சனி, 11 டிசம்பர், 2021

தேசியக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அக்கல்வி கொள்கையை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு மூலம் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது

 தேசியக் கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், அக்கல்வி கொள்கையை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு மூலம் ஒன்றிய அரசு முயற்சி செய்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. ஒன்றிய அரசின் இத்தகையை நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எந்தவித சனநாயகப் பண்பையும், மக்களாட்சி நிறுவனங்களையும் மதிக்கத் தயாராக இல்லாத மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தாமல், தேசிய கல்விக்கொள்கை - 2020-யை, அரசின் கொள்கையாக 29.07.2020 அன்று அறிவித்திருந்தது. இக்கல்விக் கொள்கையை என்பது, மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிக்கிற, சமற்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்கிற, கல்வித்துறையில் தங்குதடையற்ற தனியார் கட்டணக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்துகிற, கல்வி உளவியலுக்கு முரணானது என்று அப்போதே தமிழக வாழ்வுரிமைக் கட்சி குற்றம்சாட்டியிருந்தது. மேலும், மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய நீட் தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில், தேசியத் தேர்வு ஆணையம் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு சிக்கல் தேசிய கல்விக்கொள்கையில் இருப்பதை சுட்டிக்காட்டிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கல்வித் தொண்டர்கள் என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும், அற நிறுவனங்கள், அரசுப் பங்கேற்பு என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும் திணிக்கும் மோசமான திட்டமும் இக்கல்வி கொள்கையில் இருக்கிறது என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தேசிய கல்விக் கொள்கை 2020 - யை அமல்படுத்த ஒன்றிய அரசு தீவிர முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதற்காக, பல்கலைக்கழக மானியக்குழு வாயிலாக, கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் ஒன்றிய அரசு சுற்றறிக்கைகள் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், தேசியக் கல்விக் கொள்கையின் பல பரிந்துரைகளை தனியார் பல்கலைக்கழகங்கள், சுய நிதிக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகளில் அமல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சுற்றறிக்கையை, தமிழ்நாடு அரசோ, உயர்கல்வித் துறையோ, அரசு பல்கலைக்கழகங்களோ கண்டுகொள்ளாவிட்டாலும் கூட, தனியார் கல்லூரிகளில் கல்வி கற்கின்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளது. உயர் கல்வி நிலையங்களை சர்வதேசமயமாக்கும் போது இங்குள்ள பேராசிரியர்கள் தங்களின் பணியை இழக்க நேரிடும். கல்வி அதிகாரத்தை மாநிலங்களுக்குத் திரும்ப அளித்து, கல்வியாளர்களைக் கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப - கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்பது தான் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை முடிவு. எனவே, தேசிய கல்விக்கொள்கையை பல்கலைக்கழகங்கள் அமல்படுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிடுவதோடு, சுயநிதிக் கல்லூரிகள், தன்னாட்சிக் கல்லூரிகள், தனியார் பல்கலைக் கழகங்களில் அமல்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.


திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்து குறள் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட 219 மாணாக்கர்களுக்கு பரிசுத்தொகை வழங்கிடும் அடையாளமாக 9 மாணாக்கர்களுக்கு தலா ரூ.10,000 குறள் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்கள்.


 




 




இன்றைய நாளிதழ் செய்திகள்11.12.2021









 

குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு எழுத விரும்புவோருக்கு தமிழ்நாடு அரசு சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இலவச பயிற்சி . ஆர்வமுள்ள, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . கடைசி தேதி டிசம்பர் 28.