வெள்ளி, 22 நவம்பர், 2019

பொதுத்தேர்வு மையம் தேர்வு செய்வதில் பாரபட்சமான செயல்பாடுகள் காணப்படுவதால் இப்பணியிலிருந்து வட்டாரக்கல்வி அலுவலர்களை முற்றிலுமாக விடுவித்திடுக! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வேண்டுகோள்!

அன்பானவர்களே! வணக்கம் .
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எனும் முடிவினை கைவிடுமாறு தமிழக அரசை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்துகிறது.  கல்விபயில்வதிலிருந்துமாணாக்கர்களை விரட்டிவிடும் ஆபத்து நிறைந்த  பொதுத்தேர்வுக்கான தேர்வு மையங்களை அமைத்தல் 
மற்றும் தேர்வு செய்தலில் கூட வட்டாரக்கல்வி அலுவலர்கள் தில்லுமுல்லு வேலை செய்வார்கள் என்பதை கண்டும்,கேட்டும் ,அறிந்தும் அதிர்ச்சி ஏற்படுகிறது. பொதுத்தேர்வு மையங்கள்  அமைத்தலில்  வட்டாரக்கல்வி அலுவலர்களின் செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. இம்மாதிரியான, ஒருமாதிரியான அலுவலர்களிடம் மாட்டிக்கொண்டு தொடக்கக்கல்வி படும்பாடும் நினைத்து பெருத்தக் கவலை ஏற்படுகிறது. இம்மாதிரியான அலுவலர்களிடமிருந்து  
கல்வியைக் காப்பாற்ற யாராவது 
ஒரு தேவதூதன் வந்துதிக்க மாட்டாரா?!என்று ஆதங்கமும்,
ஏக்கமும் எழுகிறது.
பள்ளியின் மொத்த மாணாக்கர் எண்ணிக்கை குறைவாக இருப்பினும்  தனக்கு விசுவாசமான தலைமையாசிரியர்களின் பள்ளி எனில் தேர்வு மையம் என்று அறிவித்து தேர்வினை, தேர்வுமையத்
தகுதியை பாழ்படுத்துவது வேதனையளிக்கிறது.
பெரும் எண்ணிக்கையிலான மாணாக்கர்கள் கல்வி பயிலும் பள்ளியை தேர்வு மையம் இல்லை என்று அறிவிப்பதும், விரல்விட்டு எண்ணும் சொற்ப அளவிலான எண்ணிக்கையில் குழந்தைகள் கல்வி பயிலும் பள்ளியை 
சுயஆதாயத்தினை மனதில் கொண்டு தேர்வு மையம் என்று அறிவிப்பதும் வேடிக்கையானதாகும்.
 
1)தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து வெளிப்படையாக நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் .நெறிமுறைகள் அனைத்துத்தலைமையாசிரியர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.

2)குறுவளமையத்தின் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பள்ளிகளை பார்வையிட்டு அப்பள்ளியின் புறவய,அகவயக் கட்டமைப்புகளை  கணக்கில்,கவனத்தில் கொள்ளச்செய்து இதனடிப்படையில் குறுவளமையப் பள்ளிகளின் 
அளவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதனடிப்படையில்  தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

3)பத்து  மாணாக்கர்களுக்கு மேல் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் கல்விபயிலும் பள்ளிகளை மட்டுமே தேர்வு மையமாக அறிவிப்பதற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

4)வட்டாரக்கல்வி அலுவலர்களை தேர்வு மையத்தேர்வுக் குழுவில் இருந்து வெளியேற்றிட வேண்டும். ஏனெனில் இவ்வலுவலர்கள் சங்கம் சார்ந்தும், சுய ஆதாயம் சார்ந்தும் அதிகார துச்பிரயோகத்தில் ஈடுபடும் வாடிக்கையும் , வழக்கமும் உடையவர்கள். தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வள்ளல்களைப்போன்று தேர்வு மையப்பரிசுகளை வாரி  வழங்கக்கூடியவர்கள்.ஆகையால் ,
இம்மாதிரியான அலுவலர்களை  தேர்வு மையப்பணிகளிலிருந்து விலக்கிட வேண்டும். 

4)தேர்வுமையத் தேர்வு பிரச்னைகளில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் நேரடித்தலையீடு செய்திட வேண்டும்.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பிலான மேற்கண்ட கோரிக்கைகளின் மீது நேரடிக்கவனம் செலுத்துமாறு கல்வித்துறை உயர்அலுவலர் பெருமக்களிடம்  வேண்டுகிறேன்.
நன்றி.
-முருகசெல்வராசன்.

பள்ளிகளின் அடைவு ஆய்வு சார்ந்து நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை நாள்:21.11.2019


எடை குறைவான குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவு பட்டியலை வெளியிட்டது யுனிசெப்...


சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் (2019-20) உள்ள வருமான வரி மாற்றங்கள்...

1. Standard Deduction
சென்ற ஆண்டு-40,000
இந்த ஆண்டு-50,000

2. Section 87A
சென்ற ஆண்டு-₹ 2500
இந்த ஆண்டு-₹ 12500

குறிப்பு: 

Taxable Income என்பது உங்கள் மொத்த ஆண்டு வருவாயில் HRA, Prof.Tax, LIC Premium, NHIS தொகை என அனைத்தும் கழிக்கப்பட்டு வரும் மீத தொகையாகும்.

சம்பளதாரர்களுக்கான வருமான வரி விபரம்-FY 2019-20...

Taxable Income 5 லட்சமும் அதற்குக் குறைவாகவும் பெறும் சம்பளதாரர்கள் வருமான வரி கட்டத் தேவையில்லை.

Taxable Income 5 லட்சத்தைத் தாண்டுபவர்கள் கீழ்க்காணும் வகையில் வரிப்பிடித்தம் செய்யப்படும்.

0 to 2.5 lakh-0%
2.5 to 5 lakh-5%
5 to 10 lakh-20%
10 lakh above-30%
Cess-4% on Income tax...