புதன், 30 டிசம்பர், 2020

National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்ய தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!..

National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்ய தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்து சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!..


பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...
சிறுபான்மையினர் நலத்துறையின் கடிதங்களில் ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினர் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் சார்பாக அப்பள்ளித் தலைமையாசிரியர்கள் அருகாமையிலுள்ள தனியார் இணையவழிச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்வதாகவும் அதற்காக , தங்களுக்கென பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்ட User Name மற்றும் Password அம்மைய நிர்வாகிகளுக்கு கொடுப்பதாகவும் , அத்தனியார் மைய நிர்வாகிகளில் ஒரு சிலர் அதைத் தவறாகப் பிரயோகித்து மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை online மூலம் National Scholarship Portal - ல் சேர்த்து சந்தேகிக்கப்படும்படியான ஒரே வங்கிக்கணக்கு எண்களைக் கொடுத்து பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே , இதுகுறித்து , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு காணொலிக்காட்சி மூலமாக நடந்த கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது. எனவே , பார்வையிற்காண் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளவாறு அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் User Name மற்றும் Password பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்தம் தகவல்களுக்கு தாமே பொறுப்பு என்பதால் அவற்றை மறு ஆய்வு செய்து சான்றளிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் , அனைத்து தலைமையாசிரியர்களும் அடுத்த இரு தினங்களுக்குள் ( 31.12.2020 ) இப்பணியை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...
🙏மன்றம்🙏

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு மத்திய அரசு..பிப்ரவரி மாதம் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு மத்திய அரசு..

பிப்ரவரி மாதம் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு...

*🖥️INCOME TAX - நாளைக்குள் (31.12.2020) வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால்,இருமடங்கு அபராதம்.

*🖥️INCOME TAX - நாளைக்குள் (31.12.2020) வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால்,இருமடங்கு அபராதம்.:*

*Income-Tax-Return-FIling:*


*நாளைக்குள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், கடந்த ஆண்டைவிட, இருமடங்கு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டியதாகிவிடும்.வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையே முக்கியமான வித்தியாசம், உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யாதபட்சத்தில், விதிக்கப்படும் அபராதம் தான்.கடந்த ஆண்டு அபராதம், 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது, இந்த ஆண்டு, இரு மடங்கு உயர்த்தப்பட்டு, 10 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.*



 *இருப்பினும், அபராதம் அல்லது தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம், உங்கள் நிகர மொத்த வருமானம் அதாவது, தகுதியான கழிவுகள் மற்றும் வரி விலக்குகளை கோரிய பிறகான வருமானம், 5 லட்சம் ரூபாயை தாண்டினால் மட்டுமே வசூலிக்கப்படும்.உங்கள் நிகர மொத்த வருமானம், குறிப்பிட்ட நிதியாண்டில், 5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், அபராதமாக ஆயிரம் ரூபாய் மட்டுமே விதிக்கப்படும்.வழக்கமாக, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தவற்கு, தனிநபர்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும், ஜூலை, 31ம் தேதி கடைசி தேதியாகும்.ஒருவேளை இதற்குள் தாக்கல் செய்ய முடியாமல் போய்விட்டால், அதே ஆண்டில், டிசம்பர், 31ம் தேதிக்குள், தாமத மாக தாக்கல் செய்யலாம்.*

 
*ஆனால், தாமதக் கட்டணமாக, 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியதிருக்கும். ஒருவேளை, டிசம்பர், 31ம் தேதிக்குப் பிறகு, மார்ச், 31ம் தேதிக்கு முன்ன ராக தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், தாமதக் கட்டணம், 10 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படும்.இம்முறை தாக்கல் செய்வதற்கான கெடு, டிசம்பர், 31வரை நீட்டிக்கப்பட்டதால், வழக்கமாக விதிக்கப்படும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட மாட்டாது.ஆனால், ஜனவரி, 1ம் தேதி முதல், மார்ச் இறுதிக்குள் தாக்கல் செய்யப்படும்பட்சத்தில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும்.*


 *ஏனென்றால், இம்முறை தாமதமாக தாக்கல் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டாலும், தாமதக் கட்டணத்தை வசூலிப்பதற்கான வருமான வரிச் சட்டத்தில், எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.தாமதக் கட்டணம் குறித்த, வருமான வரி சட்டத்தின், 234எப் பிரிவில், இரண்டு அடுக்கு அமைப்பு உண்டு.அதன் படி, 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் என, குறிப்பிட்ட தேதிகளுக்கு பிறகு கட்டணம் வசூலிக்கப்படும்.இந்த பிரிவில் மாற்றம் செய்யப்படாததால்,நேரடியாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.எனவே, இரு மடங்கு அபராதத்தை தவிர்க்க, நாளைக்குள் வருமான வரி படிவத்தை தாக்கல் செய்வது தான் ஒரே வழி.*