வியாழன், 14 நவம்பர், 2019

Go :4799 பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பதவி புதியதாக உருவாக்கப்பட்டு IAS அதிகாரி நியமனம்




நவம்பர் 14,
வரலாற்றில் இன்று.

ரசகுல்லா தினம் இன்று.

சுவைமிகு ரசகுல்லா, தங்களது பாரம்பர்ய உணவே என்று ஒடிசா மாநிலத்துடன் போராடி வென்ற மேற்கு வங்க அரசு நவம்பர் 14ஆம் தேதியை ரசகுல்லா நாளாக கொண்டாடுகிறது.

கடந்த கால ரசகுல்லா சண்டை?

பாலில் செய்யப்படும் இனிப்பு வகை உணவுப் பொருளான ரசகுல்லா, தங்கள் மாநிலத்தின் கண்டுபிடிப்பே என்று கூறி ஆண்டுதோறும் ’ரசகுல்லா திவாஸ்’ என்ற பெயரில் ஒரு நாள் கொண்டாட்டங்களை ஒடிசா மாநில அரசு கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கியது.
 ஒடிசாவின் பூரி நகரில் 13ஆம் நூற்றாண்டிலேயே ரசகுல்லா இருந்ததாகவும், பூரி ஜெகன்னாதருக்கு, லட்சுமி தாயார் ரசகுல்லா கொடுத்ததாக வரலாறு இருப்பதாகவும் ஒடிசா கூறிவந்தது. ரசகுல்லாவின் வரலாற்றைக் கண்டுபிடிக்க ஒரு தனி கமிட்டியே நியமிக்கப்படும் என்று கடந்த 2015இல் ஒடிசாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அப்போதைய அமைச்சர் பிரதீப் குமார் கூறினார்.

ஆனால், ரசகுல்லா தங்கள் மாநிலத்தின் உணவே என்று கூறி மேற்குவங்கம் களத்தில் இறங்கியது. ரசகுல்லாவானது திரிந்த பாலில் செய்யப்படுவது என்றும், திரிவடைந்த பாலானது சுத்தமில்லாததாக் கருதப்படும் நிலையில், அது கடவுளுக்குப் படைக்கப்பட வாய்ப்பே இல்லை என்று மேற்குவங்கம் வாதாடியது. இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று மேற்குவங்க மாநில உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் அப்துர் ரசாக் மோலா கூறியிருந்தார்.

 மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இனிப்பு தயாரிப்பாளர் நபீன் சந்திர தாஸ், கடந்த 1868இல் ரசகுல்லாவைக் கண்டுபிடித்ததாகவும் அம்மாநிலம் கூறிவந்தது.
 மேற்குவங்க மாநில உணவு கலாசாரத்தின் அடையாளங்களுள் ஒன்று ரசகுல்லா என முதலமைச்சர் மம்தா  தொடர்ந்து கூறிவந்தார். இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்துக்கு ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு கிடைத்தது.

புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருள்கள் அந்தந்த பகுதிகளுக்கே சொந்தம்.

ஆக ரசகுல்லா ஒரு வழியாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சொந்தமானதென  கடவுளையும், நீதி மன்றத்தையும் சாட்சியாக வைத்து பெறப்பட்ட ரசகுல்லா உணவு உரிமையை கொண்டாடும் வகையில் நவம்பர் 14ஐ ரசகுல்லா தினமாக அறிவித்துள்ளது மேற்குவங்க அரசு.
நவம்பர் 14,
வரலாற்றில் இன்று.


ராபர்ட் ஃபுல்டன் பிறந்த தினம் இன்று (1765).

 ராபர்ட் ஃபுல்டன் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவார்.

இவர் க்ளெர்மோன்ட் என்ற நீராவிக்கப்பலை உருவாக்கியமைக்காக பரவலாக அறியப்படுகிறார்.

1800ஆம் ஆண்டு இவர் நடாலியஸ் என்ற நீர்மூழ்கியை உருவாக்குவதற்காக நெப்போலியன் போனபார்ட்டால் பணிக்கப்பட்டார்.
வரலாற்றில் இதுவெ முதல் நீர்மூழ்கிக் கப்பலாகும்.
நவம்பர் 14,
வரலாற்றில் இன்று.

 உலக நீரிழிவு தினம் இன்று.
(World Diabetes Day)

உலகை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றான நீரிழிவு நோய்(சர்க்கரை நோய்) குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் இத்தினம் ஐக்கிய நாடுகள் அவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ள் பெஸ்ட் என்பவருடன் இணைந்து 1921இல் பிறட்ரிக் பான்ரிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த நாள் நினைவாகவே இன்றைய தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச ரீதியில் ஏறத்தாழ 150 நாடுகளில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து இந்நோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சர்வதேச நீரிழிவு நோய் சம்மேளனத்தினாலும் உலக சுகாதார நிறுவனத்தினால் 1991 முதல் முறையாக நீரிழிவு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது

CHILDLINE Oath for Children..


நவம்பர் 14,
வரலாற்றில் இன்று.


தேசிய குழந்தைகள் தினம் இன்று.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் நாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆனால் உலகம் முழுவதும் நவம்பர் 20ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

உலகிலேயே, அதிக அளவிலான குழந்தைகளைக் கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது.

குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்தால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்.

குழந்தைகள் தின விழா என்றால், பள்ளிகளில் கொண்டாட்டம் தான்.

அன்றைய தினத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு, பேச்சு, கட்டுரை, ஓவியம் என பல போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.

இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என்ற உண்மையை தெளிவுபடுத்துவதற்காக குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

அடிப்படை கல்வி பெற்று குழந்தைகள் முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெறவேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கமாக உள்ளது.