சனி, 30 மார்ச், 2019

45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது - TRB அறிவிப்பு.

பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் TET தேர்வுக்கு விண்ணப்பிக்கமுடியாமல் பரிதவிப்பு. கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் பணிநியமனத்திற்கு TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில்கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இதன்படி 2012 முதல் இதுவரைதமிழ்கத்தில் 4 முறை TET தேர்வு நடைபெற்றுள்ளது. இதுவரையிலானTET தேர்வுகளில் B.Ed ., தேர்ச்சி பெற்ற அனைவருமே எழுதஅனுமதிக்கப்பட்டனர். அதற்கென UG மற்றும் B.Ed ஆகியவற்றில்குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் 2019 ம் ஆண்டுக்கான TET தேர்வு அறிவிக்கப்பட்டுONLINE வழியாக விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது. ஆனால்இம்முறை TET தேர்வில் Paper 2 க்கு விண்ணப்பிக்க UGல் OC பிரிவினர்50% மும் , இதர இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்கள் ( BC /MBC / SC / ST ) அனைவரும் 45% முன் பெற்றிருக்க வேண்டும் என TRB புதியவிதிமுறை வகுத்துள்ளது. TRBன் இந்த புதிய விதிமுறையால் B.Ed பட்டம் பெற்று TET தேர்வு எழுதக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கானமாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். பாதிக்கப்பட்டமாணவர்கள் சார்பாக சில நியாயமான கோரிக்கைகளைமுன்வைக்கிறோம். கோரிக்கைகள்

 1. தமிழகத்தில் B.ED பட்டம் பெற UGல் குறைந்தபட்ச மதிப்பெண்கள்நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி UG பட்டப் படிப்பில் OC பிரிவினர் 50% மும் , BC பிரிவினர் 45 % மும் , MBC பிரிவினர் 43% மும் , SC / ST பிரிவினர் 40% மும் பெற்றிருந்தால் மட்டுமே B.ED படிப்பில் சேரமுடியும். இவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களே B.ED தேர்ச்சி பெற்றுTET தேர்வை எழுதுகின்றனர். இந்நிலையில் TET தேர்வுக்கெனதனியாக UG பட்டப் படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் வைப்பதுசரியானதல்ல. TRBன் இந்த முடிவு சமூக நீதிக்கு எதிரானது.

2. TRBன்இம்முடிவால் UG பட்டப் படிப்பில் 43 - 44% மதிப்பெண்கள் வரை பெற்றுB.Ed பட்டம் பெற்ற M. BC மாணவர்களும்; 40-44 % மதிப்பெண்கள் வரைபெற்று BEd பட்டம் பெற்ற SC / ST மாணவர்களும் TET தேர்வு எழுதமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களில் B.ED பட்டப்படிப்பு கேள்விக்குள்ளாகி உள்ளது.

 3. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டுப்பிரிவினர் B.ED., பட்டப் படிப்பில் சேர UG ல் குறைந்தபட்ச ம் 40 % மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் 40% க்கும் கீழ்பெற்ற தமிழக மாணவர்கள் பலர் UG தேர்வில் தேர்ச்சி பெற்றாலே B.Ed பட்டப் படிப்பிற்கு அனுமதிக்கும் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், கலசலிங்கம் பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில தமிழகப் பல்கலைக்கழகங்களிலும் ; புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டகல்வியியில் கல்லூரிகளிலும் பயின்று B.Ed பட்டப் படிப்பில் தேர்ச்சிபெற்றுள்ளனர். இத்தகு மாணவர்களின் எண்ணிக்கை மிகவும்அதிகம் ஆகும். கடந்த TET தேர்வுகளில் இம்மாணவர்களும் தேர்வுஎழுத அனுமதிக்கப்பட்டு, அவர்களில் சிலர் தேர்ச்சி பெற்றுப் பணிநியமனமும் பெற்றுள்ளனர்.

 4. தற்போதையக் கல்வி ஆண்டில் கூட B.Ed பட்டப் படிப்பில் UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள் பயின்றுவருகின்றனர். TET தேர்வை UGல் 45% க்குக் கீழ் பெற்ற மாணவர்கள்எழுத முடியாதெனில் அவர்களை B.ED பட்டப் படிப்பில் சேர்ப்பதுமுரணானது இல்லையா? எனவே தமிழக அரசும், ஆசிரியர் தேர்வுவாரியமும் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் B.ED பயின்று பட்டம்பெற்ற தமிழக மாணவர்கள் அனைவரையும் TET தேர்வு எழுதஅனுமதிப்பதே சரியான முடிவாகும். இல்லையெனில் UGல் 45% மதிப்பெண்களுக்கும் கீழ் பெற்று B.ED பட்டம் பெற்றபல்லாயிரக்கணக்கான மாணவர்களின் நிலை கேள்விக்குறி ஆகும். 

ஏப்ரல் - ஜூன் காலாண்டு சிறுசேமிப்பு வட்டியில் மாற்றம் கிடையாது...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் வாக்கு முழுமையாக செலுத்த நடவடிக்கை வேண்டும் ~ தேர்தல் ஆணையரிடம் ஜாக்டோ-ஜியோ மனு...

உங்கள் வாக்கு சாவடி வாக்காளர் பட்டியல் PDF வடிவில்...

ஜாக்டோ - ஜியோ'வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு...

👆தமிழகத்தில் ஆட்சியை நிர்ணயிப்பதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. 13 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரையும் சேர்த்தால், இந்த மடங்கு சில கோடிகளை தாண்டும்.

👆அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் காலத்தில், வாழ்வாதாரத்தை காக்க, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன் போராடினர்.அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாநில அரசு ஆர்வம் காட்டாததுடன், அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெரும்பகுதி அரசு ஊழியர்கள், ஆசிரியர் சம்பளத்திற்கு போய் விடுவதாக முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிருப்தி:

👆இது, அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதுவும், அ.தி.மு.க., ஊழியர்கள் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சை அவரது கட்சியினரே வெளியிட்டது தான் 'ஹைலைட்!' உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலியாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டு அமைப்பான 'ஜாக்டோ - ஜியோ'வினர், வேறு வழியின்றி பணிக்கு திரும்பினர். ஆனாலும், பழனிசாமி அரசு மீதான அவர்களின் அதிருப்தி தொடர்கிறது. அரசு ஊழியர்களை தங்களுக்கு ஆதரவாக மாற்ற ஆளுங்கட்சியினர் எந்த வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. இதனால், கடுப்பான அரசு ஊழியர்கள் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான ஏப்ரல் 18ல் ஒரு விரல் புரட்சி மூலம் ஆட்சியாளருக்கு கசப்பு மருந்து தர வேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றனர்.

👆இது குறித்து, சமூக வலைதளங்களில் கணவர், மனைவி, மகன், மகள், மருமகன், 18 வயது நிரம்பிய பேரன், பேத்தி, மாமன், மச்சான், சம்மந்தி, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி, தம்பி மனைவி என உறவினர்களிடம் பேசுங்கள் என்ற அழைப்புடன் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் பரப்பும் செய்தியில் இடம் பெற்றுள்ளது...

👆வேலையிழப்பு தடை சட்டம் அரசு வேலைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசாணை 56, காணாமல் போன ஓய்வூதியத்திற்கு பிடித்தம் செய்த தொகை, ஓய்வு பெறும் காலத்தில் ஓய்வூதியம் இல்லாத நிலை, பதவிகள் மட்டுமின்றி பணிமாறுதல்களுக்கு கூட லட்சக்கணக்கில் லஞ்சம், உரிமைக்காக போராடியவர்கள் மீது அடக்குமுறை, பெண்கள் என்றும் பாராமல் இரவு, 11:00 மணி வரை மண்டபங்களில் அடைத்து வைத்து அலைக்கழிப்பு செய்தது.

👆அந்த நேரத்தில் இயற்கை உபாதைக்கு கூட செல்ல முடியாமல், பெண் ஊழியர்கள் தவித்தது, வேலை நிறுத்தம் வாபஸ் பெற்ற பின்பும், புதிய பணியிடத்திற்கு மாறுதல் தந்தது.ஒழுங்கு நடவடிக்கையை தொடர்வது, சம்பள உயர்வுக்கான நிலுவைத்தொகை என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தொடர்கின்றன.
ஜாக்டோ - ஜியோவின் உண்மையான ஒரு விரல் புரட்சியில் உங்கள் சொந்தங்கள் அனைவரையும் இணையுங்கள். மாற்றம் ஏற்பட ஓட்டுப்பதிவு அதிகம் அவசியம். தேர்தலில் ஒரு விரல் மை புரட்சி மூலம் ஆளுவோருக்கு நாம் தருவோம் கசப்பு மருந்து. அதுவே நமக்கு ஏற்பட்ட மணப்புண்ணுக்கு மருந்தாக அமையும்.

👆ஆம், அன்று பகை முடிக்க பாஞ்சாலி, 'எரிதழல் கொண்டு வா' என, வீரமுழக்கமிட்டாள். நவீன பாஞ்சாலியாக மாறுங்கள். இந்த ஆட்சியாளர்களுக்கு, மை மூலம் எச்சரிக்கை விடுவோம். இதில், நம் சொந்தங்களையும் சேர்த்து கொள்வோம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாக்டோ -ஜியோ ~ தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்தி 100 விழுக்காடு வாக்குப்பதிவினை எய்துவது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வழங்கிய கடிதம்...