ஞாயிறு, 11 நவம்பர், 2018
டிசம்பரில் 1884 மருத்துவ பணியிடங்களுக்கு தேர்வு' - அமைச்சர்
கூகுள் டிரான்ஸ்லேட் ஆப் இனி ஆஃப்லைனிலும் யூஸ் பண்ணலாம்.
செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் நியூரல் சிஸ்டம் ஒவ்வொரு வார்த்தையாக மொழிமாற்றம் செய்யாமல், ஒட்டுமொத்த வாக்கியத்தையும் மொழிமாற்றம் செய்யும் என கூகுள் தெரிவித்துள்ளது.
அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இரட்டை திரை சிஸ்டம் நவம்பர் 30ம் தேதி அமல்: பதிவுத்துறை அதிகாரி தகவல்
தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றம் பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவின்போது, சில நேரங்களில் விரல் ரேகை பதியவில்லை, புகைப்படம் சரியாக விழவில்லை என்று சிறு காரணங்களை கூறி பத்திரம் பதியாமல் திருப்பி அனுப்பும் நிலை உள்ளது. மேலும், சார்பதிவாளர்கள் விரல் ரேகை பதிவை கேட்கும் போது பொதுமக்களுக்கும் பல நேரங்களில் சந்தேகங்கள் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கவும் பத்திரப்பதிவில் வெளிப்படை தன்மை இருக்கும் வகையில், பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி பத்திரம் பதிய வரும் பொதுமக்களும், ஆவண பதிவை தெரி ந்து கொள்ளும் வகையில் இரட்டை திரை சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி பத்திரம் பதிய வரும் பொதுமக்களும் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். முதற்கட்டமாக சென்னையில் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த இரட்டை திரை சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த சிஸ்டம் நவம்பர் 30ம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று பதிவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும், கூறுகையில், வங்கிகளை போல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன் சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் முன்பதிவு ெசய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 51 அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற அலுவலகங்களில் இத்திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த டோக்கன் சிஸ்டம் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.
தேர்தல் பணிக்கு ஆசிரியர் பட்டியல் : பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு
லோக்சபா தேர்தல் நடக்க இருப்பதையொட்டி, பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் விபரம், எண்ணிக்கை குறித்து விபரங்களை அனுப்ப, உடுமலை கல்வி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சுற்றிக்கை விடப்பட்டுள்ளது
பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்களும், தேர்தலின் போது, ஓட்டுச் சாவடி மைய அலுவலர், நிலை 1,2 அலுவலர்களாக பணியாற்றுகின்றனர். இதற்கான விபரங்கள் சேகரிக்க, கல்வித்துறையிலிருந்து ஆசிரியர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன
அனைத்து ஆசிரியர்களும் அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கல்வி மாவட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்
மேலும், நவ., மாதத்தில், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு நகல் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்துள்ளதாக தலைமையாசிரியரின் கடித ஒப்புதலையும் சமர்ப்பிக்க வேண்டும் என, கல்வித்துறை அறிவித்துள்ளது
CPT- (சென்னை துறைமுகம்) Chennai Port Trust Recruitment Senior Deputy Director Posts
Job Category: Central Govt Jobs
Official Website: www.chennaiport.gov.in
Name of the Posts: Senior Deputy Director (EDP) & Various Post
No. of Posts: 01 Vacancies
Qualification: Engineering degree
Salary Details: Rs.24,900- 50,500/-pm
Job Location: Chennai
Selection Procedure: Interview
Application Apply Mode: Offline
Starting Date: 09.11.2018
Last Date: 24.12.2018
OR
OR
Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through Chennai Port Trust official Notification 2018 for more reference
தமிழக அரசில் டிராப்ட்ஸ்மேன் வேலை -டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியாக உள்ள டிராப்ட்ஸ்மேன் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு கட்டிட கலையியல் துறையில் டிப்பளமோ முடித்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு சுற்றுலா துறையில் கணிணி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள்
தமிழ்நாடு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்புகள்
பதவி: M.V. Mechanic (Skilled) - 06
பதவி: Copper & Tinsmith (Skilled) - 02
பதவி: M.V. Electrician (Skilled) - 01
பதவி: Tyreman (Skilled) - 02
“The Manager, Mail Motor Service, No.37, (Old No.16/1), Greams
Road, Chennai – 600 006.”
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்புகள் Grade - 4
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை Grade 3 காலிபணியிடங்கள்
இந்திய ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்புகள்- பாதுகாவலர் பணியிடம்- 10ம் வகுப்பு தேர்ச்சி
சிலிண்டருக்கான மானியதொகை சரியாக வருகின்றதா சரிபார்ப்பது எப்படி?
அறிவியல் ஆசிரியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசு மற்றும் விருது வழங்கப்பட உள்ளது...
உலகிலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் ரோபோக்கள்~ சீனவில் அறிமுகம்…
உலகத்திலேயே முதல் முறையாக செய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
செய்திகள் வாசிக்கும் ஏஐ (artificial intelligence) ரோபாக்களை சின்ஹுவா செய்தி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
சீன செய்தி வாசிப்பாளர்களின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏஐ ரோபோக்கள், திரையில் ஓடும் எழுத்துகளைப் படிக்கும். செய்திகளுக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவற்றின் வாய் அசையும் வகையில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம் மற்றும் சீன மொழி என இரு மொழிகளில் செய்திகளை வாசிக்க தனித்தனியாக இரண்டு ஏஐ ரோபோக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேடுதல் பொறிகள் மற்றும் குரலைக் கண்டுணர்தல் தொழில்நுட்பங்களின் மூலம் இவை உருவாக்கப்பட்டுள்ளது.
" இந்த ஏஐ ரோபோக்கள் 24 மணி நேரமும் அயர்வின்றித் தொடர்ந்து வேலை செய்யும். முக்கியச் செய்திகளை விரைந்து தடுமாற்றமில்லாமல் வாசிக்கும். இவை நிஜ ஏஐ ரோபோக்களைப் போல சுயமான சிந்தித்து முடிவெடுக்காமல், செய்தியைப் படிக்க மட்டுமே செய்யும் " என்று சின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.