார்ந்த விபரங்களை EMIS இணையதளத்தில் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களால் உடனுக்குடன் பதிவுகள் செய்து முடித்திடல் வேண்டும்.

*2018-19 ஆம் கல்வியாண்டில் EMIS இணையதளத்தில் அனைத்து வகுப்பு மாணவர் சார்ந்த அனைத்து விபரங்களையும் பதிவு செய்யும் பணியை 31.07.2018 ஆம் தேதிக்குள் முடித்திடல் வேண்டும்.

*எனவே சார்ந்த கல்வி மாவட்டம் வாரியாக மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இப்பணியை எவ்வித குறைகளுகு இடமின்றி காலதாமதம் ஏற்படாமல் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக 44000 வினாக்கள் இலவசம்...


NEET, IIT JEE, TRB, TET, TNPSC, RRB, SSCபோன்ற போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு www.way2score.com எனும் புதியத்தளம் தன் சோதனை ஓட்டத்திலேயே 44000 வினாக்களை இலவசமாக வழங்குகிறது. தற்போது ஆங்கிலத்திலும் தமிழிலும் துரிதமாக இயங்கிவரும் www.way2score.comஇணையதளம் பல்துறை வல்லுநர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் கொண்டு உருவாக்கப்பட்ட வினா-விடைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. மேலும் NTSE, NMMS மற்றும் TRuST போன்ற பள்ளி மாணவர்களுக்கான அரசு ஊக்கத்தொகைத் தேர்வுகளுக்கான வினா-விடைகளும் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் ஒரு முறை விடையளித்த வினாக்கள் மீண்டும் இடம் பெறாது என்பது மேலும் ஒரு தனிச்சிறப்பு. இதுமட்டுமல்லாது மாணவர்கள் தங்கள் மதிப்பெண், மதிப்பெண்களின் பகுப்பாய்வு போன்ற மதிப்பீடுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். தமிழகமெங்கும் உள்ள 6 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வர்கள்
www.way2score.com இணையதளம் வாயிலாகப் பயன்பெறுவர்.

தமிழகத்திலுள்ள பள்ளி  ஆசிரியர்களின் நேரடி பங்களிப்பின் மூலம் இலவசமாக 5 இலட்சத்திற்கும் அதிகமான வினாக்களை வழங்கும் இலக்குடன் துவங்கப்பட்டுள்ளது.

இதைப் பயன்படுத்துவது எப்படி...

 www.way2score.com பக்கத்தில் உள்ள பயனர் பக்கத்தில் தங்கள் சுயவிவரங்களைப் பதிவு செய்து, தங்களுக்கான ID யை உருவாக்கி, தங்களுக்குத் தேவையானத் தேர்வு முறையைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
பின்பு  கொடுக்கப்பட்டிருக்கும் வினாக்களுக்கு விடையளித்து சுய மதிப்பீட்டை உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். 

மேலும் இத்தளத்தில் அவ்வப்போது வெளிவரும் தேர்வுகள் பற்றி உடனுக்குடன் அறிவுப்பு கொடுக்கப்படுவதால் மாணவர்கள் எதிர்வரும் தேர்வுகளுக்கு எளிதில் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள்~ உறுதிமொழி…