சனி, 24 பிப்ரவரி, 2018

ஜாக்டோ-ஜியோ மகளிர் மறியலில் (சென்னை-24.02.18) கலந்துகொண்ட நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்ற பொருப்பாளர்கள்....

அன்பானவர்களே!வணக்கம்.

ஜாக்டோ-ஜியோவின்
( 24.02.18-சனி)
நான்காம்நாள்
 மகளிர்மறியல் போராட்டத்தில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்
நாமக்கல்மாவட்ட அமைப்பின் சார்பில் 10பெண்பொறுப்பாளர்கள் தீரமுடன் பங்கேற்று மறியலை வெற்றிப்பெறச்செய்துள்ளனர்.

நான்கு
அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட
வலியுறுத்திப்போராட்டத்தில்  பங்களிப்பை செலுத்தி உள்ளனர்.

நாமக்கல்மாவட்ட
அமைப்பு பத்து  பெண்போராளிகளுக்கும் வாழ்த்தும்-பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறது.

           ~முருகசெல்வராசன்.
                      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

இன்ஜினியரிங் கவுன்சிலிங்- ஆன்லைனில் நடப்பது எப்படி?

பேராசிரியர் தேர்வு வாரியம் (PRB) அமைக்க திட்டம்:உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்...


பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள் நியமனத்திற்காக, பி.ஆர்.பி., என்ற பேராசிரியர் தேர்வு வாரியம் அமைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, உயர் கல்வித்துறை அமைச்சர், கே.பி.அன்பழகன் கூறினார்.

தமிழக அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர்,பேராசிரியர்கள் மற்றும் பணியாளர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., உள்ளது. இந்த வாரியத்தில், பள்ளிக் கல்வித் துறையினர் மட்டுமேஇருப்பதால், உயர் கல்வித்துறை பணி நியமனங்களை மேற்கொள்ள, தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது.இந்நிலையில், பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கு, தனி அமைப்பை உருவாக்க, உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அளித்த பேட்டி:டி.ஆர்.பி., நடத்திய, பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில், தவறு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், புதிய பணியிடங்களை நிரப்ப, புதிய திட்டங்களை யோசித்து வருகிறோம். பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் பேராசிரியர்களை தேர்வு செய்ய, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாமா என, பரிசீலித்து வருகிறோம்; இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

தற்போதைய சூழலில், ஆசிரியர்கள்பற்றாக்குறையை போக்க, அண்ணா பல்கலையில் இருந்து, உபரி பேராசிரியர்களை, அரசு இன்ஜினியரிங், பாலிடெக்னிக் மற்றும் கலை கல்லுாரிகளுக்கு மாற்றி வருகிறோம். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 2,640 பணியிடங்களை, விரைவில் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

DSE PROCEEDINGS-பிப்ரவரி 26 ஆம் தேதியன்று தேசிய குடற் புழு நீக்க நாள்-உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு...

தி இந்து தலையங்கம்~ அரசுப் பணிகள் சீரமைப்பா, பணியிடங்களைக் குறைக்கும் முயற்சியா?


அரசுத் துறைகளில் உள்ள தேவையற்ற பணியிடங்களைக் கண்டறிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ஆதிசேஷய்யா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. எந்தெந்தப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்யவுள்ளது. அரசுத் துறைகளில் பல்லாயிரக் கணக்கான காலிப் பணியிடங்கள் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், அரசின் இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

எந்தவொரு அரசு அலுவலகத்துக்குச் சென்றாலும், அங்கு போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லை. ஓய்வுபெற்றவர்கள், பணியிட மாற்றம் பெற்றவர்களின் இடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதில்லை. தலைமைச் செயலகம் முதற்கொண்டு வட்டாட்சியர் அலுவலகங்கள் வரை காலிப் பணியிடங்கள் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்தபடியிருக்கிறது. மாவட்டத் துணை ஆட்சியர் பணிகளுக்கான குரூப் 1 பணிகள் தொடங்கி, அலுவலக உதவியாளர்களுக்கான குரூப் 4 பணிகள் வரை அனைத்துப் பணி களுக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

சில அரசு அலுவலகங்களில் கூடுதல் பணியிடங்கள் இருக்கின்றன என்பதையும், மிகச் சில அலுவலகங்களில் வேலையே நடப்பதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. அவற்றைக் கண்டறிந்து, தேங்கிக் கிடக்கும் பணிகளை முடுக்கிவிட வேண்டுமேயொழிய, அவற்றைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட முடிவெடுப்பது தவறானது. அரசுப் பணிகளில் உடனடியாகச் செயல்பட வேண்டியவை, நீண்ட கால நோக்கில் நன்மை பயப்பவை என்று அதன் நோக்கங்கள் வேறுபடுகின்றன. ஒரு வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகளும், மாவட்ட அருங்காட்சியகத் தின் பணிகளும் வெவ்வேறானவை. ஆனால், இரண்டையுமே அரசு தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும். எந்தெந்தப் பணிகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்று முடிவெடுக்கும்போது, இந்தக் காரணங்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும்.

இந்தக் குழுவை நியமித்துள்ள தமிழக அரசின் நோக்கம், செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதுதான். அதில் கொஞ்சம் உண்மையிருக்கிறது. ஆனால், பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தால் செலவுகளைக் குறைத்துவிடலாம் என்று வெறுமனே வரவு - செலவுப் பிரச்சினையாக மட்டும் இந்தப் பிரச்சினையை அணுகக் கூடாது.

2001 முதல் 2005 வரையில் அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் பணி நியமனத் தடைச் சட்டம் அமலில் இருந்தது. அப்போது போட்டித் தேர்வுகள் நடத்தப்படாததால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான வாய்ப்பை இழந்தார்கள். மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டபோது, வயது வரம்புகள் தளர்த்தப்பட்டபோதும்கூடத் தகுதியான மாணவர்கள் பலரும் அந்த வாய்ப்பைப் பெற முடியாமல் போனது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவித்துள்ள ஆட்சிப் பணித் துறைக்கான தேர்விலும் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசுப் பணிகளுக்குப் போட்டியிடும் மாணவர் களுக்கு, அது கிடைக்காமல் போகும்பட்சத்தில், தமிழக அரசுப் பணியாவது கிடைத்துவந்தது. இப்போது அதற்கும் முட்டுக்கட்டை போடும் செயலைத் தமிழக அரசே செய்வது நியாயமாகாது!

    நன்றி: தி இந்து தமிழ்.

24.02.18 (சனி)அன்று சென்னையில் ஜாக்டோ-ஜியோ மகளிர்மறியல்...

அன்பானவர்களே!வணக்கம்.

24.02.18 (சனி)அன்று  சென்னையில் ஜாக்டோ-ஜியோ  மகளிர்மறியல் .

நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்ற
மகளிர் பொறுப்பாளர்கள் தனி வாகனத்தில் பயணிக்கின்றனர்.

நாமக்கல் ஒன்றியச்செயலாளர் திரு.அ.செயக்குமார்,மாவட்டத்துணைச்
செயலாளர் திரு.வெ.
வடிவேல் ஆகியோருடன் வழித்துணையாய் மாவட்டச்செயலாளர் திரு.முருகசெல்வராசன்  செல்கிறேன்.

சென்னையில் அன்றாடம் கைதாகி சிறை செல்லும் நிலையில் நாமக்கல் மாவட்ட மன்றப்பொறுப்பாளர்கள்  இராணுவம்போன்றுஆய்த்தநிலையில் களத்தில் முனையிலே முகந்து நில்லுங்கள்.
 நாம் வெல்வோம்
                 நன்றி
         ~முருகசெல்வராசன்

ஜாக்டோ~ஜியோ:- சென்னையில் தொடர் மறியல் போராட்டம்-மூன்றாம் நாள் (23-2-18) நிகழ்வுகள்...