செவ்வாய், 28 ஜூலை, 2020

*📘✍️அரசாணை எண் 77 நாள்:28.07.2020 -ன் படி இணை இயக்குனர்கள் மாற்றம்*

*📘✍️அரசாணை எண் 77 நாள்:28.07.2020 -ன் படி இணை இயக்குனர்கள் மாற்றம்*

*இணை இயக்குனர்கள் மாற்றம்*
➖➖➖➖➖➖➖➖➖
திரு கோபிதாஸ் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் 

திரு நரேஷ் இணை இயக்குனர் தொழிற்கல்வி 

திருமதி சுகன்யா இணை இயக்குனர் இடைநிலைக்கல்வி 

திருமதி ஸ்ரீதேவி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்.

*_தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஈழுவா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் சேர்க்க முதலமைச்சர் உத்தரவு - அரசாணையும் வெளியீடு!!!_* 👇

*_தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்  உள்ள ஈழுவா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் சேர்க்க முதலமைச்சர் உத்தரவு - அரசாணையும் வெளியீடு!!!_*








ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


*📘✍️01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நீடிப்பு!!!*

*📘✍️01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நீடிப்பு!!!*

ஜூலை 28,வரலாற்றில் இன்று.உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.

 உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

ஹெப்படைடிஸ் சி எனப்படும் கல்லீரல் நோய், எய்ட்ஸ் நோயை போன்ற ஒரு கொடிய நோய். அதுவும் இது ஒரு தொற்று நோயாகும். இந்த நோயின் தாக்கம் அதிகமாகும் போது கல்லீரலில் புற்று நோய் ஏற்படுகிறது. எனவே இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

அதன் பொருட்டே ஹெப்படைட்டிஸ் பி என்கிற வைரஸை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் திரு. புளூம்பர்க் ( Blumberg)  அவர்களின் பிறந்த தினமான ஜூலை 28 ஆம் தேதியன்று அவரின் நினைவாக உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமான நம் உடலின் உட்பகுதியில் இருக்கும் பெரிய திண்ம உறுப்பு கல்லீரல். ’அதிகம் மது அருந்தினால் கல்லீரல் கெட்டுப் போகும்’ என்பது தான் சாதாரண மக்களுக்கு கல்லீரல் பற்றிய அதிகபட்ச விழிப்புணர்வு. மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்று கல்லீரல் நோய்கள் தொடர்பாக நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பது உண்மைதான்.

இதற்கிடையில் இதயமாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இப்போது தான் பிரபலமாகி வருகிறது. ஆனால் இந்தியாவில் பத்து லட்சம் பேர் பல்வேறு கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் அதிர்ச்சி தகவல்.
மேலும் சொல்வதென்றால் உடலின் வளர்சிதை மாற்றம், புரோட்டீன் உற்பத்தி, ரத்த உறைவு உட்பட பல முக்கிய செயல்களை இந்த கல்லீரல்தான் செய்கிறது.

நம் உடலின் மையத்தில் உள்ள கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்து விடும். எனவே, கல்லீரலை கவனமாக காக்க வேண்டும். அது நம் கையில் தான் உள்ளது.

மது அருந்துதல், கொழுப்பு மிக்க துரித உணவு, சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவது, தூய்மையற்ற தண்ணீர் அருந்துவது, அதிக உடல் எடை, உடல் பருமன், டென்ஷன் அடைவது, சர்க்கரை நோய், ரத்தம் பெறும் போது ஏற்படும் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய கல்லீரல் நோய்கள் உண்டாகின்றன. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே என்சைம் கோளாறுகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

மஞ்சள் காமாலை மற்றும் பலவகை ஹெபடைடிஸ், கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், கல்லீரலில் கட்டிகள் போன்றவை முக்கிய நோய்கள்.

பசி இல்லாமை, உடல் சோர்வு, எடை குறைதல், மயக்கம், கால் வீக்கம், ரத்த வாந்தி, ரத்தம் வெளியேறுதல் போன்றவை, கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்.

முக்கியமான விஷ்யம் என்னவென்றால் கல்லீரல் 70 சதவீதம் பாதிக்கும் வரை நிறைய பேருக்கு பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தெரிவது இல்லை. ஆனாலும் மஞ்சள் காமாலை போன்றவை உடனடி சிகிச்சையின் மூலம் குணமாகும். அது போல மற்ற கல்லீரல் நோய்களுக்கும் தொடர் சிகிச்சைகள் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.

மேலும் சிறுநீரகம் போன்று, ’டயலிசீஸ்’ செய்ய இயலாது. கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்ட பின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கூட செய்வது இயலாத காரியம்.

உடல் உறுப்பு தானம் செய்வோரிடம் இருந்து இறந்த குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் கல்லீரல் பெறலாம்; அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து கல்லீரலின் 70 சதவீத பகுதி வரை வெட்டி எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தலாம். இதனால் இருதரப்பிற்கும் பாதிப்பு இல்லை. கல்லீரல் அளித்தவர் அறுவை சிகிச்சைக்கு பின் ஏழு நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதும். புண் ஏற்படும், வலி ஏற்படும் என்ற பீதி ஏதும் வேண்டாம். பின்னர் வழக்கமான வாழ்க்கை வாழலாம். அது மட்டுமின்றி வெட்டப்பட்ட கல்லீரல் இரண்டு மாதத்திற்குள் வளரும்.

எனவே ஒருவர் முற்றிலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை விட நெருங்கிய உறவினர் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தால் அந்த உயிரை காப்பாற்றலாம். ஒருவர் தினமும் மது அருந்தினால் உறுதியாக கல்லீரலை பாதிக்கும். சிலர் எப்போதாவது மது அருந்துபவர்களாக இருக்கலாம். ஆனால் அவருக்கு, கொழுப்பு படிந்து கல்லீரல் பாதிப்பு ஏற்கனவே இருந்தால் அது ஆபத்து. எனவே நம் வாழ்க்கை முறை, உணவு முறைகளை மாற்றினால் கல்லீரலை காக்கலாம்.

ஜூலை 28,வரலாற்றில் இன்று.முதல் உலகப் போர் ஆரம்பமான தினம் இன்று (1914).

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.

முதல் உலகப் போர் ஆரம்பமான தினம் இன்று (1914).

ஐரோப்பா  ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்)
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர்.

எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.

இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும்,

மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.

இதன் அளவும், செறிவும் முன்பு எப்போதும்  இல்லாத அளவு பெரிதாக இருந்தது.

பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன.

60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வாயு, வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின.

போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.

ஜூலை 28,வரலாற்றில் இன்று. உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று.

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.


உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.