செவ்வாய், 10 நவம்பர், 2020

*☀️தேசியக் கல்விநாள் 11.11.2020 அன்று கொண்டாடுதல் தொடர்பான பள்ளிக்கல்வித்துறை கூடுதல் செயலாளர் கடிதம் மற்றும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

*☀️தேசியக் கல்விநாள் 11.11.2020 அன்று கொண்டாடுதல் தொடர்பான பள்ளிக்கல்வித்துறை கூடுதல் செயலாளர் கடிதம்  மற்றும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

நாம் பணி மாறுதலோ அல்லது பதவி உயர்விலோ வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் போது, பணியேற்பிடைக் காலம் அனுபவிக்காத நிலையில், அதற்கு ஈடாக, நமது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் நம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என்ற விதி நடைமுறையில் உள்ளது. நாம் பதிய மறந்தோ அல்லது காலம் தவறி விட்டது இனிமேல் அதை பதிவு செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தால், தற்சமயம் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அரசாணை.

அன்பு ஆசிரிய நண்பர்களே, நாம் பணி மாறுதலோ அல்லது பதவி உயர்விலோ வேறு பள்ளிக்கு மாறுதலாகி செல்லும் போது, பணியேற்பிடைக் காலம் அனுபவிக்காத நிலையில், அதற்கு ஈடாக, நமது ஈட்டிய விடுப்பு சேமிப்பு கணக்கில் 5 நாட்கள் நம் பணிப்பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம் என்ற விதி நடைமுறையில் உள்ளது.  நாம் பதிய மறந்தோ அல்லது காலம் தவறி விட்டது இனிமேல் அதை பதிவு செய்ய முடியாது என்ற சூழ்நிலையில் இருந்தால், தற்சமயம் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அரசாணையை மேலே பகிர்ந்துள்ளேன். பதிய தவற விட்டவர்கள், அடுத்த குறை தீர் கூட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

IFHRMS முழுமையாக நடைமுறைக்கு வந்தபின் மாறுதலில் செல்லும் போது வழங்கப்படும் துய்க்காத ஈட்டிய விடுப்பினை கணக்கில் சேர்த்துக் கொள்ள 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை நீக்கப் படுகிறது.

மாண்புமிகு. தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு!பல்லாண்டுகாலமாக தீர்க்கப்படாத தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்- ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட ஆவன செய்திடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர். மன்றம்.திரு. நா.சண்முகநாதன் கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!

மாண்புமிகு. தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு!

பல்லாண்டுகாலமாக தீர்க்கப்படாத தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்- ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட ஆவன செய்திடுக!
 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர். மன்றம்.திரு. நா.சண்முகநாதன் கோரிக்கை விண்ணப்பம் படைப்பு!
***************************
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர்-மன்றம்.
திரு.நா. சண்முகநாதன் 
மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான தளபதி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் 10.11 .2020 (செவ்வாய்) நேரில் சந்தித்து  பல்லாண்டு காலமாக தீர்வு காணப்படாத தமிழ்நாட்டின் ஆசிரியர்,அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றித் தந்து உதவிடுமாறு கேட்டுக்கொண்டு உள்ளார்.

 கோரிக்கைகளை விளக்கமாக எடுத்துரைத்திடும் வகையிலான  கோரிக்கை  தெரிவிப்பு  விண்ணப்பம் படைத்து உள்ளார்.

திமுக தேர்தல்
அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளருமான திரு.டி.ஆர்.பாலு எம்.பி., அவர்களை சந்தித்தும் மனு அளித்து  கோரிக்கைகளை எடுத்து உரைத்து உள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை சந்தித்தும்   கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்.

*மத்தியரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்குதல் , புதிய தன் பங்கேற்பு ஓய்வூதியத்திட்டத்தினை இரத்துசெய்தல், ஆசிரியர்-அரசு ஊழியர்களின் மீது புணையப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள், பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப்பெறுதல் என்பது உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் படைக்கப்பட்டுள்ளது.*
*இச்சந்திப்பு ஆசிரியர்  அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் நம்பிக்கையைத் தந்துள்ளது.*

இவண்,
முனைவர். மன்றம். நா.சண்முகநாதன்,
மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்.