இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசின் செலவுகளை குறைக்கும் வகையில் அரசு பணியிடங்களில் தேவையற்ற பணியிடங்களை கண்டறிய முன்னாள் முதன்மை செயலர் ஆதிசேஷையா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு எந்தெந்த பணியிடங்களை தனியாருக்கு தரலாம் என குழு ஆய்வு செய்து அறிக்கையை 6 மாதத்தில் அரசுக்கு அளிக்கும். தமிழக அரசின் செலவுகளை குறைக்கும் முயற்சியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.