வியாழன், 11 அக்டோபர், 2018
அரசு பள்ளி Pre KG, LKG, UKG வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம்-பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட கேஜி வகுப்புக்களுக்கான பாட திட்டங்களை பள்ளிக் கல்வித்துறை வடிவமைத்துள்ளது.
நடப்பாண்டில் 32 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித் துறை வடிவமைத்துள்ளது.
இந்த புதிய பாடத்திட்டங்கள் *ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி துறை* இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதை பார்த்து, ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள், வரும் 30ம் தேதிக்குள் கருத்துகளை பதிவு செய்யலாம் என அந்த துறையின் இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி மழலையர் வகுப்புகள் துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாணை : அம்மா ஸ்கூட்டர்-- மாற்றுத்திறன் மகளிருக்கு மானியம் உயர்த்தி வெளியீடு
அம்மா ஸ்கூட்டர்: மாற்றுத்திறன் மகளிருக்கு மானியத்தை உயர்த்தி புதிய அரசாணை!
மாற்றுத்திறனாளிகள் சங்கம் தொடுத்த வழக்கு வெற்றி!!
New GO allows 25% more subsidy for disabled in Amma Scooter! Gist under tamil version..
தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் மகளிருக்கான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை துவக்கியது. இத்திட்டத்தின்படி ஸ்கூட்டர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50% மானியம் அல்லது ரூ.25,000/- வழங்குவதாக அறிவித்து பொதுவாக அரசாணை வெளியிட்டது.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016-ன்படி மத்திய, மாநில அரசுகள் எந்த ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டம் தீட்டினாலும், மாற்றுத்திறனாளிகளுக்கென தனியாக கூடுதலாக 25% ஒதுக்கீடுகளை செய்ய வேண்டும். ஆனால், மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் மானியம் உயர்த்தி வழங்க தமிழக அரசு முன்வரவில்லை.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மனுக்கள் அனுப்பி முறையீடு செய்தும் பயன் இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பிப்-21 அன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி K.ரவிச்சந்திரபாபு, மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தில் மாற்றுத்திறன் மகளிருக்கு 25% மானியம் உயர்த்தி வழங்குவது குறித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் அளித்துள்ள மனுக்கள் மீது 6 வார காலத்திற்குள் உரிய முடிவுகளை எடுக்க தமிழக அரசின் ஊரகவளர்ச்சித்துறை செயலளருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 6 மாத காலமாகியும் ஊரகவளர்ச்சித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் செப்-27 தேதியிட்ட ஊரகவளர்ச்சித்துறை அரசாணை எண்.143 வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையில், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் வாங்க விரும்பும் தகுதியுள்ள மாற்றுத்திறன் மகளிருக்கு மற்றவர்களுக்கு வழங்கப்படும் மானியத்தைவிட கூடுதலாக 25% உயர்த்தி அதாவது ரூ.31,250 வரை மானியம் வழங்குவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலாளரான ஹன்ஸ்ராஜ் வர்மா இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார்.

இணையதள விபரீத விளையாட்டான, 'மோமோ சேலஞ்ச்' பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தொடக்ககல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இணையதள விபரீத விளையாட்டான, 'மோமோ சேலஞ்ச்' பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, தொடக்ககல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.இணையதள, 'புளூவேல்' விளையாட்டு, பல இளைஞர்களை தற்கொலைக்கு துாண்டியதால், அதற்கு தடை விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மோமோ சேலஞ்ச் என்ற மற்றொரு விபரீத விளையாட்டுக்கு, சிறார் ஆட்படுவது தெரியவந்துள்ளது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்குமாறு, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்திஉள்ளார்.
'மோமோ சேலஞ்ச், வாட்ஸ் ஆப் குழுக்களில் பகிரப்படுவதால், விளையாட்டாக மொபைல் போன்களில் பதிவிறக்கி, மாணவர்கள் விளையாட வாய்ப்புள்ளது. ஒருமுறை இந்த விளையாட்டில் உறுப்பினராக சேர்ந்தால், அடுத்தடுத்த நிலைகளில் விளையாட, துாண்டப்படுவதாக கூறப்படுகிறது. 'இறுதியில் தற்கொலை செய்து கொள்ள வைப்பதால், இது சார்ந்து, விரிவாக மாணவர்களுக்கு விளக்க வேண்டும்' என, சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)