புதன், 27 நவம்பர், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,நாமக்கல்
மாவட்டக்கிளை அதிவிரைவு மாவட்ட செயற்குழுக் கூட்ட அழைப்பிதழ்.
அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் பரமத்தி மற்றும் கபிலர்மலை ஒன்றியங்களின் பள்ளித் தூய்மைப்பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் பராமரிப்புத் தொகையினை வலியுறுத்தி  நாமக்கல் மாவட்ட ஊரகவளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இன்று(27.11.19-புதன்)பிற்பகல் 05.30மணியளவில் கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன்,மாவட்டத் துணைச்செயலாளர் மெ.சங்கர்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெ.சதீசு,மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபானி, பரமத்தி ஒன்றியத் தலைவர்.நா.ரங்கசாமி,ஒன்றியச் செயலாளர் க.சேகர்,ஒன்றியப்பொருளாளர் கு.பத்மாவதி, நாமக்கல் ஒன்றியச்செயலாளர் அ.செயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இச்சந்திப்பு மேற்கண்ட பரமத்தி மற்றும் கபிலர்மலை ஒன்றியப்
பள்ளிகளின் தூய்மையை,
சுகாதாரத்தை பேணிப் பாதுகாத்து  பராமரித்திடுவதற்கு பேருதவியாக அமைந்திடும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நம்பிக்கைக் கொள்கிறது.
-முருகசெல்வராசன்.

கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள அரசு பள்ளிகளில் ‘தேர்தல் விழிப்புணர்வு மன்றம்' தொடக்கம் ~ தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…


உடல் ஆரோக்கியம், புத்துணர்ச்சியுடன் இருக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு தண்ணீர் குடிக்க நினைவூட்டல்...


நவம்பர் 27,
வரலாற்றில் இன்று.

 கின்னஸ் புத்தகத்தை பதிப்பித்தவர்களுள் ஒருவரான  மெக்விர்ட்டர்,  ஐரிஷ் குடியரசு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று (1975).

 கின்னஸ் புத்தகத்தைப் போலவே அது தோன்றிய வரலாறும் மிகவும் சுவாரசியமானது.

1951ஆம் ஆண்டு "கின்னஸ் பிரீவரீஸ்' என்ற நிறுவனத்தின் பொது மேலாளராகிய "சர்.ஹக் பீவர்' (Sir.Hugh Beaver) அயர்லாந்தில் உள்ள "ஸ்லானி' (River Slaney) என்ற ஆற்றுக்குப் பறவைகளை வேட்டையாடச் சென்றார். அவர் "கோல்டன் ப்ளோவர்' (golden plover) என்ற பறவையை வேட்டையாட விரும்பினார். ஆனால் எத்தனை முறை துப்பாக்கியால் சுட்டும் அவரால் ஒரு ப்ளோவர் பறவையைக்கூட வீழ்த்த முடியவில்லை.

உடனே அவர் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. தாம் சுட விரும்பும் பறவைதான் உலகிலேயே வேகமாகப் பறக்கும் பறவையா? அல்லது வேறு ஏதாவது மிக வேகமாகப் பறக்கும் பறவைகள் உள்ளனவா? அப்படி இருப்பின் அவற்றின் பெயர் என்ன? இத்தகைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கத்தக்க வகையில் எந்தப் புத்தகமும் அன்று இல்லை. மேலும் தகவல் வலையம் போன்று வேறெந்த ஊடகங்களும் இல்லாத சமயம் அது. ஆகவே இப்படிப்பட்ட விஷயங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாம் என எண்ணினார். இதற்கான முயற்சியைத் தாமே மேற்கொண்டார்.

அவரது நிறுவனத்தில் பணிபுரிந்த "கிறிஸ்டோபர் சாட்டாவே' (Christopher chataway) என்ற ஊழியர் இலண்டனில் "நோரிஸ்' (Norris) மற்றும் "ராஸ் மெக் விர்ட்டர்' என்ற இரு பல்கலைக்
கழக மாணவர்கள் இப்படிப்பட்ட அரிய சாதனை மற்றும் அதிசயத் தகவல்களை ஆதாரங்களுடன் திரட்டி வருவதாகக் கூறினார்.

அவர்கள் இருவரும் தொகுத்து வைத்திருந்த தகவல்களை ஹக் பீவர் "கின்னஸ் உலக சாதனைப் புத்தகம்' (GUINNESS BOOK OF WORLD RECORDS) என்ற பெயரில் 1954-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டார். முதலில் 1000 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டன. அவை உடனே விற்றுத் தீர்ந்தன.

1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி வெளியான புத்தகம் 198 பக்கங்களுடன், அரிய புகைப்படங்களுடன் வெளியானது. இங்கிலாந்தில் அந்த ஆண்டு அதிகம் விற்பனையான புத்தகம் அதுவே ஆகும். "அரிய தகவல்களை மக்களுக்குத் தர வேண்டும் என்ற நோக்கத்திற்கு மட்டுமே அன்றி பணம் சம்பாதிப்பதற்கு அல்ல!' என்றார் ஹக் பீவர். உலகிலேயே காப்புரிமை (Copy right) பெற்ற புத்தகங்களிலேயே அதிகம் விற்பனையாவது இது மட்டுமே!

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் இப்புத்தகம் வெளியாகிறது. ஆண்டுதோறும் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து அளித்த காரணத்தினால் நோரிஸ் மற்றும் மெக்விர்ட்டர் ஆகிய இருவரும் அதிக தகவல்களை அறிந்து வைத்திருந்தனர். எனவே சிறுவர்களின் கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று அந்நாளில் மிகப் பிரபலம் அடைந்தது.

முதன்முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த இப்புத்தகம் தகவல்களின் அவசியம் கருதி 37 உலக மொழிகளில் அச்சடிக்கப்படுகிறது. தனிமனித சாதனைகள், அதிசய விலங்குகள், அதிசயப் பறவைகள், அதிசய இடங்கள், ஆபத்து நிறைந்த இடங்கள் போன்ற அரிய தகவல்களின் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது.

கின்னஸ் நிறுவனம் நவம்பர் மாதம் 9ஆம் நாளை "சர்வதேச கின்னஸ் சாதனை தினம்' ஆக அறிவித்துள்ளது. இதற்கு முன் ஒருவர் செய்த சாதனையை மற்றொருவர் முறியடித்தால் அது இந்த நாளில் ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதல் பொது மக்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இதிலும் ஒரு சாதனையாக 2006ஆம் ஆண்டு ஏறக்குறைய பத்து நாடுகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்தனர். இதன் காரணமாக 2244 புதிய சாதனைகள் உலகுக்குக் கிடைத்தன.

மிருகங்கள் மற்றும் பறவைகளை வேட்டையாடுதல் போன்ற தகவல்களை இந்நிறுவனம் வெளியிடுவதில்லை. 1976ஆம் ஆண்டு "கின்னஸ் சாதனைப் புத்தக அருங்காட்சியகம்' "எம்பயர் ஸ்டேட்' கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அது பல காரணங்களால் 1995ஆம் ஆண்டு மூடப்பட்டது. 2010ஆம் ஆண்டு முதல் டோக்கியோ, கோபன்ஹேகன், சான் அன்டோனியோ போன்ற நகரங்களில் சிறிய அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. கின்னஸ் சாதனைகள் தொலைக்காட்சித் தொடர்களாக இங்கிலாந்தில் ஒளிபரப்பப்பட்டன. இதிலும் சாதனை நிகழ்ந்தது. ஏறத்தாழ 10 லட்சம் பேர் இந்நிகழ்ச்சியை விரும்பிப் பார்த்தனர்.

Alan Ross McWhirter (12 August 1925 – 27 November 1975) was, with his twin brother, Norris, the co-founder in 1955 of Guinness Book of Records (known since 2000 as Guinness World Records) and a contributor to the television programme Record Breakers. He was assassinated by the Provisional Irish Republican Army (IRA) in 1975.
நவம்பர் 27,
வரலாற்றில் இன்று.

 ஆன்டர்ஸ் செல்சியஸ் அவர்களின் பிறந்த தினம் இன்று


 செல்சியஸ்
 சுவீடிய வானியலாளர், இயற்பியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார்.

 1730 முதல் 1744 வரை உப்சாலா பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இதே காலத்தில் 1732 முதல் 1735 வரை ஜெர்மனி, இத்தாலி, பிரான்சு நாடுகளிலிருந்த குறிக்கத்தக்க வான் ஆய்வகங்களுக்குச் சென்று வந்தார்.

1741இல் உப்சாலா வானியல் ஆய்வகத்தை நிறுவினார்.

1742இல் வெப்பநிலையை அளக்க செல்சியஸ் அளவுகோலை நிறுவினார்;

 இதனையொட்டியே இந்த அனைத்துலக அலகுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.
நவம்பர் 27,
வரலாற்றில் இன்று.

 பாரிஸ் நகரில், ஆல்பிரட் நோபல், நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து, தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்த தினம் இன்று(1895).
நவம்பர் 27,  வரலாற்றில் இன்று.

 முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் நினைவு தினம் இன்று.

பிற்படுத்தப்
பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர்.

துணிச்சலான செயல்புரிந்த அரசு ஊழியர்களுக்கு அண்ணா விருது வழங்கல் ~ விண்ணப்பிக்க அழைப்பு…


நாமக்கல் மாவட்டத்தில் சர்க்கரை கார்டுகளை மாற்றி கொள்ள வாய்ப்பு...


நவம்பர் 27,
வரலாற்றில் இன்று.

முதல் முகமாற்று சிகிச்சை நடந்த தினம் இன்று (2005)

நாய் கடித்ததால் விகாரமாக மாறிப்போன இசபெல்லி டினோரிக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பிரான்சைச் சேர்ந்த டாக்டர் பெர்னார்ட் தேவாசெல்லே மற்றும் அவரது குழுவினர் கடந்த 2005ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி உலகின் முதல் முகமாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தினர்.

ஏற்கனவே மூளைச்சாவு அடைந்த ஒருவரின் முகப்பாகங்கள் இவருக்கு பொருத்தப்பட்டன. முதலில் வெற்றி கரமாக முடிந்த அறுவை சிகிச்சை நாளடைவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து டினோரி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனாலும் பக்க விளைவுகள் அதிகரித்து கடந்த ஆண்டு அவரது உடல்நிலை மோசமான நிலையை அடைந்தது.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மரணம் அடைந்துள்ளார். 10 ஆண்டுகள் அவர் உயிர் வாழ்ந்ததாலும் பக்க விளைவுகளால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். இந்த தகவலை தற்போதுதான் ஏமியன்சில் உள்ள மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இசபெல்லியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் இதுவரை அவர் மரணம் குறித்த தகவலை வெளியிடாமல் இருந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முகமாற்று ஆபரேசனின்போது பக்க விளைவுகள் ஏற்படுவதை தடுப்பதற்காக அவருக்கு ஸடீராய்டு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மருந்துகளின் வீரியத்தினால் இரண்டு புற்றுநோய் கட்டிகள் உருவாகி உள்ளன. இதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.