செவ்வாய், 23 மார்ச், 2021

*🔖தெலங்கானாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி புதிய ஊதியம் அமல்....அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு: ஓய்வு வயது 61 ஆக உயர்வு :*

*🔖தெலங்கானாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி புதிய ஊதியம் அமல்....அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு: ஓய்வு வயது 61 ஆக உயர்வு :*

*✍️12th Internal Mark பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசு தேர்வுத்துறை இயக்குநரின் அறிவுரைகள்.*

*✍️12th Internal Mark பதிவேற்றம் செய்தல் தொடர்பான அரசு தேர்வுத்துறை இயக்குநரின் அறிவுரைகள்.

தேசிய விருதும்,தேசிய கல்விக்கொள்கையும்!வாசிக்கையில்...கேட்கையில்...தோன்றுகிறது!முரண்!கரிகாலன் கருத்து!

முரண்
++++++
“ காடு இருந்தா எடுத்துகிடுவானுவ "

" ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ "

" ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது " 

“படி, அதிகாரத்துக்கு வா! "

" உனக்கு செஞ்சத, 
நீ !
எவனுக்கும் செய்யாதே ”

இத்தகு  
வசனங்கள் 
கொண்ட
 "அசுரன் "
தமிழ் திரைப்படத்திற்க்கு.
தேசியவிருது 
கிடைத்திருப்பது வரவேற்புக்குரியதாகும்!

 " அசுரன் " திரைப்படத்திற்கு
தேசியவிருது கிடைத்திருக்கையில் தான்,
தேசியக்கல்விக் கொள்கை 
தமிழ்நாட்டிலும்  
அமலாகும்  
அறிவிப்பும்
வெளியாகிறது !

இத்தகு அறிவிப்புகள் கிடைக்கையில்...
வாசிக்கையில்...
கேட்கையில் ...
தோன்றுகிறது!
முரண்!
 
-கரிகாலன்.

*🔖மத்திய அரசு துறைகளில் பிற மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை..வேலைவாய்ப்பில் பரிபோகும் தமிழக உரிமை.தொடர்புறக்கணிப்பால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு!*

*🔖மத்திய அரசு துறைகளில் பிற மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை..வேலைவாய்ப்பில் பரிபோகும் தமிழக உரிமை.தொடர்புறக்கணிப்பால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு!*

எங்கள் நாடு தமிழ்நாடு!

எங்கள் நாடு 
தமிழ்நாடு!

தமிழ்நாடு மாறாது!.கரிகாலன் கருத்து!!

# தமிழ்நாடு மாறாது!
++++++++++++++++++

தியாகி.
சங்கரலிங்கனார் 
உயிர் கொடைத் தந்து  
உருவாகிய மாநிலம்
எங்கள்
தமிழ்நாடு!.

பேரறிஞர் அண்ணா
இந்திய நாடாளுமன்றத்தில் 
முழங்கிய மாநிலம்
எங்கள்
தமிழ்நாடு !.

தமிழ்நாடு சட்டமன்றத்தின்  
பிரகடனம் 
எங்கள் நாடு 
தமிழ்நாடு!

ஈராயிரமாண்டு 
பாரம்பரியம்மிகு
தமிழ் இலக்கியங்களில் 
எங்கள் நாடு 
தமிழ்நாடு !.

மகாகவி பாரதி வார்த்தைகளில் 
கல்விச்சிறந்த நாடு 
எங்கள் தமிழ்நாடு  !.

ஆரியம் போல்
வழக்கொழிந்த
நாடற்ற மொழி அல்ல!.
சீரிளமைத் 
திறம்வியந்து  
நாள்தோறும் 
நாட்டினர் 
போற்றும் மொழி!
வளரும் மொழி !
எங்கள்
கன்னித்தமிழ்மொழி
அரசாளும் நாடு 
எங்கள்
தமிழ்நாடு!.

பரிபாடல்,
பதிற்றுப்பத்து, 
சிலப்பதிகாரம்,
 மணிமேகலை,
பக்தி இலக்கியம்
என 
இலக்கணத்தில் ...
இலக்கியத்தில்...
வாழ்வியலில்...
வகை வகையாக...
தொகை தொகையாக...
நீடித்து நிலைத்து  
பெயர் சிறக்க 
வாழும் வரலாறாய் 
வாழும்நாடு!
நாள்தோறும்
வளரும் நாடு!
எங்கள் தமிழ்நாடு!.

அகிலத்தின் 
மூத்த பெருங்குடிமக்களின்
பல்லாயிரமாண்டு காலத்திய
 செழுமைமிகு 
வரலாற்றுப் பெட்டகம்
எங்கள் 
தமிழ்நாடு!.
வரலாற்றுக் கருவூலம்  
எங்கள்
 தமிழ்நாடு !.

இத்தகுப் பெருமைப்போன்று 
எண்ணிலடங்கா 
எண்ணங்களினால்...
வண்ணங்களிலால்...
உரத்த சிந்தனைகளினால்...
நிறைந்து 
செழிக்கும் நாடு
 எங்கள் 
 தமிழ்நாடு!.

கம்பீரமாக சொல்லுவோம்!
எங்கள்நாடு
தமிழ்நாடு!.

#மாறாது தமிழ்நாடு!.
-கரிகாலன்.

*📚அரசாணை எண் -327- கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.*

*📚அரசாணை எண் -327- கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.*