வியாழன், 28 டிசம்பர், 2017

திருச்செங்கோடு மன்றம்~ செயல் வீரர்கள் கூட்டம்~ நிகழ்வுகள்(28-12-17)...

SSA-Learning outcomes Training - கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சி~ உயர் தொடக்க நிலை (கணிதம் மற்றும் அறிவியல்) மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான அட்டவணை வெளியீடு...

RH LIST~2018...

எப்பொழுதுதான் முழுமையான தீர்வு கிட்டும்(தனி ஊதியம்-750) என ஏக்கமே விஞ்சி நிற்கிறது...

இன்றைய நாளிதழ் செய்திகள்~காலைக்கதிர் (28-12-17): ஆசிரியர் மன்றம்- பள்ளிபாளையம் கிளை தொடக்கவிழா~நிகழ்வுகள்...



 

இனி பேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கட்டாயம்...


இந்தியாவில் இனி பேஸ்புக் 
பயன்படுத்துவதற்கும் ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.

இந்தியாவில் 24.1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். உலக அளவில் பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள பேஸ்புக் கணக்குகளில் ஏராளமானவை போலியானவை என தெரிய வந்துள்ளது. இத்தகைய போலி கணக்குகள் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக, பேஸ்புக் பயன்படுத்துவோரின் ஆதார் எண்ணை வைத்து, அவர் உண்மையான பெயரில் தான் கணக்கு வைத்துள்ளாரா என பேஸ்புக் சரிபார்க்க முடிவு செய்துள்ளது.

மொபைல் பேஸ்புக் இணையதளத்தில் இது சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, புதிதாக பேஸ்புக் கணக்கு துவங்கியவர்களிடம் ஆதார் அட்டையில் உள்ளது போன்று உங்களின் பெயரை பதிவு செய்யுங்கள். அது உங்களை அடையாளம் காண உங்கள் நண்பர்களுக்கு எளிதாக என தெரிவிக்கப்பட உள்ளது. ரெட்டிட், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.

அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும் - தமிழக அரசு....



தமிழ் வழியில் பயின்று பொதுத்தேர்வில் 
அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்கப்படும்.

 மாவட்டம் தோறும் 30 மாணவர்களை தேர்ந்தெடுத்து தமிழகம் முழுவதும் 960 மாணவர்களுக்கு காமராஜர் விருது அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

 

பள்ளிக்கல்வித்துறையில் 4 இயக்குநர்கள் பணியிட மாற்றம்...

புதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய மாவட்டத்துக்கு தலா இரண்டு பள்ளிகள் தேர்வு...


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம் வழிகளில் தலா ஒரு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியை தேர்வு செய்து புதிய கற்றல் முறையை அறிமுகம் செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்தும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து அனுப்ப மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

தேர்வு செய்யப்படும் இந்த பள்ளிகளில் 3ம் பருவத்தேர்வுகளை டிஜிட்டல் முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு வகுப்பு வாரியாக வினாத்தாள்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. டிஜிட்டல் மயமாகும் 3ம் பருவத்தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்விகளை வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல் படங்கள், வண்ணங்கள் கொண்டு நடத்தப்பட உள்ளது.

கேள்விகள் அனைத்தும் மாணவர்களின் சிந்தனையை தூண்டும் வகையில் உருவாக்கப்படும். இதற்காக பிரத்யேக ஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 2 பள்ளிகளை தேர்வு செய்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.