புதன், 26 டிசம்பர், 2018
தவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை எப்படி திரும்பி பெறுவது?
ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்யும் போது, அக்கவுண்ட் நம்பர் என்டர் செய்யும்போது தவறுதலாக ஒன்று அல்லது இரண்டு நம்பரை மாற்றி போட்டு விடுகிறோம்,இதனால் நாம் அனுப்பிய பணம் வேறு ஒரு நபருக்கு சென்று விடுகிறது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் பல பேர் அவர்கள் பணத்தை பறி கொடுத்தது இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்வது என்பதே தெரியாமல் போய்விடுகிறது. அப்படி நினைக்காமல் நீங்கள் உங்கள் பணத்தை திரும்பபெறலாம்.
இதற்கு நீங்கள் தவறுதலாக வேறு ஒருவரின் அக்கவுண்டில் பணம் அனுப்பி விட்டிர்கள் என்றால், முதலில் இதை பற்றி பேங்க் மேனேஜரிடம் சென்று இந்த தகவலை வழங்க வேண்டும்.
மேனேஜரிடம் உங்கள் அக்கவுண்ட் நம்பர்,இதனுடன் எந்த அக்கவுண்டில் பணம் அனுப்பினீர்களோ அந்த அக்கவுண்ட் நம்பர், தேதி, நேரம் மற்றும் பணம் எவ்வளவு மதிப்பு என்பதை பற்றி தகவல் வழங்க வேண்டும்.
இதன் பிறகு, நீங்கள் பணத்தை எந்த பேங்கில் அனுப்பினீர்களோ அந்த பேங்கை தொடர்பு கொள்ள வேண்டும். பிறகு, உங்கள் பணத்தை திரும்பப் பெற வாடிக்கையாளர் இடம் இருந்து திரும்பி தர அனுமதி அளிக்கும் , இதனுடன் பேங்க் முழு நடவடிக்கையும் எடுத்து உங்கள் பணத்தை அந்த நபரிடம் இருந்து வாங்கி தந்து விடும் .
இந்த பாஸ்வேர்ட் எல்லாம் வேண்டாம்~ நிபுணர்கள் எச்சரிக்கை...
மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்ட நிலையில் பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக சாதாரணமான வார்த்தைகள் அல்லது எண்களை பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்வது பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக 1,2,3,4,5,6 என்ற 6 இலக்க எண்கள் தான்மிக மோசமான பாஸ்வேர்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டு தான் 2018ஆம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றில் எளிதாக ஊடுருவ முடிந்த 5 லட்சம் பாஸ்வேர்டுகளை ஆராய்ந்ததில் சிறப்பு குறியீடுகளுடன் இயன்ற வரை நீளமானதாக உள்ள பாஸ்வேர்டே மிகவும் பாதுகாப்பானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)