திங்கள், 21 செப்டம்பர், 2020
Poshan abhiyan போட்டியில் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை கலந்து கொள்ள ஊக்கப்படுத்தவும்.Poshan abiyan சார்ந்த செயல்பாடுகள் தொடர்பான வீடியோ லிங்க்.
Poshan abhiyan போட்டியில் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களை கலந்து கொள்ள ஊக்கப்படுத்தவும். இதற்கு தேவை மாணவர் பெயரில் ஈமெயில் ஐடி வேண்டும். அதன் மூலம் லாகின் செய்து கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு நிமிடத்திற்குள் பதிலளிக்க வேண்டும். கேள்வி ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருக்கும். நேரம் முடிந்தவுடன் சான்றிதழ் டவுன்லோட் ஆகிவிடும். ஆகையால் பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துமாறு அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய லிங்க் கீழே உள்ளது.பார்க்க கிளிக் செய்க.
செப்டெம்பர் 21, வரலாற்றில் இன்று.கவிஞர் தமிழ் ஒளி பிறந்த தினம் இன்று.
செப்டெம்பர் 21, வரலாற்றில் இன்று.
கவிஞர் தமிழ் ஒளி பிறந்த தினம் இன்று.
தமிழ்ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 - 24 மார்ச்சு 1965) புதுவையில் பிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.
கவிதைகள் மட்டுமல்லாது கதைகள் கட்டுரைகள் இலக்கியத் திறனாய்வுகள் மேடை நாடகங்கள் குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். திராவிடர் கழகத் தொண்டராக இருந்து பிற்காலத்தில் பொதுவுடைமைத் தோழராக வளர்ந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் இழி நிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் கவிதைகளில் சாடி எழுதினார்.
தென்னாற்காடு மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் சிற்றூரில் சின்னையா ,செங்கேணி அம்மாள் என்னும் இணையருக்குப் பிறந்தார். விசயரங்கம் என்பது தமிழ் ஒளியின் இயற்பெயர் ஆகும். பட்டுராசு என்றும் செல்லமாக அவரை அழைத்தனர். தமது தொடக்கக் கல்வியைப் புதுவை முத்தியாலுப் பேட்டை நடுநிலைப் பள்ளியில் கற்றார். உயர்கல்வியைக் கலவைக் கல்லூரியில் படித்தார். மாணவரா யிருந்தபோதே பாரதியார்,பாரதிதாசன் கவிதைகளில் மனம் பறி கொடுத்தார். பாரதிதாசனின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது.[1] நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். தமிழ் ஒளி திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையை அம்மாநாட்டில் படித்தார்.[சான்று தேவை] பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார்.
தமிழ் ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்க ளின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். 1949ஆம் ஆண்டில் 'புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்' என்னும் கவிதை எழுதினார். மக்கள் வாழ்வு உயர இலக்கியங்கள் பயன்படவேண்டும் என்பதுதான் அவர் கொள்கை. 'ஒரு கவிஞன் வாழ்ந்ததற்கு அடையாளமே அவனுடைய படைப்புகள்தாம்' என்று எழுதினார். நிலை பெற்ற சிலை, வீராயி, மே தின ரோஜா ஆகிய மூன்று காவியங்களும் தலித்து மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தலித்து மக்களின் விடுதலை அவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றை விவரிக்கின்றன.
வீராயி என்னும் காவியத்தில் கதைத் தலைவி வீராயி ஒரு தலித்துப் பெண்ணாகக் காட்டப் படுகிறாள். 5 சிறுகதைத் தொகுதிகள் அவர் எழுதினார். தமிழ் ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், தலித்துகள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி இயக்கப் படைப்பாக்கங்களில் சாதியச் சிக்கல்களை நேரடியாகப் பேசப்படாமல் இருந்த காலத்தில் தமிழ் ஒளி சாதியத்தையும் தலித்துகளின் விடுதலையையும் பாடினார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். தாமரை என்னும் இலக்கிய இதழில் வனமலர் என்னும் தலைப்பில் சில உருவகக் கதைகளை எழுதினார்.
ஐம்பதுகளின் இறுதியில் தமிழ் ஒளி திரைப்படத்துறை யில் கால் வைத்தார்.உலகம் என்னும் திரைப் படத்தில் ஒரு பாடலும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என்னும் படத்தில் ஒரு பாடலும் எழுதினார். எவரெசுட்டு மலை உச்சியில் தேசியக் கொடி ஏற்றி சாதனைப் படைத்த தேன்சிங்கைப் பாராட்டிக் கவிதை எழுதினார். நெய்வேலி யில் பழுப்பு நிலக்கரிச் சுரங்கம் தொடங்கி மின் உற்பத்தி நிலையம் அமைத்தபோதும் கவிதை படைத்தார். சோவியத்து யூனியன் புட்னிக் என்னும் விண் கலத்தை ஏவியபோது வரவேற்றும் அணுக்குண்டு அச்சுறுத்தலை எதிர்த்தும் கவிதைகள் வரைந்து வரலாறு படைத்தார். குழந்தைகளுக்கான பாடல்களையும் எழுதியுள்ளார். சக்தி நாடக சபாவுக்காக சிற்பியின் காதல் என்னும் நாடகம் எழுதினார். அக்கதை வணங்காமுடி என்னும் பெயரில் திரைப்படமாக உருவாகியது.
தமிழ் ஒளி, விஜய ரங்கம் விஜயன் சி.வி.ர என்பன அவருடைய புனை பெயர்கள் ஆகும். முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றி னார். சனயுகம் என்னும் திங்கள் இதழைத் தம் சொந்த முயற்சியில் நடத்தி மார்க்கியக் கருத்துகளைப் பரப்பினார். மாணவப் பருவத்தில் திராவிட நாடு, குடியரசு, புதுவாழ்வு ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார்.
அறிஞர் மு.வரதராசனார், எழுத்தாளர்கள் பூவண்ணன், விந்தன், செயகாந்தன் போன்றோர் தமிழ் ஒளியைப் பாராட்டினார்கள். மா.சு.சம்பந்தம் என்பவர் தமிழ் ஒளியின் கவிதைகளை வெளியிட்டார். செ.து.சஞ்சீவி என்பவர் தமிழ் ஒளியின் எழுதிய கவிதைகளைத் திரட்டித் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
தமிழ் ஒளி எழுதிய காவியங்களும் நூல்களும்
----------------------------------------------------
கவிஞனின் காதல்
நிலை பெற்ற சிலை
வீராயி
மே தின ரோசா
விதியோ வீணையோ
கண்ணப்பன் கிளிகள்
புத்தர் பிறந்தார்
கோசலக் குமாரி
மாதவிக் காவியம்
சிலப்பதிகாரம் காவியமா நாடகமா
திருக்குறளும் கடவுளும்
தமிழர் சமுதாயம்
செப்டெம்பர் 21, வரலாற்றில் இன்று.உலகின் உயரமான கட்டிடம் எனப்படும் துபாய் பூர்ஜ் கலிபா கட்டிட அமைப்பு கட்ட ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று (2004).
செப்டெம்பர் 21, வரலாற்றில் இன்று.
உலகின் உயரமான கட்டிடம் எனப்படும் துபாய் பூர்ஜ் கலிபா கட்டிட அமைப்பு கட்ட ஆரம்பிக்கப்பட்ட தினம் இன்று (2004).
Burj Khalifa, known as Burj Dubai prior to its inauguration, is a skyscraper in Dubai, United Arab Emirates, and is the tallest man-made structure in the world, at 829.8 m (2,722 ft).
Construction began on 21 September 2004, with the exterior of the structure completed on 1 October 2009. The building officially opened on 4 January 2010,and is part of the new 2 km2 (490-acre) development called Downtown Dubai at the 'First Interchange' along Sheikh Zayed Road, near Dubai's main business district. The tower's architecture and engineering were performed by Skidmore, Owings and Merrill of Chicago, with Adrian Smith as chief architect, and Bill Baker as chief structural engineer. The primary contractor was Samsung C&T of South Korea.
Burj Khalifa was designed to be the centerpiece of a large-scale, mixed-use development that would include 30,000 homes, nine hotels (including The Address Downtown Dubai), 3 hectares (7.4 acres) of parkland, at least 19 residential towers, the Dubai Mall, and the 12-hectare (30-acre) man-made Burj Khalifa Lake.
The building has returned the location of Earth's tallest freestanding structure to the Middle East, where the Great Pyramid of Giza had claimed this achievement for almost four millennia before being surpassed in 1311 by Lincoln Cathedral in England.
The decision to build Burj Khalifa is reportedly based on the government's decision to diversify from an oil based economy to one that is service and tourism based. According to officials, it is necessary for projects like Burj Khalifa to be built in the city to garner more international recognition, and hence investment. "He (Sheikh Mohammed bin Rashid Al Maktoum) wanted to put Dubai on the map with something really sensational," said Jacqui Josephson, a tourism and VIP delegations executive at Nakheel Properties.
Burj Khalifa compared with some other well-known tall structures
There are unconfirmed reports of several planned height increases since its inception. Originally proposed as a virtual clone of the 560 m (1,837 ft) Grollo Tower proposal for Melbourne, Australia's Docklands waterfront development, the tower was redesigned by Skidmore, Owings and Merrill (SOM). Marshall Strabala, an SOM architect who worked on the project until 2006, in late 2008 said that Burj Khalifa was designed to be 808 m (2,651 ft) tall.
The design architect, Adrian Smith, felt that the uppermost section of the building did not culminate elegantly with the rest of the structure, so he sought and received approval to increase it to the current height.It has been explicitly stated that this change did not include any added floors, which is fitting with Smith's attempts to make the crown more slender.
Emaar Properties announced on 9 June 2008 that construction of Burj Khalifa was delayed by upgraded finishes and would be completed only in September 2009. An Emaar spokesperson said "The luxury finishes that were decided on in 2004, when the tower was initially conceptualized, is now being replaced by upgraded finishes. The design of the apartments has also been enhanced to make them more aesthetically attractive and functionally superior." A revised completion date of 2 December 2009 was then announced. However, Burj Khalifa was opened on 4 January 2010, more than a month later.
செப்டெம்பர் 21, வரலாற்றில் இன்று. உலக அமைதி தினம் இன்று (International Day of Peace International)
செப்டெம்பர் 21, வரலாற்றில் இன்று.
உலக அமைதி தினம் இன்று (International Day of Peace International)
உலக அமைதி தினம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது.
அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)