ஞாயிறு, 31 மார்ச், 2019

*பான்கார்டுடன் ஆதார் இணைப்புக்கு அவகாசம் செப்.30 வரை நீட்டிப்பு*

*🌷பான் கார்டுடன் ஆதார் இணைப்புக்கு அவகாசம் செப். 30 வரை நீட்டிப்பு*


*🌷ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில் அதனை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது*


*🌷மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க முதலில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை அவகாசம் அளித்தது. பின், மார்ச் 31, 2019 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.இதன்படி இன்றுடன் (மார்ச் 31, 2019) முடிகிறது*


 *🌷இந்நிலையில் இன்று நேரடி வரி வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், காலக்கெடு செப்டம்பர் 30, 2019 வரை நீட்டிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும்போது ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைத்திருப்பது கட்டாயம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது*



*🌷ஆதார் எண்ணும் பான் கார்டும் இணைக்கப்படவில்லை என்றால் அந்த பான் கார்டு முடக்கப்படும். இதனால் பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் வருமான வரி கணக்கு* *தாக்கல் செய்யமுடியாது*


*🌷வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் முடியாது. வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு பான் கார்டு முக்கிய ஆவணமாக இருப்பதால் பல வகைகளில் சிக்கல் ஏற்படும்*


*🌷இதனைத் தவிர்க்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைத்துவிடுவது நல்லது. கடந்த ஆண்டு மட்டும் 11.44 லட்சம் பான் கார்டுகள் பல்வேறு காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன*


*🌷கடந்த 2018 மார்ச் நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 33 கோடி பான் கார்டுகளில் 16.64 கோடி கார்டுகளில் மட்டுமே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது*


*🌷இணைக்கவும் சரிபார்க்கவும்*


*🌷பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வருமானவரித்துறையின் https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற இணையதளத்துக்குச் சென்று Link Aadhaar பக்கத்துக்குச் செல்லவும்*


*🌷ஆதார் எண் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற முகவரிக்குச் செல்லவும்*