ஞாயிறு, 24 நவம்பர், 2019
நவம்பர் 24,
வரலாற்றில் இன்று.
படிவளர்ச்சி தினம் இன்று (Evolution Day).
படிவளர்ச்சி தினம் என்பது உயிரினங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.
1859ஆம் ஆண்டில் இதே நாளில் சார்ல்ஸ் டார்வின் இந்நூலை எழுதி வெளியிட்டார். படிவளர்ச்சிக் கொள்கையை முதன் முதலில் அறிவித்த டார்வினின் பிறந்தநாள் பிப்ரவரி 12 டார்வின் தினம் எனக் கொண்டாடப்படுகிறது.

நாவலாசியரும், பெண்ணிய
வாதியுமான அருந்ததி ராய் பிறந்த தினம் இன்று (1961).
அருந்ததி ராய் மேகாலாயாவில் பிறந்தவர் . கேரளத்தில் தன் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு டெல்லியில் கட்டிடக் கலை பயின்றார் .
திரைக் கதை மற்றும் சிறந்த நாவல்களை எழுதிய இவர் , பெண்ணடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினைகளுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார் .
அரசியல் விமர்சனக் கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வரும் நிலையில் , அடுத்து நாவல் எழுதும் நோக்கில் உள்ளார் .
அருந்ததி ராய் முதன் முதலில் எழுதிய "த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்" என்ற நாவலுக்கு இந்தியாவின் முதல் ‘புக்கர்’ பரிசை பெற்றுள்ளார் . ஆனால் , தனக்கு வழங்கிய சாகித்ய அகாதமி பரிசை மறுத்து விட்டார்.

சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் பசிபிக் கடலில் பத்திரமாக தரையிறங்கிய தினம் இன்று(1969).
நிலவில் விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வுகளை செய்யும் அமெரிக்காவின் எண்ணத்தின்படி 'அப்பல்லோ திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் அப்பல்லோ 12 அமெரிக்காவின் ஆறாவது விண்பயணமாகும். நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வரிசையில் இது இரண்டாவது கலனாகும். அப்பல்லோ 11 ஏவப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து நவம்பர் 14, 1969 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது.
நிலவில் தரை இறங்கிய பின்பு குழுவின் தலைவர் சார்லசு பீட் கன்ராட் , விமானி ஆலன் எல். பீன் ஆகிய இருவரும் நிலவின் தரைப்பரப்பில் திட்டமிட்ட ஆய்வுகளை முடித்தனர். மற்றொரு விமானி ரிச்ச்ர்டு எஃப். கோர்டான் நிலவின் சுற்றுவட்டப்பாதையிலேயே இருந்தார்.
நிலவுப்பரப்பின் தென்கிழக்குப் பகுதியில் தரையிறங்குவது இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. மேலும் அதற்கு முன் ஏவப்பட்ட சர்வேயர் 3 கலனைக் கண்டுபிடித்து பரிசோதனைக்காக எடுத்து வருவதும் இதன் திட்டமாக இருந்தது.
குறிக்கோள்கள் அனைத்தும், வெற்றிகரமாக முடிவடைந்த பின்பு, நவம்பர் 24, 1969 அன்று அப்பலோ விண்கலமானது பசிபிக் கடலில் பத்திரமாக தரையிறங்கியது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)