ஞாயிறு, 18 செப்டம்பர், 2022
சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கான மாணவர் சேர்க்கை~19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்...
சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கான மாணவர் சேர்க்கை:
19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
மாணவர்கள் sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தகுதி சான்றிதழினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதியானது கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப பயிற்சியை அளிப்பதற்கு ஏற்படுத்தப்பட்டது.
இவ்விளையாட்டு விடுதியில் மேம்பட்ட விளையாட்டு பயிற்சியுடன், ஊட்டச்சத்து நிறைந்த உணவு, தங்குமிட வசதி மற்றும் மாணவர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வழிசெய்யும் வகை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சிறப்பு விளையட்டு விடுதியில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள சிறப்பு நிலை விடுதிக்கு, தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாள்சண்டை ஆகிய விளையாட்டுக்களின் படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடைப்பந்து, வளைகோல்பந்து,கைப்பந்து, கபடி என்ற விளையாட்டுக்களின் படி மாணவிகள் விண்ணப்பனிக்கலாம்.
காட்பாடி, வேலூர் மாவட்டத்தல் உள்ள சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கு, கூடைப்பந்து, ஹாக்கி, கைப்பந்து, கபடி என்ற விளையாட்டுக்களின் படி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கு, வளைகோல்பந்து விளையாட்டின் படி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அடிப்படைத் தகுதிகள்:
12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு/பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் /அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அனாவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள்/இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) / மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தடகளம், கால்பந்து, கையுந்துபந்து மற்றும் கூடைப்பந்து விளையாட்டுகளில் 185-செ.மீ.-க்கு மேல் உயரமுள்ள மாணவர்களுக்கும் / 175-செ.மீ.-க்கு மேல் உயரமுள்ள மாணவியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தகுதி சான்றிதழினை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதற்கான கடைசி நாள் 19.09.2022 அன்று மலை 6.00 வரை ஆகும்.
இந்த மாணவர் சேர்க்கைக்கு மாநில அளவிலான தேர்வுகள் நடைபெறும்.
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கான தேர்ச்சி பெறும் மாணாவர்களுக்கு தேர்வு நடைபெறும் அன்றே கலந்தாய்வு நடத்தி சேர்க்கை ஆணை வழங்கப்படும். ஒரு வார காலந்திற்குள் அவர்கள் விடுதியில் சேர வேண்டும். தவறும் பட்சத்தில் அவரது சேர்க்கை இரத்து செய்யப்படும் என்று ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
https://www.sdat.tn.gov.in/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)