வியாழன், 8 நவம்பர், 2018

கல்வித்துறை அலுவலகங்களின் பணியாற்றும் அரசுப் பணியாளர் அனைவரும் அலுவலக நேரங்களில் கட்டாயமாக அடையாள அட்டையினை அணிந்து பணியாற்ற வேண்டும் - திண்டுக்கல் CEO செயல்முறைகள்!


ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க முதன்மை கல்வி அவர்களின் தலைமையில் ஜமாபந்தி


அரசு பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்க ஏற்பாடு

நேரு பிறந்தநாள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்க ஏற்பாடு

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 -ஆம் தேதி, பள்ளிக் குழந்தைகளின் புகைப்படத்துடன்கூடிய வாழ்த்து அட்டைகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 -ஆம் தேதி, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய திட்டம் ஒன்றை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 5,000 அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதில் அந்தந்த குழந்தைகளின் புகைப்படங்களை இணைத்து அவர்களுக்கே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து அட்டைகளை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். முதல்கட்டமாக 32 மாவட்டங்களில் 65 பள்ளிகளுக்கு வாழ்த்து அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அனுப்பி வைத்துள்ளது.


குழந்தைகள் தினம்: பள்ளிகளுக்கு இலவச டிவிடி


குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இலவச டி.வி.டி. வழங்கும் திட்டத்தை குழந்தைகளுக்கான இந்திய திரைப்பட சமூகம் (சி.எஃப்.எஸ்.ஐ.) அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் சிஎஃப்எஸ்ஐ, குழந்தைகளுக்கான பிரத்யேக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது. இந்தத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டுமின்றி இளம் மனங்களில், நீதி போதனைகளை வளர்ப்பதற்கும் உதவுகின்றன.

குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளில் குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களை திரையிட வசதியாக இலவச டி.வி.டி.-க்களை சி.எஃப்.எஸ்.ஐ. வழங்கவுள்ளது. விருப்பமுள்ள பள்ளிகள் 044 -2498 1159 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது



கம்பியூட்டர் பயிற்சி கிடைக்காமல் ஆசிரியர்கள் தடுமாற்றம்

கம்ப்யூட்டர் பயிற்சி வழங்காததால், ஸ்மார்ட் வகுப்பறைகளில், ஆன்லைன் முறையில் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். அரசுப்பள்ளிகளில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறைகளை, கற்பித்தலுக்கு மட்டுமல்லாமல், தேர்வு நடத்தவும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், கடந்தாண்டு ஐ.சி.டி., பயிற்சி திட்டம் துவங்கப்பட்டது.


அரசின் கல்வி இணையதளங்கள் தவிர, பாடசாலை போன்ற இணையதளங்களில் இருந்தும், பாடத்திட்ட கருத்துகளை பதிவிறக்கம் செய்தல், தேர்வு நடத்துதல், வினா தயாரிப்பு குறித்து, கடந்தாண்டில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் இத்திட்டம் சார்ந்த, எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.



ஓரிரு நாட்கள் வழங்கப்பட்ட பயிற்சியில், பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், யாரிடம் விளக்கம் பெறுவது என, தெரியாமல் ஆசிரியர்கள் விழிபிதுங்கியுள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,'ஆன்லைன் தேர்வு முறை பரவலாகிவிட்டது. வரும்காலங்களில் திறனாக்க தேர்வுகள், ஆன்லைனில் நடத்த வாய்ப்புள்ளது.


எனவே,ஐ.சி.டி., பயிற்சி நடப்பாண்டிலும் வழங்கப்பட வேண்டும். புதிய சிலபஸ் அடிப்படையில், வினாக்குறிப்புகளை மாநில கல்வியியல் பயிற்சி மையம் தயாரித்து அளித்தால், மாணவர்கள் பயனடைவர்' என்றனர்.'கல்வித்துறை உத்தரவிட்டால் பயிற்சி'ஒருங்கிணைந்த கல்வி உதவி திட்ட அலுவலர் கண்ணனிடம் கேட்டபோது,'' ஆர்.எம்.எஸ்.ஏ., சார்பில் கடந்தாண்டு பயிற்சி வழங்கினோம்.


தற்போது பயிற்சி வழங்கும் பொறுப்பு அளிக்கப்படவில்லை. கல்வித்துறை உத்தரவிட்டால், பயிற்சி வழங்கப்படும்,'' என்றார்

பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்க தரம் உயர்த்தப்பட்ட அரசு, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விவரங்கள் சேகரிப்பு


புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்களை சேகரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு பிளஸ்1 வகுப்புகளுக்கு பொதுதேர்வு  நடத்தப்படுகிறது. இதற்காக பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு 1200 மதிப்பெண்களில் இருந்து 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளின் விவரங்கள் குறித்து  அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:2018-19ம் கல்வியாண்டில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளை வரும் மார்ச் மாதம் நடக்க உள்ள  மேல்நிலை முதலாமாண்டு பொதுதேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். இதையொட்டி தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலர்கள் வாயிலாக அனுப்ப அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள்  மற்றும் முதல்வர்களிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.
அதில் பள்ளியின் பெயர், பள்ளியின் எண், கல்வி மாவட்டம், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் விவரங்கள், அருகில் தேர்வு எழுத உள்ள  பள்ளியின் விவரம் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும்.
இந்த விவரங்களை சேகரித்து தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் தேர்வு மையம் அமைப்பதற்கான அனுமதியை தேர்வுத்துறை  இயக்குனர் வழங்குவார். இவ்வாறு அவர்கள் கூறினர்



மாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்கு துணை ஆட்சியர்கள் நியமனம்


மதுரை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்கு துணை ஆட்சியர்கள் நியமனம்
மதுரை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேர்தல் பணிகளைக் கவனிப்பதற்கு துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் தற்காலிகமாக நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல, இதே பணிநிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளின் பணிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், வாக்குச்சாவடிகள் தயாரிப்பது, வாக்குப்பதிவுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகள் ஆண்டு முழுவதுக்குமான தொடர் பணியாக இருந்து வருகிறது. அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட வேலூர் (13), திருவள்ளூர் (11), காஞ்சிபுரம் (11), கோவை (10), திருநெல்வேலி (10) ஆகிய மாவட்டங்களில் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) என்ற பதவியில் தேர்தல் பணிகளைக் கவனித்து வருகின்றனர். பிற மாவட்டங்களில் ஆட்சியர்களின் பொது நேர்முக உதவியாளர்கள் தான் தேர்தல் தொடர்பான பணிகளைக் கவனிக்கின்றனர். இந்நிலையில், 6 தொகுதிகளுக்கு மேல் உள்ள 17 மாவட்டங்களுக்கு, தேர்தல் நேர்முக உதவியாளர்கள் பணியிடம் உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியது.
மாவட்ட ஆட்சியர்களின் பொது நேர்முக உதவியாளர்கள் கவனிக்க வேண்டிய பணிகள் மிக அதிகமானவை. அதிமுக்கியத்துவம் வாய்ந்த பல பணிகளைக் கவனித்து வரும் பொது நேர்முக உதவியாளர்களால், தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரியால் நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவுக்குள் தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பதில் சிரமம் இருந்து வருகிறது என்றும் சங்கத்தின் சார்பில் வருவாய் நிர்வாக ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இதன்பேரில், அதிக சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மதுரை, சேலம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு தேர்தல் பணிகளைக் கவனிக்க ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம், தற்காலிக அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2018 நவம்பர் 1 முதல் 2019 மே 31 ஆம் தேதி வரை இப் பணியிடத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஏற்கெனவே வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள இப் பணியிடத்துக்கு 2019 மே 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு செயலர் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ இதற்கான அரசாணையை நவம்பர் 1-ஆம் தேதி பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர்கள் & அரசு துறை அலுவலர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் கலந்துகொள்ள நாமக்கல் ஆட்சித்தலைவர் அழைப்பு


நவ. 15-இல் நாமக்கல்லில் ஆட்சிமொழி பயிலரங்கம்

அரசு
அலுவலர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நாமக்கல்லில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெற வழிகாட்டும் வகையில், மாவட்டந்தோறும் உள்ள அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்திட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், வரும் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இப்பயிலரங்கு மற்றும் கருத்தரங்கில் ஆட்சிமொழி செயலாக்கம் குறித்து தமிழ் வளர்ச்சித் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்கவுள்ளனர். இதில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்று பயனடைய வேண்டும்.



Elections - General Elections to Lok sabha 2019-Selection, Appointment and training of Polling Personnel - creation of database-Duties of Presiding officer / Polling officers staff details called for-regarding...

மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் நடைபெறும் இடம் மற்றும் தங்குமிடம் விவரம் தெரிவித்தல்


இந்திய தண்டனைச் சட்டங்கள் (Indian Penal Code) பற்றிய தகவல்கள்

கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய விகித மாற்றங்களினால் கிடைக்கப்பெற உள்ள நிலுவைத் தொகைகள்விபரம் -முதலமைச்சர் அறிவிப்பு