வியாழன், 30 ஏப்ரல், 2020
மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
கொரானா வைரஸ் தாக்குதலால் இன்று உலகமே உறைந்து கிடக்கிறது. 184 -க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு. 30 லட்சத்திற்கும் மேற்பட்டோரை வைரஸ் தொற்றியுள்ளது. இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டது. பொருளாதர நெருக்கடி கொள்ளைநோய் கொரானாவைவிட பல மடங்கு அச்சுறுத்திக் கொண்டுள்ளது.
நாட்டின் மருத்துவத்துறையில் சுமார் 80% தனியார்மயம். அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. விரிவான பி.சி.ஆர் பரிசோதனை செய்வதற்கான மையங்கள் இல்லை. மருத்துவப் பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை. மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள், வசதிகள் இல்லை.
ஊரடங்கில் உள்ள மகக்ளுக்கு உரிய நிவாரணமும் வழங்கவில்லை. இந்திய உணவுக்கிடங்கில் 8 கோடி டன் உணவுப் பொருட்கள் நிரம்பி வழிந்த போதும், மத்திய மாநில அரசுகளோ 20 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், பருப்பு, 1000 ரூபாய் நிவாரணம் என உழைக்கும் மக்களை பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகின்றன. பெருவாரியான உழைக்கும் மக்கள் நோய் அச்சத்தாலும், உணவின்றியும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.
கொரானாவை கட்டுப்படுத்துவதை விட ஊரடங்கை பயன்படுத்தி மக்கள் உரிமையை மறுப்பதிலும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதிலும்தான் தீவிரம் காட்டி வருகிறது மோடி அரசு. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை உரிமையை பறித்து 12 மணி நேரமாகவும், 44 தொழிலாளர்நல சட்டங்களை வெட்டிச்சுருக்கி நான்கு தொகுப்புகளாக மாற்றவும் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
வேலையின்மையும், ஏற்றத்தாழ்வும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 70 சதவீத (95 கோடி) மக்களின் சொத்து மதிப்பைவிட நான்கு மடங்கு அதிகமாக ஒரு சதவீத பணக்காரர்களிடம் சொத்து குவிந்துள்ளது என்கிறது சமீபத்தில் வெளிவந்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கை. வேலையற்றவர்கள், வாங்கும் சக்தியற்றவர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் அம்பானி – அதானிகளின் எண்ணம். இப்போது கொள்ளை நோய் கொரானாவும் இவர்களுக்கு துணை சேர்ந்திருக்கிறது. பொருளாதார நெருக்கடி – பட்டினிச்சாவையும் கொரானா கணக்கில் எழுதி விடுவார்கள். தோற்று, திவாலாகிப் போனதுடன் மக்களுக்கு எதிரானதாகவே மாறிப் போயுள்ள இந்த அரசுக் கட்டமைப்பில் மக்களின் எந்தவொரு பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்பது கொரானாவிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
நம் நாடு மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே கொரானாவை கட்டுப்படுத்த முடியாமல் ஆட்டங்கண்டு போயுள்ளன. அமெரிக்காவில் கொரானா மரணங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது. இங்கிலாந்து, பிரான்சு, இத்தாலி போன்ற முதலாளித்துவ நாடுகளில் நடக்கும் மரணங்களை கண்டு அந்நாட்டு அரசுகளெல்லாம் அலறுகின்றன. “எங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் இருக்கிறோம்’’ என்று இத்தாலி பிரதமர் வெளிப்படையாக சொல்லி கண்ணீர் விட்டு அழுது கொண்டே பேட்டி அளிக்கிறார். காரணம், இத்தாலியில் மருத்துவத்துறையில் 85 சதவீதம் தனியார் கையில் உள்ளது. அங்கு மட்டுமல்ல, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் இதுதான் நிலை.
அரசாங்கம் எல்லா விசயங்களிலும் தலையிடக்கூடாது; சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வியை பளிச்சென்று காட்டியுள்ளது கொரானா. பொதுசுகாதாரம், மருத்துவம், பொதுக்கல்வி, பொது விநியோகம் போன்றவைகளை எல்லாம் மக்களுக்கு கொடுப்பது அரசுகளின் வேலை இல்லை. அதை தனியார்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவால் முதலாளித்துவ நாடுகளில் மக்கள் சேவைகள் அனைத்தும் தனியார் கையில் உள்ளது. இதனால் தான் தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியாமல் முதலாளித்துவ அரசுகள் தோல்வியடைந்துள்ளன.
கொரானா வைரஸ் தாக்குதல் குறித்து உலக சுகாதார நிறுவனமும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த போதும் பல முதலாளித்துவ நாடுகள் அதை அலட்சியம் செய்தன. ஊரடங்கை அறிவித்த பின்பும் பொருளாதார நெருக்கடியைக் காட்டி பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், மதுபான கடைகள், பல தொழிற்சாலைகளை இயங்க அனுமதித்தன. இதன் விளைவாக வைரஸ் தொற்று வேகம் அதிகரித்தது.
ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ கட்டமைப்பு அந்நாட்டு அரசுகளிடம் இல்லை. வெண்டிடேட்டர், மாஸ்க், பாதுகாப்பு உடைகள் போன்ற அடிப்படையான மருத்துவ உபகரணங்கள் கூட இல்லை. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் சாகிறார்கள். அவர்களை புதைக்கக்கூட இடுகாட்டில் இடமில்லை. இத்தாலியின் வீதிகள் எங்கும் பிணங்கள், யாரும் எடுத்து அடக்கம் செய்யவும் முன் வருவதில்லை.
முதலாளித்துவ நாடுகளில் மருத்துவச் செலவு அதிகம் என்பதால் கொரானாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பலருக்கு மருத்துவம் பார்ப்பதில்லை. குறிப்பாக, 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டாம் என இத்தாலியும், பிரான்சும் கைவிடுகின்றன. அமெரிக்காவில் ஏழை கருப்பின மக்கள் தான் அதிகம் சாகிறார்கள் என்பதில் இருந்தே ஏழைகளில் நிலையை புரிந்து கொள்ளலாம்.
உலக முதலாளித்துவ கட்டமைப்பில் எந்த ஒரு தயாரிப்புகளும் கண்டுபிடிப்புகளும் சந்தையின் தேவையைப் பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றன. புதிய தாராளவாதக் கொள்கை நமது அனைத்து தேவைகளையும் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்து விட்டது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக நோய் தடுப்பு மருந்து தயாரிப்பதை விட அதிக லாபம் கொண்ட அழகு சாதன பொருட்களை தயாரிப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன. பெரிய வல்லரசு என பீற்றிக் கொண்ட நாடுகளுக்கு சொந்த நாட்டு மக்களை தொற்றுநோயில் இருந்து காக்க வழியுமில்லை; சோறு போடவும் வக்கில்லை. முதலாளித்துவத்தின் அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து கட்டமைப்பும் நெருக்கடியில் சிக்கி அழுகி நாறிக்கொண்டுள்ளதை கொரானா வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
உலகளவில் சீனா போன்ற முன்னாள் சோசலிச நாடும் மற்றும் கியூபா போன்ற மக்கள் நல அரசுகளும் மட்டுமே கொரானாவை கட்டுப்படுத்துவதில் முன்நிற்கின்றன. இதற்கு காரணம் அந்நாட்டு புரட்சிகளின் போது ஏற்படுத்தப்பட்டிருந்த சோசலிச கட்டமைப்பு. உலகையே ஆண்ட பிரிட்டன் தனது நாட்டு மக்கள் 600 பேரை காக்கும்படி கியூபாவிடம் கைகூப்பி உதவி கோரியது. கியூபாவும், தென்கொரியாவும் மருத்துவர்களை பிறநாட்டு மக்களைக் காப்பற்ற அனுப்பிக் கொண்டுள்ளன. கொரானா நோயை கண்டறிந்தவுடன் 10 நாட்களில் 1200 படுக்கை வசதி கொண்ட இரண்டு மருத்துவமனையை கட்டி முடித்து கொரானாவைக் கட்டுப்படுத்தியது சீனா.
இன்னொரு பக்கம், தனிவுடைமை எனும் முதலாளித்துவக் கொள்கையை சொர்க்கம் என பீற்றி வந்த ஸ்பெயினும், அயர்லாந்தும் இப்போது தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கியுள்ளன. 1990 களின் தொடக்கத்தில் புதிய தாராளவாத உலகத்தை முன்னறிவித்த மார்க்கரெட் தாட்சரின் பிரிட்டனில் தனிமையில் வாடும் 15 லட்சம் முதியவர்களைப் பராமரிக்க 5 லட்சம் இளைஞர்கள் தன்னார்வலர்களாக முன் வந்திருக்கிறார்கள். தேசிய மருத்துவ சேவையில் தொண்டர்களாகப் பணியாற்ற 7.5 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்திருக்கின்றனர். மக்களின் தேவைகள் அனைத்தையும் நிர்வாகம் செய்யும் பொருட்டு 4300 வட்டார உதவிக்குழுக்களை அந்நாட்டு மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள். முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தின் தோல்விக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?
தொற்றுநோய் அபாயங்களில் இருந்தும், பொருளாதார நெருக்கடியில் இருந்தும் மனிதகுலத்தைக் காக்க முதலாளித்துவ சந்தைக்கான உற்பத்தி, அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பதை சமூகத்தின் தேவைக்கானதான மாற்றியமைக்க வேண்டும். அதற்கு தோற்றுப்போன முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, சோசலிசத்தை படைக்க வேண்டும். நம் நாட்டில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிக்க மே நாளில் சூளுரைப்போம்!
நன்றி : வினவு இணையதளம்

*ஜூலை மாதத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள்” - யு.ஜி.சி அறிவுறுத்தல்!
சூழலைப் பொறுத்து கல்லூரிகளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தடைபட்ட கல்லூரித் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்தலாம் என யு.ஜி.சி வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்தவும், அடுத்த கல்வி ஆண்டை தொடங்கவும் யு.ஜி.சி வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமிச்சர் ரமேஷ் போக்ரியால் ஒப்புதல் அளித்துள்ளார்.
“ஜூலை மாதத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள்” - யு.ஜி.சி அறிவுறுத்தல்!
அதன்படி தடைபட்ட செமஸ்டர் தேர்வுகளையும், இறுதி ஆண்டுத் தேர்வுகளையும் ஜூலை 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை ஒரு மாதத்தில் நடத்தி முடிக்கலாம். மேலும், ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி வகுப்புகளைத் தொடங்கலாம் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவோ, தேர்வு நேரத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்தோ நடத்திக் கொள்ளலாம். நேர்முகத் தேர்வுகளை ஸ்கைப் மூலம் நடத்தலாம்.
நிலைமை சீரடையத் தாமதமானால் 50% முந்தைய தேர்வு முடிவுகளின் படியும், 50% ஆசிரியர்களின் மதிப்பீட்டின் படியும் மதிப்பெண்கள் வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தை மாணவர்கள் கல்லூரிக்கு வந்ததாகக் கருத வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம்: விவசாயிகளின் நலன்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது;
தமிழக அரசு விளக்கம்
-------++++-----------------
காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என தமிழக அரசின் பொதுப்பணித்துறை விளக்கம் அளித்துள்ளது.
பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் இன்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு எடுத்த இடைவிடாத சட்டப் போராட்டத்தின் விளைவாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு அதை அப்போதைய நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் 1.6.2018 அன்று மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டது.
அதில், ஆணையத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அனைத்தும் காவிரி நடுவர் மன்றம் 5.2.2007-ல் பிறப்பித்த இறுதி ஆணையைக் கருத்தில் கொண்டுதான் செயல்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிரிவு 15-ன்படி அது எடுக்கும் முடிவுகள் இறுதியானது என்றும், அது படுகை மாநிலங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிட முடியாது.
மத்திய அரசு மே, 2019-ல் நீர்வள ஆதாரம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புறவு அமைச்சகம் ஆகிய இரண்டையும் இணைத்து புதிதாக ஜல் சக்தி அமைச்சகத்தை உருவாக்கியது. இதனை அடுத்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் குறித்து உள்ள விதிகளுக்கு திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது.
இதில் ஜல் சக்தி அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இவ்வமைச்சகத்தால் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் மற்றும் உச்ச நீதிமன்ற ஆணைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும்.
மேற்கூறியவாறு ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகள், நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகள் ஆகியவற்றைக் கையாளக்கூடிய பொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது முற்றிலும் ஒரு நிர்வாக நடவடிக்கையாகும்.
பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் இதர நிர்வாகங்களை மேற்கொள்வதற்கான ஒரு வழக்கமான நடைமுறையாகும். இதனால், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதிகாரங்களில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடனும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, காவிரி நதிநீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவுபடுத்தப்படுகிறது" என விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா காலத்தில்
வேறு மாநிலங்களில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள்
தமது சொந்த மாநிலத்துக்குத் திரும்பலாம்!மத்தியரசு அனுமதி ஆணை வெளியீீடு!
ஊரடங்கின் காரணமாக வெவ்வேறு இடங்களில் மாட்டிக்கொண்டிருக்கும் புலம் பெயர் தொழிலாளர்கள், திருத்தலப் பயணிகள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், மற்றும் சிலரை சொந்த மாநிலத்துக்கு அனுப்புவதற்கான திட்டமிடலாம் எனவும், அந்தந்த மாநிலங்கள் இதற்கென அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் மைய அரசு சற்று முன் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தமது மாநிலத்தில் உள்ள வேற்று மாநிலத்தவர்களை பதிவு செய்யவும், வேண்டுகிற நபர்களை வேற்று மாநிலத்துக்கு அனுப்பவும், வேற்று மாநிலத்திலிருந்து வருகிறவர்களைப் பெறவும் தேவையான விழமுறைகளை வகுக்கலாம்.
இதற்காக அந்தந்த மாநிலங்களின் அதிகாரிகள் தமக்கிடையே ஆலோசித்து ஒப்புக்கொள்ளலாம்.
அவ்வாறு செல்பவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறி இல்லாமல் இருந்தால் மட்டுமே அனுப்பப்படுவார்கள்.
போய்ச் சேருகிற இடத்திலும் பரிசோதனை செய்யப்பட்டு தேவையைப் பொறுத்து வீட்டு குவாரன்டைன் அல்லது மருத்துவமனை குவாரன்டைனில் வைக்கப்பட வேண்டும்.
இது போன்றுபல்வேறு வழிகாட்டுதல்களை மத்தியஅரசு வழங்கி உள்ளது.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)