புதன், 30 அக்டோபர், 2019

தேசிய மக்கள் தொகைக் கல்வி- பள்ளிகளில் போஸ்டர் தயாரித்தல் போட்டி- நடத்துதல்- சார்ந்து இயக்குநர் செயல்முறை







மக்கள்தொகைக் கல்வி தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி (Role Play) நடத்துதல் - தொடர்பாக......
















5,8ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள் 22.10.2019







நாமக்கல் மாவட்டம்_சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்துதல் சார்ந்து..


*🌷அக்டோபர் 30, வரலாற்றில் இன்று*
-----------------------------------------------------
*ஹோமி ஜஹாங்கீர் பாபா பிறந்த தினம் இன்று.*

*இந்திய அணுவியல் துறையின் தந்தையாக விளங்கிய ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் பிறந்தார். 1932ல் மேற்படிப்பை முடித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 1934ஆம் ஆண்டில் டாக்டர் பட்டம் பெற்றார். இவர் நீல்ஸ் போருடன் இணைந்து குவாண்டம் கோட்பாடு ஆராய்ச்சியும் வால்டர் ஹைட்லருடன் இணைந்து காஸ்மிக் கதிர்கள் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்துள்ளார்.*

*இவருக்கு பாரதத்தின் உயர் விருதான பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது (1954). இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவுக்கூறப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 1967 முதல் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம் எனப் பெயரிடப்பட்டது.*

 *அணுசக்தி ஆணையம் அணுசக்தி துறை ஆகியவற்றை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார். இதன் காரணமாக இந்தியாவின் முதல் அணு உலை 1956ல் மும்பை அருகில் உள்ள டிராம்பேயில் செயல்படத் தொடங்கியது. இது ஆசியாவின் முதல் அணு உலை என்ற பெருமையும் பெற்றுள்ளது. ஹோமி ஜஹாங்கீர் பாபா தனது 56வது வயதில் (1966) மறைந்தார்.*
*🌷அக்டோபர் 30, வரலாற்றில் இன்று.*
----------------------------------------------------

*முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தினம் இன்று.*

*முத்துராமலிங்கத் தேவர் 6( அக்டோபர் 30,*
*1908 – அக்டோபர் 29, 1963 ) தென் தமிழகத்தில்*
*இராமநாதபுரம் மாவட்டம் , பசும்பொன்*
*எனும் சிற்றூரில் பிறந்தவர்.*


*ஆன்மிகவாதியாகவும் சாதி எதிர்ப்புப்*
*போராளியாகவும் சுதந்திரப் போராட்டத்*
*தியாகியாகவும் விளங்கியவர்.*

*நேதாஜி*
*சுபாஷ் சந்திர போசின் தலைமையில்*
*ஆங்கிலேய அரசை எதிர்த்த இந்திய*
*தேசிய இராணுவத்திற்கு*
*தமிழகத்திலிருந்து பெரும் படையை*
*திரட்டி அனுப்பிய பெருமை இவரைச்*
*சாரும்.*

 *தலைசிறந்த பேச்சாளராகவும்*
*ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது*
*பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக*
*அரசு பசும்பொன்னில் வருடந்தோறும்*
*கொண்டாடி வருகின்றது.*
*🌷அக்டோபர் 30, வரலாற்றில் இன்று.*
-----------------------------------------------------
*உலக சிக்கன தினம் இன்று.*

*"சிறுகக் கட்டி பெருக வாழ்" என்பதை மக்கள் உணர வேண்டும்".*

*"இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு" என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களது சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்.*

*மக்களிடையே சிக்கன உணர்வினை ஏற்படுத்தி சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.*

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை ~ தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத்தேர்வு டிசம்பர் 2019 - பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் - குறித்து…