மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை 26-9-2021 தமிழகம் முழுவதும் மூன்றாவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெறும்
வியாழன், 23 செப்டம்பர், 2021
1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?- கல்வி அமைச்சர் பேட்டி
1- 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யவில்லை:
தமிழகத்தில் 1 - 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
கோவையில் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:
1 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.
பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்வு குறித்து சுகாதார நிபுணர்களுடன் ஆலோசிக்கும் போது,
பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும்.
பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வலியுறுத்துகின்றன.
கோவிட் அச்சம் காரணமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.
கோவிட் பரவல் கட்டுக்குள் இருப்பது பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்