புதன், 15 நவம்பர், 2017
பள்ளி மாணவர்களுக்கு 'கலையருவி' திருவிழா : நிகழ் கல்வியாண்டு முதல் அமல்...
தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளைத் தெரிந்து கொள்ளவும், அத்தகைய கலைகளைப் பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாகவும் 'கலையருவி' என்ற கலைத் திருவிழாவை நிகழ் கல்வியாண்டு முதல் நடத்த தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தின் கலாசாரம் மற்றும் பாரம்பரியக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், மதிப்பெண்கள் மட்டும் எடுத்தால் போதும் என்ற நிலை மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதனால், மாணவர்கள் சுயமாகச் சிந்திக்க முடியாத, தனக்குள் இருக்கும் தனித் திறமையை வெளிப்படுத்த நேரமில்லாத நிலை உள்ளது. மேலும், இதற்கு பெற்றோர்களும், பள்ளிகளில் ஆசிரியர்களும் அனுமதிப்பதில்லை. மாணவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டுகளும், மன அமைதி, சிந்திக்கும் ஆற்றலுக்குத் துணை புரியும் வகையில் ஓவியம், இசை, நடனமும், மொழித் திறனை வளர்த்துக் கொள்ள கவிதை, கட்டுரை, கதை, பாடல் எழுதுதல் உள்ளிட்டவையும் முக்கியத்துவம் பெறுகின்றன.
எனவே, இதற்காகப் பள்ளிகளில் பாட வேளை ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு நடத்தி, மதிப்பெண்களும் வழங்கப்பட்டு வந்தன. காலப் போக்கில் இத்தகைய பாடப் பிரிவுகளுக்கு அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் காலிப் பணியிடங்களாகவும், ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளில் அத்தகைய சிறப்புப் பாடங்களுக்குப் பாட வேளை ஒதுக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டன. இத்தகைய போக்கை மாற்ற தமிழக அரசு, பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் வெளிப்பாடாக பள்ளிக் கல்வித் துறை சார்பில், நிகழ் கல்வியாண்டு முதல் மாணவர்களின் தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், தமிழக கலைகளைக் கற்றுக் கொள்ளவும் 'கலையருவி' என்ற கலைத் திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் கலைத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கலை வடிவங்களில் மொழியாற்றல், பாரம்பரியம், செவ்வியல், நவீனம், ஆன்மிகம், நாட்டுப்புறக் கலைகள் என சுமார் 154 -க்கும் மேற்பட்ட கலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய மாணவர்களின் தனித் திறன், குழுத் திறன்களை வளர்த்து கொள்ளும் விதமாக, போட்டிகளைத் தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என நான்கு பிரிவுகளில், பள்ளிகள் அளவில் நடத்த வேண்டும். பின்னர், அவற்றில் முதலிடம் பெறுவோருக்கு ஒன்றியம், கல்வி மாவட்டம், மாவட்டம், இறுதியாக மாநில அளவில் என அடுத்தடுத்த நிலைகளில் தரமுடன் கூடிய திறனை வெளிப்படுத்துவோருக்கு அங்கீகாரமும், பரிசுகளும் அளிக்க இந்தத் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் பள்ளிக் கலைத் திருவிழா வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகப் பள்ளிக் கல்வித் துறை நிகழ் கல்வியாண்டு (2017 - 18) முதல் கலைத் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திறந்தநிலை பல்கலை பட்டம் அரசு வேலைக்கு தகுதியானது
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டம் செல்லும்; அரசு வேலைக்கும் தகுதியானது' என, பல்கலை அறிவித்துள்ளது.இது குறித்து, பல்கலையின் பதிவாளர், விஜயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திறந்தநிலை பல்கலை, தமிழக அரசின் பல்கலையாகும். பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அனுமதியுடன், பட்டயம் முதல் ஆராய்ச்சி படிப்பு வரைநடத்தப்படுகிறது. இந்த பல்கலையில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த பின், இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு, அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் சேர, தகுதி உடையவர்கள் என, அரசு அறிவித்து உள்ளது. இந்நிலையில், 'திறந்தநிலை பல்கலையில் படித்த பட்டங்கள் செல்லாது' என, எதிர்மறையான தகவல்கள் பரவுகின்றன.
திறந்தநிலை பல்கலை, 2003ல் துவங்கப்பட்டது. அதற்கு முன், திறந்தநிலை கல்வி முறையில், பல பல்கலைகள், அடிப்படை கல்வித் தகுதி இன்றி,நேரடியாக, முதுநிலை படிப்புகளை வழங்கியுள்ளன.அதில், படித்தவர்களின் படிப்பு குறித்தே, தற்போது, சில வழக்குகள் உள்ளன. திறந்தநிலை பல்கலையால் நடத்தப்படும் படிப்புக்கும், இந்த வழக்குகளுக்கும், எந்ததொடர்பும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மழையை அளப்பது எப்படி
மழையை சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100மிமீ (4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200மிமீ(8அங்குலம் உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0மிமீ முதல் 25மிமீ (0.98 அங்குலம்) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செலுத்துமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.
*அளவிடும் முறை*
பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லி லீட்டர் அளவில் எடுக்கவேண்டும். நீர் ஒரு திரவம் என்பதால் மில்லி லீட்டர்என்ற அளவைவிட லீட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும். மழையை அளவிடும் SI அலகு மில்லி லீட்டர் ஆகும்.
*"ஒரு மில்லிமீட்டர் மழை அளவு என்பது ஒரு லிட்டர் / ஒரு சதுர மீட்டருக்கு சமம்."*
எனவே, 10மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ளவும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு(சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும்.
'நிகர்நிலை பல்கலைகள் இனி, பல்கலை என்ற பெயரை, கட்டாயமாக பயன்படுத்தக்கூடாது' என, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுஉள்ளது.
தனியார் கல்லுாரிகளுக்கு, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில், பல்கலைகளுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தங்கள் பெயருடன், 'பல்கலை' என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன. இதுகுறித்து, பல்வேறு புகார்கள் எழுந்ததால், உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன் விபரம்:யு.ஜி.சி., விதிகளின் படி, தனியார் உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கு இணையான அந்தஸ்து பெற்று, தங்களை பல்கலைகளாக பிரபலப்படுத்துகின்றன. இது, விதிகளுக்கு முரணானது. எதிர்காலத்தில், அரசு நிறுவனங்களை தவிர, வேறு எந்த கல்லுாரியும் பல்கலை என, தங்களை பிரபலப்படுத்தக்கூடாது. பல்கலை என்ற பெயரை, உடனே நீக்க வேண்டும். இதுகுறித்து, டிச., 3க்குள், செயல்படுத்திய அறிக்கையை, யு.ஜி.சி., தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அனைத்து மாநில உயர்கல்வித்துறைக்கும், பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., செயலர், பி.கே.தாகூர் அனுப்பியுள்ள
சுற்றறிக்கை:
உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் யு.ஜி.சி., விதிகளின்படி, எந்ததனியார் கல்வி நிறுவனமும், தங்கள் பெயருடன் பல்கலை என, கூறக்கூடாது. ஆனால், அடைப்புக்குறிக்குள் 'பல்கலைக்கு இணையாக கருதப்படும்' என்ற, வார்த்தையை பயன்படுத்தலாம். எதிர்காலத்தில், எந்த விதமான வார்த்தையை பயன்படுத்தலாம் என, நிகர்நிலை அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள், யு.ஜி.சி.,க்கு கருத்து தெரிவிக்கலாம்.
அதன்பின், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஒருமித்த முடிவு எடுத்து, ஒரு வார்த்தையை அறிவிக்கும். தற்போது, பல்கலை என்ற வார்த்தையை நீக்கி, அதற்கான ஆதாரத்துடன், வரும், 26க்குள், யு.ஜி.சி.,க்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
TN 7th PAY - ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம் - அரசு அறிவிப்பு.
01-01-2016 அன்று ஊதிய நிர்ணயம் செய்ய விருப்பம் தெரிவிக்கும் போது ஜனவரி முதல் நாள் ஊதிய உயர்வு உள்ளவர்கள் தனது 31-12-2015 ஊதியத்தினை அடிப்படையாகக்கொண்டு ஊதியநிர்ணயம் செய்துகொள்ளலாம்-அரசு அறிவிப்பு.
Letter No.57907 Dt: November 13, 2017 Tamil Nadu Revised Pay Rules, 2017 – Fixation of Pay with reference to Tamil Nadu Revised Pay Rules, 2017 - Certain clarification – Regarding