புதன், 9 டிசம்பர், 2020

*💫DSE - NMMS - பள்ளிக்கல்வி திட்ட ஆண்டு 2020-21 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் - தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means-cum-Merit Scholarship) தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 31 டிசம்பர் 2020க்குள் முழுமையாக முடித்தல் - சார்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

*💫DSE - NMMS - பள்ளிக்கல்வி திட்ட ஆண்டு 2020-21 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் - தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்வில் (National Means-cum-Merit Scholarship) தேர்ச்சி பெற்ற மாணவியர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 31 டிசம்பர் 2020க்குள் முழுமையாக முடித்தல் - சார்பு -  பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*

*🌻தேர்தல் படிவத்தில் நிரப்ப - ALL DEPARTMENT CODES.

*🌻தேர்தல் படிவத்தில் நிரப்ப - ALL DEPARTMENT CODES - PDF*
All Department codes ஐ தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்க.

click here.

*💫அரசிதழ் எண் 36 நாள் 30.01.2020ன் படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரே பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் - பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறை துணை ஆணையரின் சுற்றறிக்கை!!!*

*💫அரசிதழ் எண் 36 நாள் 30.01.2020ன் படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஒரே பாடத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் - பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறை துணை ஆணையரின் சுற்றறிக்கை!!!*
சுற்றறிக்கையை படிக்க இங்கே கிளிக் செய்க.

*🌷மாணவர்களின் எடையில் 10% மட்டுமே புத்தகப் பையின் எடை; 2-ம் வகுப்பு வரை நோ வீட்டுப்பாடம்- மத்தியக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்கள்:*

*🌷மாணவர்களின் எடையில் 10% மட்டுமே புத்தகப் பையின் எடை; 2-ம் வகுப்பு வரை நோ வீட்டுப்பாடம்- மத்தியக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல்கள் :*

*2-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதைத் தவிர்க்கலாம் என்றும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் புத்தகப் பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என மத்தியக் கல்வித்துறை  அறிவுறுத்தியுள்ளது.*

*இதுதொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அனைத்து மாநிலக் கல்வித்துறைச் செயலாளர்களுக்கும் பள்ளிப் புத்தகப் பை 2020 (School Bag Policy 2020) என்ற பெயரில் அறிவுறுத்தல்களோடு கூறிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.*

*அதில் கூறப்பட்டுள்ளதாவது:*

 
*புதிய கல்விக் கொள்கையின்படி என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, கேவிஎஸ், என்விஎஸ் ஆகியவை இணைந்து புத்தகப் பை தொடர்பாக ஆராய வல்லுநர் குழுவை அமைத்தன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.*

*ஒவ்வொரு மாணவரும் 6 - 8 ஆம் வகுப்பில் வேடிக்கையான படிப்பைத்தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப கைவினைத் தொழில், தச்சு, மின்சார வேலை, உலோக வேலை, தோட்ட வேலை ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்.*

*ஆண்டுதோறும் 6 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 நாட்கள் புத்தகப் பை இல்லாத தினங்களைப் பள்ளிகள் கடைப்பிடிக்க வேண்டும்.*

*அதேபோல புத்தகப் பையின் எடையைத் தொடர்ந்து, சீராகக் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தின் எடையையும் அதன் மீது குறிப்பிட வேண்டும்.*

*மழலையர் வகுப்பு மாணவர்களுக்குப் புத்தகப் பை கூடாது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் புத்தகப் பையின் சுமை, அவர்களது எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும்.*

 *தரமான மதிய உணவு மற்றும் நீர் ஆகியவற்றைப் பள்ளிகளிலேயே வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம்.*

*வீட்டுப்பாடம்:*

*இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்குவதைத் தவிர்க்கலாம்.*

*3- 5 ஆம் வகுப்பு வரையான மாணவர்களை, ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 2 மணி நேரங்கள் வீட்டுப் பாடம் செய்ய அனுமதிக்கலாம்.*

*6- 8 ஆம் வகுப்பு வரை தினந்தோறும் ஒரு மணி நேரம் என்ற அளவில் ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 5 அல்லது 6 மணி நேரங்கள் வீட்டுப் பாடம் செய்ய அனுமதிக்கலாம்.*

*9- 12 ஆம் வகுப்பு வரை தினந்தோறும் இரண்டு மணி நேரங்கள் என்ற அளவில் ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 10 அல்லது 12 மணி நேரங்கள் வீட்டுப் பாடம் அளிக்கலாம்.*

*ஆசிரியர்களும் பள்ளி முதல்வர்களும் இயந்திரத்தனமான வீட்டுப் பாடங்களை அளிக்காமல், படைப்பாற்றலை ஊக்குவிக்கும் விதமாக வீட்டுப் பாடங்கள் கொடுக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்''.*

*இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*

உண்டு உறைவிட பள்ளியில் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் விண்ணப்பிக்க அழைப்பு...

தமிழக மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து - புதிய தகவல்

 

கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், காலாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தனியார் பள்ளிகள் மட்டும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு இதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மாதிரி தேர்வாக நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பொது முடக்க காலத்திலும் மாற்றுத்திறனாளி அரசு பணியாளருக்கு போக்குவரத்து படி 2,500 ரூபாய் வழங்கலாம்- கருவூல கணக்கு ஆணையர் உத்தரவு

 பொது முடக்க காலத்தில் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு வழங்கப்படும் போக்குவரத்து படியான ரூ.2500 பெரும்பாலான மாவட்டங்களில் வழங்கப்படவில்லை .மே மாதம் வழங்கப்பட்ட சில மாவட்டங்களில் மீண்டும் கருவூலத்தில் திருப்பி செலுத்த வேண்டும் என சார் நிலை கருவூல அலுவலர்கள் உத்தரவிட்டு இருந்தனர்.இதனை எதிர்த்து மணப்பாறையை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் கருவூல கணக்கு ஆணையரிடம் புகார் அளித்திருந்தார் .இந்தப் புகாரின் பேரில் அரசிடம் விளக்கம் பெற்று பொது முடக்க காலம் என்பது மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட காலம் .எனவே காலத்தை அவர்கள் பணிக்கு வந்ததாகவே கருதி போக்குவரத்து படி 2,500 ரூபாய் வழங்க அனைத்து மாவட்டங்களுக்கும் கருவூல ஆணையர் உத்தரவு.