ஞாயிறு, 19 டிசம்பர், 2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னையில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு ஆற்றிய உரை!














 

2021-22ஆம் கல்வியாண்டு முதல் நடைபெற உள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையின், பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள 4 அரசாணைகளின் தொகுப்பு மற்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை - அனைத்தும் ஒரே கோப்பில்!!!


 Click here for download pdf

மூளைக் கசடுகளை வெளியே தள்ளுங்கள் - ஸ்ரீதர் சுப்ரமணியம் அருஞ்சொல் கட்டுரை 

 மூளைக் கசடுகளை வெளியே தள்ளுங்கள் ஸ்ரீதர் சுப்ரமணியம் மார்க் ஹிகின்ஸ் என்று எங்கள் அலுவலகத்தில் ஒருவர் இருந்தார். அவர் பக்கத்தில்தான் நான் உட்கார்ந்து இருப்பேன். தினமும் காலையில் அரை மணி நேரம் எந்த வேலையும் செய்ய மாட்டார். சும்மா தனது இடத்தில் உட்கார்ந்து கொண்டு எதையோ கடகடவென 'டைப்' அடித்து கொண்டிருப்பார். அவர் தட்டச்சும் வேகம் ஆச்சரியமூட்டும். 'இவ்ளோ வேகமா என்னய்யா 'டைப்' பண்ணிக்கிட்டு இருக்கே?' என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார். 'ஒண்ணும் இல்லே, ஜாலியா!' என்று சொல்லிவிட்டு 'டைப்' அடிப்பதைத் தொடர்வார். ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த எனக்கு, அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து ஆவல் மிதமிஞ்சிப் போனது. ஒரு முறை மதிய உணவுக்கு உடன் போன போது இதைக் கேட்டுவிட்டேன். கொஞ்சம் யோசித்தவர் பின் வாயைத் திறந்தார். "வேற ஒண்ணும் இல்ல. தினமும் 'ப்ரெய்ன்' டம்ப் பண்ணிட்டு வேலை ஆரம்பிச்சா எனக்கு நல்லா, ஈஸியா இருக்கும். அதான்" என்றார். "அது என்ன ப்ரெய்ன் டம்ப்?" என்று கேட்டேன். விளக்க ஆரம்பித்தார். "அலுவலில் நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை தெளிவாக சிந்திக்க இந்தப் பயிற்சி உதவுகிறது" என்றார். நாம் தினமும் பல்வேறு வேலைகளில், பல பிரச்சினைகளில் மூழ்கிக் கிடக்கிறோம். அப்போது வேலையில் பல்வேறு தடைகளை எதிர்கொள்கிறோம். அவற்றின் மூலம் பல்வேறு மன அழுத்தங்கள் நம்மை அடைகின்றன. இந்த மன அழுத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றன் மீது ஒன்றாகப் படிந்துவிட, அது தெளிவாக சிந்திக்கும் திறனை பாதிக்கிறது. பின்னர் கோணல் மாணலாக சிந்திப்பது நமது வேலையையும் பாதிக்கவே செய்கிறது. இதை சரி செய்ய பலர் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். சிலருக்கு ஆபீஸ் டென்ஷன் காரணத்தைக் காட்டி தொடர்ந்து சிகரெட் பிடிப்பார்கள். சிலர் டம்ளர் டம்ளராக காஃபி குடிப்பார்கள். இப்படி எல்லாம் செய்து உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டி இராமல் டென்ஷனைக் குறைத்து தெளிவாக சிந்திக்க வழிமுறைகள் உள்ளன. மார்க் இதற்காக தினமும் அரை மணி நேரம் ஒதுக்குகிறார். அந்த நேரத்தில் கணினியில் ஓர் ஆவணத்தைத் திறந்துவைத்து, அதில் மனம் போனபடி என்னவெல்லாம் தோன்றுகின்றதோ அதையெல்லாம் 'டைப்' அடிக்கிறார். இதில் வகை தொகை எதுவும் இல்லை. 'சென்சார்' இல்லை. மனதில் தோன்றுவதை, ஓடுவதை எல்லாம் அப்படியே அடித்துக்கொண்டே போகவேண்டும். தினம் அரை மணி நேரம் அல்லது இரண்டு பக்கங்களுக்கு என்று வரம்பு வைத்துக் கொள்ளலாம். 'டைப்' அடித்ததை அப்படியே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதை அப்புறம் படித்து 'எடிட்டிங்' எதுவும் செய்யக் கூடாது. படிக்கவும் கூடாது. (வேண்டுமானால் ஐந்தாறு ஆண்டுகள் கழித்துப் படித்துப் பார்க்கலாம். தமாஷாக இருக்கும்.) இதனை 'ப்ரெய்ன் டம்ப்' என்று சொல்கிறார்கள். உங்கள் மூளையில் இருக்கும் கசடுகள் எல்லாம், ஒன்றன் பின் ஒன்றாக உங்கள் கணினியில் வந்துவிழும். ஏறக்குறைய மூளையை பெருக்கி சுத்தம் செய்வது போன்றது இந்தப் பயிற்சி. இது அவ்வளவு எளிதல்ல. ஆரம்பத்தில் கொஞ்சம் 'ஙே' என்று விழிக்க வைக்கலாம். ஆனால் சில நாட்களிலே பழகி விடும். இப்படி மூளைக் கசடுகளை அகற்றிவிட்டு உங்கள் ப்ராஜக்ட் பற்றி யோசிக்கும் போது ப்ராஜக்ட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தெளிவான தீர்வுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி மூளைக் கசடை கொட்டும் வேலையை அதிகாலை எழுந்த உடனேயே செய்ய வேண்டும் என்று சிலர் பரிந்துரைக்கிறார்கள். காலை, மாலை என்பதெல்லாம் உண்மையில் உங்கள் வசதியைப் பொருத்ததுதான். ஆனால் ஒன்று, இந்த வேலையை எந்த கவனச் சிதறலும் இன்றி செய்ய வேண்டும். பத்து நிமிஷம் எழுதிவிட்டு, 'ஒரு டீ சாப்பிட்டு வந்து கன்டினியூ பண்ணலாமே' என்று செய்யக் கூடாது. அல்லது எழுதிக் கொண்டிருக்கும் போது நடுவில் கேர்ள் ஃப்ரெண்ட்டுக்கு ஃபோன்செய்து, கொஞ்சம் கடலை போட்டுவிட்டு பின் தொடர முடியாது. மார்க் செய்து கொண்டிருந்தது போல இலக்கு வைத்த நேரம் அல்லது பக்கங்கள் முடிந்த பின்னர்தான் அடுத்த வேலைக்குப் போக வேண்டும். தெளிவாக சிந்திப்பதற்கு சிலர் வேறு சில உத்திகளை பயன்படுத்துகின்றனர். அலுவலில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை என்ன என்பதை விளக்கமாக எழுத முயற்சி செய்யுங்கள். அந்தப் பிரச்சினை தீராமல் இருப்பதற்கு உள்ள தடைகள் என்னென்ன? அந்தத் தடைகளை எப்படி நீக்குவது என்று எழுதுங்கள். ஏறக்குறைய உங்கள் நெருங்கிய நண்பருக்கு கடிதம் எழுதுவது போல இதனை பாவிக்கலாம். (ஆனால் நண்பர் யாருக்கும் அனுப்பிவிட வேண்டாம்!) பிரச்சினையை மனதில் வைத்துக்கொண்டே அசை போடுவதைவிட இப்படி எழுதிக் கொட்டுவது பயனளிக்கிறது. இதனை பாதி எழுதிக் கொண்டிருக்கும் போதே சிலருக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆனால் அதுதான் தீர்வு கிடைத்துவிட்டதே என்று நிறுத்தி விடாமல் முழுமையாக எழுதி முடியுங்கள். சிலர் இப்படி பிரச்சினைகளை இரவில் தூங்கும் முன்பு ஒரு முறை கணினியிலோ அல்லது நோட்டுப் புத்தகத்திலோ எழுதிவிட்டுத் தூங்குவார்கள். ஆங்கிலத்தில் 'Sleep over a problem' என்று சொல்வார்கள். நாமே கவனித்து இருப்போம். சிக்கலாகத் தோன்றும் சில விஷயங்கள் தூங்கி எழுந்ததும் சிக்கல் விடுபட்டு எளிமையாக காட்சி அளிக்கும். 'அட, அதையெல்லாம் சமாளிச்சிரலாம்!' என்று தோன்றும். இதற்குக் காரணம் இரவில் தூங்கும் போது ஆழ்மனம் இவற்றை அசைபோட்டு தீர்வுகளை கண்டுபிடித்து இருக்கும். காலை எழுந்ததும் அது சட்டென மூளையில் உதிக்கும். இரவில் தூங்கும் முன்பு நமது பிரச்சினையை விளக்கமாக எழுதி வைப்பது ஏறக்குறைய நமது ஆழ்மனதுக்கு நினைவூட்டுதல் போல. 'இதோ பார், இதுதான் மேட்டர். ராத்திரி ஒழுங்கா யோசிச்சி ஐடியா பாத்து வெயி!' என்று சொல்வது போல. இரவில் தூங்கும் முன்பு கேட்ட ஒரு பாடல் காலை எழுந்ததும் காதில் அனிச்சையாக ஒலிப்பதை கவனித்திருப்போம். மனது அந்தப் பாடலை இரவு முழுவதும் அசை போட்டுக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அந்த மாதிரி சும்மா வெட்டியாக ஒரு பாட்டைக் கொடுத்து ஆழ்மனதின் 'நேரத்தை வீணடிக்காமல்', ஒரு பிரச்சினையை அதனிடம் கொடுத்து தீர்வு குறித்து யோசிக்க வைப்பது பிரயோசனமாக இருக்கும் இது போல, வேலை எதுவும் செய்யாமல் இணையத்தில் உலவாமல் ஓரிடத்தில் வெட்டியாக அமர்ந்து இருப்பதன் நன்மை குறித்து முன்னர் எழுதி இருக்கிறேன். இந்த உத்தி எனக்கே பல முறை தீர்வுகளைக் கொண்டுவந்திருக்கிறது. அதையும் முயற்சி செய்யலாம். மூளையை சுத்தம் செய்ய மார்க் நேரம் ஒதுக்கியது போல இதற்கும் தினம் ஒழுங்காக நேரம் ஒதுக்கி அமைதியாக இருக்க வேண்டும். இந்த 'வெட்டி' நேரத்தில் உங்கள் அலுவல் பிரச்சினைகள் பற்றி யோசிக்கவே கூடாது. பெயருக்கு ஏற்றார்ப் போல இது வெட்டி நேரம். கிளியை தேடி அதன் பின் ஓடும்போது அதுவும் தப்பி ஓட முயலும். நாம் சும்மா கண்டுகொள்ளாமல் உட்காரும் போது அதுவே வந்து தோளில் அமரலாம். சிலருக்கு சில வகை இசை சிந்திக்க உதவியாக இருக்கக் கூடும். இசைதானே தேவை, என்று 'ஆலுமா டோலுமா' பாடலைப் போட்டு உட்கார்ந்தால் சிந்தனையில் தீர்வு தோன்றாது. குத்தாட்டம்தான் தோன்றும். சில வகை மேற்கத்திய செவ்வியல் இசை போன்றவை உதவலாம் என்று சொல்கிறார்கள். இதுவும் கொஞ்சம் 'சென்ட்டிமென்ட்' சம்பந்தப்பட்டதுதான். என்னைப் பொருத்த வரை ஜொஹான்ஸ் பிராம்ஸ் இசையைக் கேட்டால் போதும்; வேலை சூப்பராக ஓடும் என்று ஒரு உளவியல்-ரீதியான 'சென்ட்டிமென்ட்' இருக்கிறது. அவர் இசை ஆரம்பித்த உடன் வேலை தானாக ஓடும். அறிவியல் ரீதியாக யோசித்தால் இரண்டுக்கும் இடையில் பெரிய தொடர்பு இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல எனக்குள் ஒரு பிம்பம் பதிந்துவிட்டதால் அதைத் தொடர்கிறேன். எப்படியோ வேலை ஒழுங்காக நேரத்துக்கு முடிந்தால் சரிதானே? அதுவுமின்றி சிகரெட், காஃபி போல பிராம்ஸ் ஒன்றும் உடலுக்கு கெடுதல் விளைவிப்பதில்லையே! நீங்கள் கூகுள் செய்தால் பல்வேறு வித்தியாசமான யோசனைகள் உங்களுக்குக் கிடைக்கலாம். உங்கள் அணுகுமுறை எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்; அது உங்கள் வசதியின்பாற்பட்டது. ஆனால் ஏதாவது செய்து உங்கள் மூளையைத் தொடர்ந்து சுத்திகரித்துக் கொண்டு இருப்பது அமைதியான வாழ்வுக்கும் தெளிவான சிந்தனைக்கும் உதவும். வேலையிலும் திறன் மிகுந்து காணப்படுவீர்கள்.