வெள்ளி, 11 அக்டோபர், 2019

*அக்டோபர்-11 வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்*

*🌷அக்டோபர் 11, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்.*
🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

----------------------------------------------
*1.சர்வதேச பெண்குழந்தைகள்   தினம்.*

*2.உலக முட்டை தினம்.*

--------------------------------------------

*👩‍💼சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று.*

*உலகில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்க, முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இந்த தினத்தை கொண்டாட ஐ.நா.சபை வலியுறுத்தியுள்ளது.*
----------------------------------------------

*🥚🍛உலக முட்டை:தினம் இன்று.*

*சர்வதேச முட்டை ஆணையத்தின் அறிவிப்புப்படி, ஆண்டுதோறும் அக்டோபர் 2ஆவது வெள்ளிக்கிழமை உலக முட்டை தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.*

*ஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம் . எல்லோருக்கும் மிகவும் நல்லது . குறைந்த செலவில் நிறைந்த பயனை தருகிறது முட்டை . கூடுதலான முட்டை இருக்கிறது என்று நான்கு , ஐந்து என்று சாப்பிடாதீர்கள் . எதுவும் அளவோடு சாப்பிட்டால் பயன் உண்டு . ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள்.*

*முட்டையை .அவித்தோ , பொரித்தோ சாப்பிடுங்கள் . அல்லது முட்டை குழம்பு வைத்து சாப்பிடுங்கள் . அதுவும் நன்றாக இருக்கும் . முட்டையை விரும்பாதவர்கள் இல்லை . ஒரு சிலர் தான் விரும்ப மாட்டார்கள்.*

*கிராமங்களில் எல்லாம் எல்லோர் வீட்டிலும் கோழி வளர்த்து முட்டை விற்கிறார்கள் . முட்டையை நாம் எந்த காலங்களிலும் கடைகளில் வாங்க முடியும் . அதற்க்கு தட்டுப்பாடு இருக்காது . ஏனெனில் கூடுதலானவர்கள் முட்டையை அதிகம் சாப்பிடுவதனால் எந்த கடைகளிலும் முட்டை இல்லை என்று சொல்ல மாட்டார்கள்.*

*ஒரு சாதாரண கோழி முட்டையில் 80 கலோரிச் சத்து இருக்கிறது. மு‌ட்டையை எவ்வாறு சமை‌த்து சா‌ப்‌பி‌ட்டாலு‌ம் இந்டத கலோ‌ரி‌ச்ச‌த்துக‌ள் குறைவ‌தி‌ல்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக்கருவில் இருக்கிறது. சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு பிடிக்கும் . சிலருக்கு மஞ்சள் கரு பிடிக்கும் . உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை சாப்பிடுங்கள்.*

*உடல் பருமன் அதிகமாக கொண்டவர்கள் மற்றும் முதியவர்கள் முட்டையின் வெள்ளைக்கருவினை மட்டுமே சாப்பிடுவது நல்லது.*
*தினமும் 300 மில்லிகிராம் கொழுப்புச்சத்து ஒருவருக்கு தேவைப்படுகிறது. ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் மட்டுமே 275 மில்லிகிராம் கொழுப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அத‌ன் வெ‌‌ள்ளை‌க் கருவை ம‌ட்டு‌ம் கொடு‌த்து சா‌ப்‌பிட‌ப் பழ‌க்க வே‌ண்டு‌ம். ‌பி‌ன்ன‌ர் ‌சி‌றிது ‌சி‌றிதாக அவ‌ர்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் கருவை கொடுக்கலாம்.*

*உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது . அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானது இல்லை . மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் படவேண்டியவை.*

*முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் என ஒவ்வொருவர் ஒவ்வொரு கதைகளை சொல்வார்கள்.* *பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால் முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்திலேயே இருக்கின்றனர் பெரும்பாலானோர்.*
*அந்த பயத்தை நீக்கி தினம் ஒரு முட்டை உண்ணுங்கள் . பல ஆராய்ச்சியாளர்களும் இதை தான் சொல்கிறார்கள்.*


*“தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று சொல்கிறது*

*சராசரியாக ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் இருப்பதுடன், தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்கான அயோடினும் அதிகமுள்ளது. மேலும், பல்கள், எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ், நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம், கொழுப்பு, புரதச்சத்து உள்ளிட்ட அனைத்து வகை ஊட்டச்சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன.*

*இதயத்துக்கு பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் "பி' குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன. இத்தகைய ஊட்டச்சத்துகள் நிறைந்த முட்டையை தினமும் குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறன் அதிகரிப்பதாக அமெரிக்க முட்டைச் சத்துணவு மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.*

*இத்தகைய மகத்துவம் மிக்க முட்டை உருவாகும் விதம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சிக்கலானதும் ஆனால், சீரானதுமான அமைப்புடைய முட்டைகள் கருப்பையிலும், முட்டைக் குழாயிலும் உருவாகிறது.*

*கோழிக்கு இடப்புறத்தில் திராட்சை பழக்கொத்துப் போன்று ஒரேயொரு கருப்பையே உள்ளது (சில நாட்டுக் கோழிகளுக்கு மட்டும் இரு கருப்பைகள், முட்டைக் குழாய்கள் உண்டு). இந்த முட்டை உற்பத்தி நடைமுறை இரண்டே முக்கால் மணி நேரத்தில் நடைபெறுகிறது. முட்டையிட்டு ஒரு மணி நேரத்தில் மற்றொரு மஞ்சள் கரு ம