ஃபேஸ்புக் நிறுவனம் "ஸ்னூஸ்" என்ற வசதியை புதிதாக
வழங்கி உள்ளது.
இதன் மூலம் பயனர்கள் குறிப்பிட்ட நபர்களை 30 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக தடை செய்து வைக்கும் வசதியை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக "பிளாக்" என்ற வசதியின் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத நபரின் தகவல்களை நிரந்தரமாகத் தடைசெய்ய முடியும்.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள இந்த ஸ்னூஸ் வசதியின் மூலம் 30 நாட்கள் தற்காலிகமாக மட்டும் ஒரு நபரின் தகவல்களை தடை செய்து வைக்க இயலும்.
இதன் மூலம் தடைசெய்யப்பட்ட நபர், பயனரின் தகவல்களை காண இயலாது. ஒரு தனி நபர் மட்டுமின்றி ஒரு குரூப்பினை தற்காலிகமாகத் தடை செய்யவும் இந்த "ஸ்னூஸ்" வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் தேவையற்ற செய்திகளை தடைசெய்து தேவையான தகவல்களை மட்டும் பயனர்கள் எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.