ஞாயிறு, 4 நவம்பர், 2018

ஸ்மார்ட்போன் அதிக நேரம் உபயோகித்தால் கேன்சர் அபாயம் உண்டு

ஸ்மார்ட்போன்களில் RFR எனும் ரேடியோ கதிர்வீச்சு அதிகளவில் இருப்பதால் அதை அதிகம் பயன்படுத்துவோருக்கு இதயம், மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் கட்டிகள் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



அமெரிக்காவைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்ட்டியூட் என்னும் ஆராய்ச்சி நிறுவனம், ரேடியோ கதிர்களின் விளைவுகள் குறித்து NTP (National Toxicology Programme) எனும் ஆராய்ச்சியை மேற்கொண்டது.



அந்த ஆராய்ச்சியில் எலிகளின் உடலில் ரேடியோ கதிர்களைச் செலுத்தி அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சோதனை செய்தது.




சோதனையின் முடிவில் RFR கதிர்வீச்சின் பாதிப்பால் ஆண் எலிகளுக்கு இதயம், மூளை மற்றும் அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் கட்டிகள் உண்டாகின.



ஆனால், பெண் எலிகளுக்குக் குறைவான அளவிலேயே பாதிப்புகள் உண்டானது.



இந்த ஆராய்ச்சி குறித்து பேசிய ஜான் பச்சர் (NTPயின் ஆராய்ச்சியாளர்), “இந்த ஆராய்ச்சியில் எலிகளுக்கு ஏற்பட்ட விளைவுகளையும், ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் மனிதர்களும் ஏற்படும் விளைவுகளையும் நேரடியாகத் தொடர்புபடுத்த முடியாது.



ஏனெனில் இந்தச் சோதனையின்போது எலிகளுக்கு உடல் முழுவதும் ரேடியோ கதிர்வீச்சுகள் செலுத்தப்பட்டது.



ஆனால், மனிதர்கள் விஷயத்தில் அவர்கள் எந்த இடத்தில் ஸ்மார்ட்போன்களை அதிகம் வைக்கிறார்களோ அங்கு இவ்வகை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.



இந்த ஆராய்ச்சியின் முடிவில் ஆண் எலிகளுக்கு ஏற்பட்ட விளைவுகளே மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாக நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

மகனை அங்கன்வாடியில் சேர்த்து முன்னுதாரணமாக விளங்கும் டெல்லி IAS தம்பதி




புதுடெல்லி.                                                         

தமது இரு வயது மகனை அரசு அங்கன்வாடியில் சேர்த்த ஐஏஎஸ் தம்பதியர் சிறந்த முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நிகழ்ந்த இந்த அதிசயம் பலரது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.


உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள சமோலியின் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் ஸ்வாதி வாத்சவா. அதன் அருகிலுள்ள அல்மோராவின் ஆட்சியராக அவரது கணவர் நிதின் பதவுரியா உள்ளார். இந்த ஐஏஎஸ் தம்பதிக்கு இரண்டு வயதில் அபயுதா எனும் பெயரில் ஒரு மகன் இருக்கிறார்.

இதுபோன்ற அதிகாரிகளின் குழந்தைகள் பிரபல பள்ளிகள் அல்லது சிறந்த தனியார் உறைவிடப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், மகன் அபயுதாவை சமோலியின் கோபேஷ்வர் நகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகமான அங்கன்வாடியில் ஐஏஎஸ் தம்பதியர் சேர்த்துள்ளனர். நேற்று செய்தியாக வெளியான இந்த தகவல், கேட்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து ஸ்வாதி கூறும்போது, “அனைத்து வசதிகளுடன் ஒரு முழுமையான அங்கன்வாடியாக அது மாநில அரசால் செயல்படுத்தப்படுகிறது. இதில் தங்கி விட்டு மாலையில் வீடு திரும்பும் என் மகன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். பொருளாதார ஏற்றத்தாழ்வு எதுவும் இன்றி குழந்தைகளுக்கு நல்ல வளர்ச்சியை தரும் சூழல் இங்கு கிடைப்பதால் அங்கன்வாடியை தேர்ந்தெடுத்தோம்’ என்றார்.

ஆங்கிலேயர் காலம் முதல் விடுதிகளில் தங்கிப் பயிலும் கான்வென்ட் பள்ளிகளுக்கு உத்தராகண்ட் மாநிலம் புகழ் பெற்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல், அவரது சகோதரி பிரியங்கா உள்ளிட்டோரும், மேலும் பல பிரபலமானவர்களின் குழந்தைகளும் இதுபோன்ற கான்வென்ட்டுகளில் பயின்றவர்களே. எனினும், அதே மாநிலத்தில் பணியில் இருந்து கொண்டு ஸ்வாதி-நிதின் தம்பதி தம் மகன் அபயுதாவை சாதாரண அரசு அங்கன்வாடியில் சேர்த்திருப்பது ஒரு சிறந்த முன் உதாரணத்தை ஏற்படுத்தி பலரது பாராட்டுகளை பெற வைத்துள்ளது.





நீட் தேர்வு நேரம் மாற்றம், புதிய கட்டுப்பாடுகளும் அறிவிப்பு...

நீட் தேர்வுக்கான 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவு நேற்று துவங்கியது. இந்த ஆண்டு, தேர்வு நேரம், காலையில் இருந்து, பிற்பகலுக்கு மாற்றப்பட்டு உள்ளதுடன், புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) சேருவதற்கான நீட் 2019 தேர்வு, அடுத்த ஆண்டு, மே மாதம் 5 -ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. 

இதற்கு நவம்பர் 30 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் 2019 ஜூன் 5 - ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்த தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று காலை 11:30 மணிக்கு துவங்கியது. வரும் 30 கடைசி நாளாகும்.

இந்தத் தேர்வுக்கான கட்டணம் ரூ. 1,400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ரூ. 750 செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை டிசம்பர் 1 இரவு 11:30 மணி வரை செலுத்தலாம்.

இந்த ஆண்டு நீட் தேர்வு, மே, 6, காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை நடந்தது. ஆனால், 2019க்கான தேர்வு நேரம், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. தேர்வுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. 

அதன் விபரம்: ஆன்லைன் விண்ணப்ப பதிவின் போது, பெற்றோரின் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருமானம் குறிப்பிடப்பட வேண்டும். 

'ஆதார்' எண் கட்டாயம் இல்லை. பட்டியலிடப்பட்ட, ஏதாவது ஒரு அடையாள எண்ணை பதிவு செய்யலாம். ஆதார் எண் பதிவதாக இருந்தால், கடைசி நான்கு இலக்க எண்களை மட்டுமே பதிய வேண்டும். 

வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் போது, விரல் ரேகையையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 

தேர்வு மையத்துக்குள், தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து வரக் கூடாது. இந்த கட்டுப்பாட்டை மீறுவோர் மற்றும் காப்பி அடித்து பிடிபடுவோருக்கு, மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

பி.எஸ்சி., பட்டப்படிப்பு முடித்தவர்கள், பிளஸ் டூ இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்திருந்தால், நீட் தேர்வில் பங்கேற்கலாம். 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மத்திய அரசு நடத்தும் தேசிய திறந்தநிலை பள்ளியில், பிளஸ் டூ முடித்தவர்கள், நீட் தேர்வு எழுத தகுதி இல்லை.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின் படி, அனைத்து மாநில பாடத்திட்டங்களை இணைத்து, பொதுவான வினாத்தாள் தயாரிக்கப்படும். பாடத்திட்ட விபரங்கள் மற்றும் ஆன்லைன் பதிவு விபரங்களை https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டில் தமிழகத்திலிருந்து 1.07 லட்சம் மாணவ, மாணவிகள் நீட் நுழைவுத் தேர்வில் பங்கேற்றனர். இந்த முறையும், இதே அளவிலான மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC - Executive Officer Grade 3 & 4 Recruitment Notification( Last Date : 03.12.2018)...

JACTTO-GEO ~ இணைப்பு கலந்தாய்வுக் கூட்ட அழைப்பு...