புதன், 25 ஏப்ரல், 2018

தகவல் தொழில்நுட்ப பயிலரங்கு (28-04-18~ நாமக்கல்) அழைப்பிதழ்...


அன்பானவர்களே !வணக்கம்.

ஒன்றியச்செயலாளர்கள் பயிலரங்கு நடைபெறும் தகவலைப்  மாநில,மாவட்டப்பொறுப்பாளர்கள் மற்றும்  ஒன்றியத்தில்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  பொறுப்பாளர்களிடமும்  எடுத்துக்கூறி சனிக்கிழமை வரக்கூறுங்கள்.
ஒன்றியத்தின்  ஆசிரியர் - ஆசிரியைகளை அழைத்துவரக்கூறுங்கள்.
குறிப்பேடு,பேனா,
கணினி,அலைபேசி  உடன்  பயிலரங்குக்கு வரக்கூறுங்கள்.

                    ~இணையக்குழு

கற்றலில் குறைபாடு குறித்து பட்டயப்படிப்புகள் தொடக்கம்..

ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி ஒத்திவைப்பு...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் 8 மாவட்டத்தில் சதம் அடித்த வெயில்...

பள்ளிக் கல்வி -2011-12 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4,970 பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது...

ஜாக்டோ ஜியோ ~ ஈரோடு மண்டலம் (நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு மாவட்டங்கள் இணைந்தது)~மே-8 முற்றுகை போராட்டம் குறித்து ஆயத்த ஆலோசனைக் கூட்டம்~ 25.4.18- புதன்கிழமை மாலை 3 மணிக்கு …


ஈரோடு மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட, வட்டார,      வட்டக் கிளை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்களே...

 25.4.18 ம்தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு ஈரோடு சர்வேயர் ஹால் முன்புறம் (ஈரோடு தாலுக்கா அலுவலகம் பின்புறம்) மே-8 முற்றுகை போராட்டம் குறித்து ஆயத்த ஆலோசனைக்  கூட்டம் மற்றும் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னணி மாநில நிர்வாகிகள் கருத்துரை வழங்கவுள்ளனர்.
எனவே அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

                             இப்படிக்கு,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.

பயணக்குறிப்பு:

ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து கார்,பைக் , ஆட்டோவில் செல்பவர்களும் ,ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்பவர்கள். ஈரோடு பன்னீர்செல்வம்பார்க் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி just walk
செய்தால் இக்கூட்ட இடம்  அடையலாம்.

ஆசிரியர் மாணவர் விகிதம் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்..

PF _ GPF __ Rate of interest of the financial year 2018-19...

வேண்டுகோள்~ நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் அன்பான மறவர்களே!மறத்தியரே!! மே 8இல் சென்னையில் ஒன்று கூடுக!!!


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்  என்று வலியுறுத்தி நம்முன்னோடிகள் போராட்டம் தொடங்கியப்பொழுது தமிழகத்தின்  முதலமைச்சர்.மாண்புமிகு. டாக்டர்  எம்.ஜி.ஆர் அவர்கள்.

 ஒன்றுபட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்றப்
பொழுது தமிழகத்தின்  முதலமைச்சர் மாண்புமிகு .ஜானகி இராமச்சந்திரன் அவர்கள்.

 போராட்டம்உச்சபட்ச கொதிநிலையை எட்டியப்பொழுது தமிழகத்தில் மேதகு குடியரசுத்தலைவர்ஆட்சி.தமிழகத்தின் ஆளுநர் டாக்டர்.பி.சி.அலெக்சாண்டர்அவர்கள்.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இல்லாதநிலையிலும் தமிழக ஆளுநரும்,தலைமைச்செயலாளரும் ஏவிய  எல்லாவிதமான அச்சுறுத்தல்களையும் துச்சமென மதித்து ஒன்றுபட்டு போராடி தமிழகத்தின் ஆளுநர் அரசை பணியச்செய்து  போராட்டத்தை அச்சுறுத்திய  தமிழகத்தின்தலைமைச்செயலாளருடன் உடன்பாடு கண்டனர் நம்முன்னோர்.

ஒன்றுபட்டு 1988இல் போராடியதால்  மத்தியஊதியம்,ஒருமாத போனஸ்ஆகியகோரிக்கைகளைதேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பரிசீலிக்கும் என உடன்பாடு 22.07.1988அன்று  கையெழுத்தானது.

தமிழக
மக்களால்தேர்ந்தெடுக்கபட்ட அரசு நம் கோரிக்கைகளுக்கு ஆதரவுநல்கிய மாண்புமிகு. டாக்டர்.கலைஞர் தலைமையில் அமைந்தது.

தமிழக முதல்வர்.டாக்டர்.
கலைஞர்அவர்கள் தனது  தேர்தல் வாக்குறுதியின்படி மத்திய ஊதியம் வழங்கினார்கள்.

இன்றையநாள் வரையிலும் மத்திய ஊதியத்தினை தமிழகத்தின்  ஆசிரியர்களும்,அரசு ஊழியர்களும் பெறுகின்றனர் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் நம்முன்னோர்களின் தியாகம்நிறைந்த போராட்டங்களும்,நம்முன்னோர்களின் போராட்டங்களை ஆதரித்து ஆதரவு போராட்டங்கள்
நடத்தியும், ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மத்தியஊதியம் வழங்கிய டாக்டர்.கலைஞர் அவர்களின் நற்ச் செய்கையுமே  ஆகும். 

இத்தகு போராட்டப்பாரம்பரியமும்,வரலாற்றுப்பெருமையும் கொண்ட நாம் நம் முன்னோர்களை நினைவில்கொண்டு, பொதுச்செயலாளர்.பாவலர்.அய்யா அவர்களின் வழிகாட்டுதலில்  எதிர்வரும் 08.05.18இல்  ஒன்றுகூடுவோம்;
சென்னையை
முற்றுகையிடுவோம்;
வென்றுகாட்டுவோம்.
                   நன்றி.
           ~முருகசெல்வராசன்.