வெள்ளி, 15 அக்டோபர், 2021
பொறியியல் துணைக் கலந்தாய்வு அக்., 20 - 23 வரை நடைபெறும்
பொறியியல் துணைக் கலந்தாய்வு
அக்., 20 - 23 வரை நடைபெறும்
இன்று முதல் 17-ம் தேதி வரை https://t.co/ZCrlx04fCG இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
அரசுப்பள்ளிகளில் 6-12 வரை படித்தவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்
ரூ.5000 பரிசு - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை வடிவமைப்பு போட்டி!
ரூ.5000 பரிசு - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை வடிவமைப்பு போட்டி!
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் இலச்சினை (லோகோ) வடிவமைத்தால் 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 75ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவினையொட்டி பல்வேறு கல்விசார் நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்திய சுதந்திர தின விழா இலச்சினை (LOGO) வடிவமைப்பு போட்டி நடைபெறுகிறது. தேர்வு பெறும் இலச்சினைக்கு ரூபாய் 5 ஆயிரம் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
தவிர சிறந்த படைப்பு வழங்கிய மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக இலச்சினையுடன் 75ஆவது ஆண்டு சுதந்திரதினத்தினையும் மையப்படுத்தி உருவாக்கப்பட வேண்டும். 75ஆவது ஆண்டு சுதந்திர தினம் என்பது தமிழில் இடம் பெறவேண்டும். தேசியக் கொடியின் வண்ணங்கள் இடம் பெறுவது சிறப்பாகும்.
இந்தப் போட்டியில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்கலாம். ஆசிரியர்கள், கவிஞர்கள், வடிவமைப்பு ஓவியர்கள் உள்பட பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்கலாம்.
இலச்சினை (LOGO) வடிவமைப்பானது,
13 சென்டி மீட்டர் x 13 சென்டி மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும்.
கணினியில் வரைகலை செய்யப்பட்டதாகவோ, உரிய முறையில் கைகளால் வரையப்பட்டதாகவோ இருக்கலாம்
இலச்சினை வடிவமைப்பானது JPG, JPEG வடிவில் மாற்றப்பட்டு அதிக தரத்துடன் மின்னஞ்சல் வழி அனுப்ப வேண்டும்
இலச்சினை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்
வேறு எந்த வகையிலும் உருமாற்றம் செய்யப்பட்டதாக இருத்தல் கூடாது
இலச்சினை (LOGO) தன்னுடைய சொந்தப் படைப்பு என்ற உறுதிமொழிக் கடிதத்துடன் வழங்கவேண்டும்
ஒருவர் ஒரு இலச்சினை வடிவமைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்
இந்த போட்டியில் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது. வடிவமைப்பை நவம்பர் 15ஆம் தேதிக்குள் tnoulogo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.