வியாழன், 22 நவம்பர், 2018
புள்ளியல் ஆய்வாளர் தேர்வு ஒத்திவைப்பு - TNPSC
சென்னை: கஜா புயல் பாதிப்பு காரணமாக வரும் 24 ஆம் தேதி நடக்க இருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயல் பாதிப்பு காரணமாக வரும் 24 ஆம் தேதி நடக்க இருந்த புள்ளியியல் ஆய்வாளர் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வரும் 28 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று வரும் நவம்பர் 25 முதல் 30 வரை நடக்கவிருந்த வனவர், வனக்காவலர், ஓட்டுநர் உரிம வனக்காவலர் பணியிடங்களுக்கான தேர்வு, கஜா புயல் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், கஜா புயல் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட ஆன்லைன் தேர்வுகளுக்கான புதிய தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன் அவர்களின் நன்றி தெரிவித்தலும், மத்திய,மாநில அரசுகளுக்கு விடுத்துள்ள வேண்டுகோளும். நல்லோரே!பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவீர்!
அன்பானவர்களே!வணக்கம்
" வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன் "
எனும் வடலூர் வள்ளலார் அவர்களின் வரிகளிள் உள்ளார்ந்த அர்த்தம் மேலும் ஒருமுறை ஓங்கி அடித்து என் உள்ளத்தில் அழுத்தமாக பதித்துவிட்டது 21.11.18 ஆம் நாளைய
நாகை -வேதாரண்யம் -தலைஞாயிறு பயணம் என்றால் ,இது வெறும் மிகையல்ல -உண்மை.
ஆசிரியர் சங்கப் பொது வாழ்வில் எல்லாவிதமான தாக்குதல்களையும் தாங்கிக்கொண்டு கால்நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமாக பணியாற்றி வருகிறேன்.
எவ்வளவோ பணிகளுக்கு
உடலை,மனதை, வருத்திக்கொண்டுள்ளேன்.
பொருளை,
நிதியை இழந்துள்ளேன்.
இவைகளோடு ஒப்பீடு செய்கையில் கடந்த இரண்டு் நாள்களாக
கசா புயலின் கோரத்தாண்டவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிகள் செய்வது என்று ஏற்படுத்திக்கொண்ட சிரமங்கள் தான் மிகப் பெரிய விளைவை, பயனை,பலனைத் தந்துள்ளது என்பேன்.
கடந்த 19.11.18 நண்பகல் முடிவாற்றி 20.11.18
பிற்பகலுக்குள் நிறைவேற்றி சரக்குந்தில் நிரப்பிவைத்து 21.11.18 பயணவழியெங்கும் நன்கொடை செலவழித்து பொருள்கள் வாங்கிக் கொண்டு பயண வழியில் பல்வேறு இடர்கள், தடைகள் தாண்டி அந்திவேளையில் தலைஞாயிறுக்குள் நுழைந்து ஏற்றுக்கொண்ட மக்கள்பணியை முடித்தது என்பது புல்லின் நுனி அமர்ந்த பனி ஆதவன் ஒளியில் நீங்கியது போன்று எளிதாய் எல்லா சிரமங்களையும் கரைத்து விட்டது;நீக்கி போக்கி விட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,
ஒன்றியப் பொறுப்பாளர்கள்,
மன்ற முன்னோடிகள்,
இரக்ககுணமும்,ஈகைப் பண்பும் நிறைந்த
ஆசிரியப்பெருமக்கள்,நல்லுள்ளம் கொண்டோர் என எல்லோரும் ஒரே புள்ளியில் நின்று உதவியதால் தான்
நாமக்கல் மாவட்ட ஆசிரியர் மன்றம் சார்பில் தலைஞாயிறு ,
வேதாரண்யம் பகுதி மக்களுக்கு மூன்று இலட்சத்துக்கும் மேலான நிவாரணப்பொருள்கள் சாத்தியமாயிற்று.
நல்லோரின் உதவியினாலேயே நிவாரணப்பொருள்கள்
வழங்க முடிந்தது;
வழங்கப்பட்டுள்ளது.
காலத்திற்கேற்ற பொருத்தமான உதவியை
செய்து முடிப்பதற்கு உதவியுள்ள ஒவ்வொருவருக்கும் ஆசிரியர்மன்றம் மனம் நிறைந்த நன்றி தெரிவித்து இருகரம் குவித்து சிரம் தாழ்த்தி வணங்குகிறது.
திருவாளர்கள் வெ.பாலமுரளி, இர.செகநாதன்,
கா.செல்வம்,
அ.செயக்குமார்,
கா.முருகேசன்,
மெ.சங்கர்,
முருகசெல்வராசன் ஆகியோர் கொண்ட பொறுப்பாளர் குழு
ஒருபகலும்,
ஓர்இரவும் கஜாவாலும்,
வேறு வகையாலும் பாதிக்கப்பட்டுள்ளப்
பகுதிகளில் பயணித்துள்ளது.
"தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று கற்றுத்தரப்பட்டுள்ள தஞ்தைத் தரணியின்" மக்களுக்காக
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்மன்றத்தின் சார்பில் மத்திய,மாநில அரசுகளிடத்தில் நான் வேண்டுவது
"ஏழைகள்வயிறு எரியச் செய்யாதே" என்பதேயாகும்.
"சோழநாடு சோறுடைத்து" என்றும் "சோறளிக்கும் சோணாடு" என்றும்"
போற்றப்பட்டுள்ள தேசத்தின் மக்களை
"ஒருவேளை உணவிற்கு கையேந்த விடாதே" என்பதேயாகும்.
நல்லோர்
அனைவருக்கும்
என் நன்றி.
-முருகசெல்வராசன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)